உள்ளூர் உற்பத்தியாளர் சமூகத்தை மேம்படுத்தி, திறன் மேம்பாட்டு சமூகத்தை வழிநடத்தும் Alumex PLC

1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Alumex PLC ஆனது, இலங்கையின் பன்னாட்டு மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான Hayleys குழுமத்தின் துணை நிறுவனமாகும். இது இலங்கையில் அலுமினிய மூலப்பொருட்களை முழுமையாக ஒருங்கிணைத்த உற்பத்தியாளராகும். 35 ஆண்டுகளுக்கும் மேலான தொழில் நிபுணத்துவத்துடன், கதவுகள், ஜன்னல்கள், வர்த்தகநிலைய முகப்புகள், திரைச் சுவர்கள் மற்றும் தனது அனுமதிப்பத்திரத்தின் கீழ் உள்ள உலகளாவிய புகழ்பெற்ற அலுமினிய தனியுரிம கதவு, ஜன்னல், முகப்பு தொகுதிகள் உள்ளிட்ட ஏனைய விசேட வணிக பயன்பாடுகள் மற்றும் தொகுதிகளின் விரிவான தொகுப்பிற்கான அலுமினிய மூலப்பொருட்களை உருவாக்கி உற்பத்தி செய்து வருகிறது.

பரந்த அளவிலான கட்டடக்கலை, குடியிருப்பு மற்றும் தொழில்துறை Alumex தயாரிப்புகள், தேசிய மற்றும் சில்லறை விநியோக முறை மூலம், வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சர்வதேச தரத்திற்கு இணையான தயாரிப்புகளை Alumex வழங்குகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு, தனது தயாரிப்புகளை Alumex ஏற்றுமதி செய்கிறது.

இலங்கையின் முன்னணி அலுமினிய உற்பத்தியாளரான Alumex PLC ஆனது, Lumin தயாரிப்புகளுக்கான மிகவும் திறமையான மற்றும் சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளர்களை அங்கீகரிக்கும் பிரத்தியேக சமூகமான, Lumin Certified Fabricators Club திட்டத்தை வெற்றிகரமான நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது

Alumex நிறுவனம் 1986 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் உற்பத்தியாளர் சமூகத்தை ஆதரிப்பதிலான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், அலுமினியம் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது பிரீமியம் வர்த்தகநாமமான Lumin மூலம் ஆயிரக்கணக்கான நுகர்வோரின் நம்பிக்கையையும் அது பெற்றுள்ளது. Lumin Certified Fabricators Club ஆனது, வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற சேவை மற்றும் சிறந்த கைவினைத்திறனை வழங்குவதற்காக, சிறப்பான வகையில் மூலப்பொருட்களைக் கொண்ட மற்றும் நன்கு பயிற்சி பெற்ற உற்பத்தியாளர்களை உருவாக்குவதை உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற, அதன் சமீபத்திய புத்தாக்கமான திட்டமானது, Certified Fabricators சமூகத்தை எவ்வித தடையுமின்றி பணியாற்ற உதவுகிறது. அதே நேரத்தில் சந்தையின் போக்குகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய விலைமதிப்பற்ற தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் அது உதவுகிறது. நிகழ்ச்சியின் சிறப்பம்சமானது, வெளி நிறுவனங்களில் இருந்து திறமையான, வளம்பொருந்திய பேச்சாளர்கள் மற்றும் பிரபல தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டு, கேள்வி அதிகரித்து வரும் அலுமினியம் உற்பத்தி துறையில் பயணிப்பதற்கான விலைமதிப்பற்ற ஆலோசனைகளை வழங்கினர். ‘நெருக்கடிகளுக்கு மத்தியில் மேம்பட்ட சாத்தியக்கூறுகளைக் கண்டறிதல்’ உள்ளிட்ட தலைப்புகள் இந்நிகழ்ச்சியில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெடிவெல இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “அலுமினிய வடிவமைப்புத் தொழில்துறையின் மேம்பாட்டுக்கு ஆதரவளிப்பதில் Alumex PLC ஆகிய நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம். எமது விரிவான பயிற்சித் திட்டங்களின் மூலம், நாம் உற்பத்தியாளர்களை தொழில்நுட்ப நடைமுறைகளுடன் அவர்களுக்கு பொருட்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தொழில்முனைவு உணர்வையும் ஏற்படுத்துகிறோம். உரிய அறிவு மற்றும் திறன்களுடன் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதன் மூலம், அவர்களின் தொழில் முனைவுப் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவுகிறோம்.” என்றார்.

25 வருடங்களுக்கும் மேலாக, உள்ளூர் உற்பத்தியாளர்களின் மேம்பாடு மற்றும் அவர்களுக்கு அங்கீகாரமளிப்பதற்காக Alumex தன்னை அர்ப்பணித்துள்ளது. 20,000 இற்கும் மேற்பட்ட திறமையான உற்பத்தியாளர்கள், நிறுவனத்தின் சிறந்த பயிற்சிப் பாடசாலைகளில் பயிற்சி பெற்றுள்ளதோடு, அவர்கள் தற்போது இலங்கையில் மிகவும் திறனான மற்றும் திறமையான கட்டுமானத் துறையை இயக்கி வருகின்றனர். அத்துடன். உலகளாவிய ரீதியில் புகழ் பெற்ற, அலுமினியம் தனியுரிம தொகுதிகள் உள்ளிட்ட எதிர்காலத்திற்கு ஏற்ற அனைத்து வசதிகளையும் கொண்ட, உற்பத்தியாளர்களின் நிலைபேறான விநியோகத்தை உறுதி செய்வதற்காக Alumex அதன் பயிற்சித் திட்டங்களைத் தொடர திட்டமிட்டுள்ளது.

Alumex இன் முதன்மையான வர்த்தக நாமமான Lumin ஆனது, UKAS போன்ற அங்கீகாரம் பெற்ற சுயாதீன ஆய்வகங்களினால் பரிசோதிக்கப்பட்ட தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இலங்கையில் உள்ள ஒரே வர்த்தக நாமமாகும். Lumin தயாரிப்புகள் நாடு முழுவதிலும் உள்ள, விவேகமான நுகர்வோரின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வென்றுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மேம்பட்ட அலுமினிய கதவு மற்றும் ஜன்னல் தொகுதிகளை வடிவமைத்து மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவை, நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள Lumin மையங்களில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். கடந்த காலங்களில் தொடர்ந்து மேற்கொண்டு வந்ததைப் போல, உள்ளூர் சந்தைக்கு எதிர்காலத் தீர்வுகளை வழங்குவதில் இந்த மையங்கள், Alumex இன் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.

தொடர்ச்சியான பயிற்சி செயலமர்வுகள் புதிய தயாரிப்பு வரவுகள் மற்றும் தயாரிப்பு அம்சங்கள் குறித்து தகவல் மற்றும் பயிற்சிகளை Lumin உற்பத்தியாளர்களுக்கு வழங்குகின்றது. இப்பயிற்சித் திட்டங்கள், உற்பத்தியாளர்கள் தங்களது தற்போதைய நிறுவனங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிய மதிப்புமிக்க அறிவை வழங்குவதுடன், அடுத்த கட்டச் சிறப்பை அடைய உதவுகின்றது.

தமது வலுவான சந்தை இருப்பு மற்றும் உற்பத்தியாளர் சமூகத்திற்கான அசைக்க முடியாத ஆதரவுடன், இலங்கையில் மிகவும் நம்பகமான மற்றும் முதல் தர அலுமினிய வர்த்தக நாமமாக Alumex PLC தனது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *