ஒன்லைன் கற்றலுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் ‘Clogard Natural Salt Tab Wasana’

Clogard Natural Salt Tab Wasana – முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு தரக்குறியீடான Clogard இன், டெப் கணனிகளை வழங்கும் நுகர்வோர் ஊக்குவிப்புத் திட்டம், எதிர்வரும் 2021, செப்டம்பர் 01 முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம், அதில் பங்குபற்றுவோர், ஒன்லைன் கற்றலுக்கு உதவியளிக்கும் வகையிலான, புத்தம் புதிய Tab கணனிகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, ஒன்லைன் கற்றலானது மாணவர்களுக்கு மிகவும் சாத்தியமான மற்றும் நடைமுறையானதுமான கல்வி முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒன்லைன் கற்றல் திட்டமானது, தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றபோதிலும், கணனி மற்றும் டெப் போன்றவற்றை பெறுவதில் காணப்படும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக, மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு ஒன்லைன் கற்றலைத் தொடர்வது அது ஒரு தடையாக காணப்படுகின்றது.

புதிய 120 கிராம் கொண்ட Clogard Natural Salt (Tab Wasana promo pack) பற்பசை பொதியை கொள்வனவு செய்யும் எந்த ஒருவரும், ஒரு புத்தம் புதிய டெப் இனை வெல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த பொதியானது, நாடு முழுவதும் கிடைக்கிறது. ஒவ்வொரு Clogard இயற்கை உப்பு கொண்ட 120 கிராம் பொதியும் (டெப் அதிர்ஷ்ட ஊக்குவிப்பு பொதி), ஆறு இலக்கங்களைக் கொண்ட குறியீட்டைக் கொண்டிருக்கும். குறித்த இரகசிய குறியீட்டை தங்களின் அல்லது தனது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்துடன் 8866 எனும் இலக்கத்திற்கு SMS மூலம் அனுப்புமாறு Clogard நுகர்வோரை கேட்டுக்கொள்கிறது. (TAB <இடைவெளி> XXXXXX <இடைவெளி> NIC இலக்கம் என டைப் செய்து 8866 இற்கு அனுப்பவும்). வெற்றியாளர்கள் செப்டம்பர் 01 முதல் நவம்பர் 30 வரை தினமும் தெரிவு செய்யப்படுவார்கள்.

புதிய ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பில் Clogard நிறுவன சந்தைப்படுத்தல் முகாமையாளர் ரமில பெனாண்டோ கருத்துத் தெரிவிக்கையில், “ஒன்லைன் கற்றலானது தற்போது கல்வியோடு ஒன்றிணைந்த ஒரு அம்சமாக மாறிவிட்டது. ஆயினும் அனைத்து மாணவர்களும் கணனிகள் மற்றும் டெப்லெட்டுகளை அணுகுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஒன்லைன் கற்றலை நோக்கி செல்லும் போது பாரிய பல சவால்களை எதிர்கொள்கின்றனர். Clogard ஆனது, உண்மையான இலங்கை தரக்குறியீடாக இருப்பதன் காரணமாக, தற்போது நடைமுறையில் உள்ள இலத்திரனியல் கற்றல் காலத்தில் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புகின்றது. டெப் அதிர்ஷ்ட பிரசாரமானது, சிறுவர்களின் உடனடி கல்வித் தேவைகளுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், டிஜிட்டலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகில், அவர்களுக்குத் அவசியமான தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்பான அறிவை பெறவும் அவர்களுக்கு உதவுகின்றது.

Clogard Natural Salt (இயற்கை உப்பு கொண்ட) தயாரிப்பானது, Clogard இனது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பற்பசை வகையாகும். இது ஈறுகளைப் பாதுகாக்கவும், பற்களை வலுப்படுத்தவுமாக, இயற்கை உப்பின் சக்தியுடன் வருகிறது. உப்பு பல்வேறு நோய்களைத் தடுக்கும் இயற்கையான கிருமிகொல்லி எனும் பண்பைக் கொண்டுள்ளதனை அடிப்படையாகக் கொண்டு, தலைமுறை தலைமுறையாக வாயை கொப்பளிப்பதற்கு பயன்படுத்தும் பொருளாக இருந்து வருகிறது.

1992ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, Clogard முழுமையான வாய்ச் சுகாதார பராமரிப்பு தீர்வாக மாறியுள்ளதுடன், முழுக் குடும்பத்தையும் பற் குழிகளிலிருந்து பாதுகாப்பளித்து வருகிறது. Clogard இனது, புதிய இயற்கை உப்பு பற்பசை வகையானது, இயற்கை உப்பு, செயற்பாட்டு துத்தநாகம், புளோரைட் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன், ஈறுகளையும், பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அத்துடன், கிருமிகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் சிறந்த வாய்ச் சுகாதாரத்தையும் உறுதி செய்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *