உலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer

இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி உற்பத்தியாளரான Signature Group உடன் கைகோர்த்துள்ளது.

இந்த புதிய பங்குடைமையின் மூலம் Signature சமயலறை அமைப்புகள் மற்றும் தயாரிப்புகளை சிங்கர் நிறுவனம் இலங்கையில் தயாரிக்கவுள்ளது. இந்த ஒத்துழைப்பு இலங்கையில் Signature  வர்த்தகநாமத்தை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது  ஐரோப்பியத்தன்மை, நேர்த்தி, ஸ்டைல் ஆகியவற்றைக் கொண்ட, உயர் தரமான மூலப்பொருட்களினால் தயாரிக்கப்படும் உற்பத்திகளை உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கவுள்ளது.

புதிய பங்குடைமையை அறியப்படுத்தும் பொருட்டு, Singer நிறுவனம் இலங்கையில் Signature இன் புதுமையான தயாரிப்பு வரிசையை முதன்முறையாக Singer Homes, ரத்மலானவில் காட்சிப்படுத்துவதுடன், முதற் கட்டத்தில் மேலும் 30 விற்பனை நிலையங்களுக்கு இதனை விரிவுபடுத்தவுள்ளது.

Singer தனது அதி நவீன Singer தொழிற்சாலை வளாகத்தில் Signature சமையலறை  அமைப்புகளை உற்பத்தி செய்யுமென்பதுடன், Signature Kitchen இன் ஆதரவுடன் இலங்கை வீடுகளின் சமையல் திறனை விரிவுபடுத்த புத்தாக்க யோசனைகளை பயன்படுத்தும். மலேசியாவின் Signature குழுமம் FORBES ASIA Best Under a Billion கௌரவம், 2016 MSWG-ASEAN Corporate Governance Excellence  விருது உள்ளிட்ட பல விருதுகளையும் முன்னைய ஆண்டுகளில் பெற்றுக்கொண்டுள்ளது.

“Signature உடனான இந்த பங்குடைமை குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது உலகத் தரம் வாய்ந்த சமையலறை தீர்வுகளை இலங்கையர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வருவதற்கு வழி செய்துள்ளது. இலங்கையில் பரவலாக அறியப்பட்ட பிரபல வர்த்தகநாமமாக Singer, புகழ்பெற்ற Signature வர்த்தகநாமத்துடன் இணைந்து சமையலறை உற்பத்தியில் நுழைய முழுமையான தயார் நிலையில் உள்ளது,” என Singer Sri Lanka PLC இன் பிரதான நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன தெரிவிக்கின்றார்.

மலேசியாவின் Signature Kitchen, 25 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் மற்றும் 15 நாடுகளில் வலுவான பிரசன்னத்தைக் கொண்டதுடன், சமையலறைகள் மற்றும் அலுமாரிகளில் புதுமையான மற்றும் சமகால ஐரோப்பிய வடிவமைப்போடு கூடிய தயாரிப்புகளை வழங்குவதில் புகழ் பெற்றது. Signature Kitchen ஆனது ஆசிய சந்தைக்கு சமையலறை அமைப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளதுடன், சில்லறை விற்பனை பிரிவுகளிலும் அதன் சிறப்பான செயற்பாட்டைத் தொடர்கிறது.

தரம், செயல்பாடு, வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் ஆகியன Signature Kitchen இல் நன்கு பேணப்படுகின்றது. இது வாடிக்கையாளர்களை  முதன்மையாகக் கொண்டு, முழுமையாக அவர்களது தேவைக்கேற்ற தீர்வுகளை புத்தாக்கத்துடன் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

“இலங்கையில் Singer  இன் நாடு முழுவதுமான பிரசன்னம் மற்றும் உற்பத்தியில் அதன் வலிமையும் இந்த பங்குடைமைக்கான வலுவான பங்காளராக அதனை தகுதி பெறச் செய்துள்ளது. Singer போன்ற வலுவான ஒரு வர்த்தகநாமத்துடன் பணியாற்றுவதில் நாங்கள் பெருமைப்படுவதோடு, இலங்கையர்களுக்கு சமையலறை அமைப்புகளில் சர்வதேச அனுபவத்திற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் இந்த பங்குடைமை தொடர்பில் எதிர்பார்ப்புடன் உள்ளோம். புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலுடன் இணைந்து தொழில்துறையின் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள Singer (Sri Lanka)  உடன் Signature குழு கைகோர்த்து செயற்படுகிறது,” என Signature International, Berhad இன் குழும முகாமைத்துவ பணிப்பாளர், டேன் கீ சூங் குறிப்பிட்டார்.

Singer (Sri Lanka) PLC, 600 க்கும் மேற்பட்ட மின்னணு சாதனங்கள், 1200 வீட்டு உபகரணங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச புகழ்பெற்ற வர்த்தகநாமங்களைக் கொண்டு நுகர்வோர் சாதன சந்தையில் முன்னணியில் உள்ளது. இது 430 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்டதுடன்  இத்துறையில் சிறப்பான விற்பனைக்குப் பின்னரான சேவையை வழங்கும் ஒரு ஆதிக்கம் மிக்க நிறுவனமாக Singer முன்னேறியுள்ளது. கடன் அட்டை சலுகைகள், வாடகை கொள்வனவு மற்றும் வசதியான கட்டணத் திட்டங்களுடன் கூடிய முழுமையான உத்தரவாதங்களுடன் Singer வாடிக்கையாளர்களை ஆதரிக்கின்றது. Singer, உயர் தரமான பல வகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகநாமங்களுக்காக விருதுகளை வென்றுள்ளதுடன், இவை அனைத்துக்கும் மேலாக SLIM-Nielsen மக்கள் தெரிவு விருதுகளில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக Singer, இலங்கை ‘மக்கள் விரும்புகின்ற மிகச் சிறந்த வர்த்தகநாமம்’ ஆக (People’s Brand of the Year) தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *