கிறிஸ்மஸ் உணர்வைத் தூண்டும் பெல்வத்தையின் ஆக்கபூர்வமான சமையல் போட்டி!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு வரும் முன்னணி பால் உற்பத்தியாளரும், ஒவ்வொரு இலங்கையருக்கும் நன்கு பரீட்சயமான பெயரான Pelwatte Dairy Industries, மகிழ்ச்சியான, வண்ணமயமான, சுவையான நத்தாரைக் கொண்டாடும் வகையில், கடந்த டிசம்பர் மாதத்தில் சமையல் போட்டியொன்றை நடாத்தியிருந்தது. அதன் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களிடையே “Most Creative Dish” (மிகவும் ஆக்கபூர்வமான உணவு) எனும் தலைப்பில், நத்தாரை மையப்படுத்தி இப்போட்டியை நிறுவனம் நடாத்தியிருந்தது. இப்போட்டியானது கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு, பங்கேற்பாளர்களிடமிருந்து 2021 டிசம்பர் 31 வரை அவர்களது சமர்ப்பிப்புகளை மேற்கொள்ளுமாறு அறிவித்திருந்தது. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியவாறு, பெல்வத்தையின் பால் சார்ந்த தயாரிப்புகளைப் பயன்படுத்தி தங்கள் திறமைகளைப் வெளிக்காட்ட இப்போட்டி பலருக்கும் வாய்ப்பாக அமைந்தது.

Pelwatte முகநூல் பக்கத்தில் இந்த சமர்ப்பிப்புகளை மேற்கொள்ளும் வகையில் இடம்பெற்ற இப்போட்டியில் நூற்றுக்கணக்கான இனிப்பு வகைகள் மற்றும் கிறிஸ்மஸ் எண்ணக்கருவில் அமைந்த உணவுகளின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. Pelwatte யின் பல்வேறு தயாரிப்புகளைப் பயன்படுத்தி தங்கள் ஆக்கபூர்வமான மற்றும் இனிப்பு நிறைந்த தங்கள் இனிமையான மனதை பங்கேற்பாளர்கள் வெளிக்காட்டினர். கிறிஸ்மஸ் மரம் முதல் கிறிஸ்மஸ் கேக் வரை பல்வேறு வடிவில் அமைந்த தின்பண்டங்கள் மற்றும் நத்தார் தாத்தாவிற்கு பிடித்த குக்கீ மற்றும் பால் என பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களின் திறமைகளைக் காண்பித்தனர். சில பங்கேற்பாளர்கள் தங்கள் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட கிறிஸ்மஸ் அலங்காரங்களுடன் அதைக் காட்சிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நோக்கும் புதிய வருடம் மற்றும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் காரணமாக டிசம்பர் மாதம் என்பது ஒரு சிறப்பு வாய்ந்த மாதமாகும். எம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் திடீரென அலங்காரங்கள், விளக்குகள், கரோல்கள் மற்றும் நிச்சயமாக உணவுகளால் நிரம்பியிருப்பதை இம்மாதத்தில் எம்மால் காணலாம். குறிப்பாக இந்த கொண்டாட்ட காலத்தில், கிறிஸ்மஸ் எண்ணக்கருவில் அமைந்த பல்வேறு செயல்பாடுகள் இடம்பெறுவதன் காரணமாக, அனைவரிடையேயும் கொண்டாட்ட உணர்வுகளை அது வெளிப்படுத்த உதவுகிறது. கடந்த ஓரிரு வருடங்களாக உணவுகளைப் பகிர்ந்து கொள்ளும் எமது எண்ணம் ஆபத்தாக இருந்ததன் காரணமாக, தற்போது முன்னெடுக்கப்பட்ட இந்த பிரசார நடவடிக்கையானது, நாம் அனைவரும் விரும்பும் மற்றும் அனுபவிக்கும் கிறிஸ்மஸ் உயிர்நாடியை மீண்டும் உயிர்ப்பிக்க உதவியது.

இந்த பிரசார நடவடிக்கை தொடர்பில் Pelwatte Dairy Industries நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான அக்மல் விக்ரமநாயக்க தெரிவிக்கையில், “Pelwatte Dairy Industries என்பது உண்மையான இலங்கையரின் முயற்சி என்பதுடன், அது தனது தயாரிப்புகள் மூலம் சமூகங்களை ஒன்றிணைக்கிறது. நீங்கள் இதைப் பற்றி யோசித்துப் பார்த்தீர்களானால், ஒவ்வொரு பண்டிகையின் போதும் பல குடும்பங்களுடன் அவர்களின் உணவு மேசைகளில் நாம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம். கிறிஸ்மஸ் மற்றும் அதன் அற்புதமான பருவகால மகிழ்ச்சியும் இதற்கு விதிவிலக்கானதல்ல. அந்த வகையில் அது உண்மையான இலங்கை வர்த்தக நாமம் என்பதில் எம்மை பெருமை கொள்ளச் செய்கிறது.” என்றார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “Pelwatte Dairy யினது நம்பிக்கை, தரம், தொடர்பு ஆகிய அது கொண்டுள்ள தூண்களை மையப்படுத்தாமல், அது எந்தவொரு முயற்சியையும் எடுப்பதில்லை. இந்த தூண்களை, Pelwatte அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மட்டுமல்லாது அதன் பங்குதாரர்கள், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கூட வழங்க வேண்டியது கடமையாகவும் சேவையாகவும் கருதுகிறது.” என்றார்.

மேற்கூறியவற்றிற்கு இணங்க, இப்போட்டியானது, பங்கேற்பாளர்களுக்கும் பால் சார்ந்த பொருட்களுக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக அமைந்திருந்தது. பங்கேற்பாளர்கள் ஒன்லைனில் மாத்திரமல்லாது, Pelwatte Dairy இன் Facebook பக்கத்திலும் காணப்படுகின்ற, பல்வேறு புதிய சமையல் வகைகள் மற்றும் உணவு வகைகளை முயற்சித்து தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். சில பங்கேற்பாளர்கள் கிறிஸ்மஸ் சுவையுடனான குலாப் ஜாமூன் போன்ற தங்களுப்பு பிடித்த தெற்காசிய இனிப்பு வகைகளின் வித்தியாமான முயற்சிகளை உள்ளடக்கிய இனிப்பு வகைகளை உருவாக்க முயற்சித்தனர். அனைத்து உணவுகளும் பெல்வத்தை தயாரிப்புகளைக் கொண்டு தயாரிக்க ஊக்குவிக்கப்பட்டதுடன், பெல்வத்தை தயாரிப்புகள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகளை, குறித்த பெல்வத்தை தயாரிப்புகளுடன் தங்கள் உணவின் படத்தையும் தெளிவாகவும் ஆக்கபூர்வமாகவும் பதிவேற்றம் செய்ய அவர்கள் ஊக்குவிக்கப்பட்டதுடன், அவர்களின் கலைப் படைப்புகளையும் இதில் காண்பிக்கவும் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். பங்கேற்பாளர்கள் இவ்விடயங்களை கடைப்பிடிக்கும் நிலையில், அவர்கள் பரிசுகளை பெற தகுதி பெற்றனர். அதற்கமைய பரிசுகளை வென்றோர்; காவிந்தி அமாஷா, விக்ரம் மேனன், ஷாலி மதுஷி, பர்ஹா பானா, மாலினி திசாநாயக்க, பாத்திமா முர்ஷியா, அனோமா செனவிரத்ன, சுரங்கி ஹெனதீர, யுவந்தி கோரலகே மற்றும் உதாரி ஜயசேகர ஆகியோராகும்.

பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த ‘படைப்பாற்றல் மிக்க உணவை’ (“creative dish”) தயாரித்து தங்களது ஆர்வத்தை தெளிவாக வெளிப்படுத்தியதோடு மாத்திரமல்லாது, அதை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து பகிர்வதில் அவர்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதன் மூலம் அனைவரும் ஈடுபாடு காட்டும் ஒரு செயற்பாடாக இது அமைந்தது. இதன் மூலம் நம்பிக்கை, தரம், தொடர்பு ஆகிய பெல்வத்தையின் தூண்கள் வெளிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *