உலகளாவிய வங்கியியல் மற்றும் நிதியியல் மீளாய்வினால் வழங்கப்படும்

Retail Brand of the Year – Sri Lanka 2020’ விருதினை வென்ற Singer

இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer (Sri Lanka) PLC, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உலகளாவிய விருதுகளில் ஒன்றான, பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ‘பூகோள வங்கியியல் மற்றும் நிதியியல் விருதுகள்’ (Global Banking and Financial Awards) இனால் வழங்கப்படும், இலங்கையின் வருடத்திற்கான சில்லறை விற்பனை வர்த்தகநாமம் (Retail Brand of the Year – Sri Lanka 2020) என்ற விருதினை வென்றுள்ளது.

இந்த விருதுகளானது, நிறுவனங்களில் தீர்மானங்களை மேற்கொள்வோர், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் வங்கித்துறையினைச் சேர்ந்தோரால் வாசிக்கப்படும் முன்னணி நிதியியல் தளமான பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ‘உலகளாவிய வங்கியியல் மற்றும் நிதியியல் மீளாய்வு’ இனால் வருடாந்தம் அளிக்கப்படுகின்றது. மேலும் இந்த கௌரவமானது உலகின் பல நிறுவனங்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, இதன் 10 ஆவது பூகோள வங்கியியல் மற்றும் நிதியியல் விருதுகள் 2020 இற்கு விண்ணப்பதாரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இந்த பெருமைமிக்க விருதுகளில் ஏதேனுமொரு பிரிவில் இடம்பெற அவை போட்டியிட்டன.

இலங்கையின் வருடத்திற்கான சில்லறை விற்பனை வர்த்தகநாமம் விருதினை வென்ற முதலாவதும், ஒரேயொரு நிறுவனமும்  Singer (Sri Lanka) PLC ஆகும்.

இந்த உலகளாவிய சாதனை தொடர்பில் கருத்து தெரிவித்த  Singer (Sri Lanka) PLC இன் பிரதான நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன,”உலகளாவிய வங்கியியல் மற்றும் நிதியியல் மீளாய்வு விருதுகள் 2020 இனால் கௌரவிக்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம், இது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கான எங்கள் ஆர்வத்தை எடுத்துக்காட்டுகிறது. இக்காலப்பகுதி அனைத்து வணிகங்களுக்கும் ஒரு சவாலான காலமாக இருந்தது, ஆனால் Singer (Sri Lanka) இனால்  ஒரு குறுகிய காலத்திற்குள் ஒரு திருப்பத்தை நிரூபிக்க முடிந்தது. ஒரு கூட்டு முயற்சியின் முடிவுகளை இன்று நாங்கள் கொண்டாடுவதோடு, வாடிக்கையாளர், நுகர்வோர் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், சிறந்த வாடிக்கையாளர் சேவையில் சிறந்ததை வழங்குவோம். இது எங்கள் தொலைநோக்கு பார்வையின் ஓர் அங்கமாகும்,” என்றார்.

Singer (Sri Lanka) PLC நுகர்வோர் சாதன சந்தையில் முன்னணியில் உள்ளதுடன், நாடு முழுவதும் வளர்ந்து வரும் தனது நுகர்வோருக்கு பரந்த அளவிலான உயர்தர உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்களை வழங்குவதில் புகழ்பெற்றது. இது 430 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள், சிங்கர் 600 க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச புகழ்பெற்ற வர்த்தக நாமங்களைக் கொண்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *