சலவை அம்சத்தில் கட்டுப்டியாகும் விலை மற்றும் உயர் தரமான தயாரிப்பாக Diva Fresh 700 கிராம் பொதி புரட்சி செய்கிறது

வேலைப் பளு மிக்க வாழ்க்கை முறைகள் மற்றும் மாறிவரும் நுகர்வோர் நடத்தைகள் ஆகியவற்றால், சலவைத் தூள் என்பது இன்றைய வீடுகளில் அவசியம் இருக்க வேண்டியதும், பெரும்பாலும் அன்றாட பலசரக்கு கடை கொள்வனவுப் பட்டியலில் உள்ள ஒன்றாகவும் காணப்படுகின்றது. இலங்கையர்கள் பல்வேறு விலை மட்டத்தில் உள்ள பரந்த அளவிலான சலவைத் தூள்களை தெரிவு செய்யும் வசதிகளை கொண்டுள்ளனர். ஆயினும், தற்போதைய பொருளாதார சவால்களால், மக்கள் தமக்கு ஏற்ற வகையிலான, துணிகளை சுத்தமாக வைத்திருக்க பயன்படுத்தும் கட்டுப்படியான விலையிலுமான சிறந்த சலவைப் பொருட்களை நாடுகின்றனர்.

Diva Fresh (திவா ஃப்ரெஷ்) என்பது அனைத்து சமூக மட்டத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் பிரபலமான சலவைத் தூளாகும், மேலும் இது பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. அதன் 3-இன்-1 கலவையில், Perfume Magic அம்சம் காணப்படுகின்றது. அத்துடன் Fibre Clean தொழில்நுட்ப அம்சத்துடன் நீண்ட கால நறுமணத்தை வழங்குவதோடு, ஆடைகளுக்கு சிறந்த தூய்மை மற்றும் பிரகாசத்தை வழங்கும் Optical Brighteners அம்சத்தையும் இது கொண்டுள்ளது. Diva Fresh 3-in-1 ஆனது, Diva Fresh Rose, Purple Lotus & Lavender, Araliya, Jasmine, Sepalika உள்ளிட்ட வகைகளில் கிடைக்கிறது. Diva Fresh சலவைத் தூளானது, சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மிக உயர்ந்த தரத்தை கடைப்பிடித்து தயாரிக்கப்படுகிறது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 700 கிராம் Diva Fresh பொதியானது, சந்தையில் கிடைக்கும் 1 கிலோ கிராம் பொதியின் அளவோடு ஒப்பிடும் போது, ​​அதன் கட்டுப்படியாகும் விலை காரணமாக மிகவும் விரும்பப்படும் சலவை உற்பத்தியாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த Diva Fresh தயாரிப்புகளும் அதிக அளவில் சுத்தம் செய்யும் தயாரிப்பாக இருப்பதனால், குறிப்பாக 700 கிராம் பொதியையும் மிகவும் கட்டுப்படியான விலையில் கிடைப்பதனால், Diva Fresh நுகர்வோர் மனப்பூர்வமான தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். நாடு கடுமையான பொருளாதார சவால்களுக்கு உட்பட்டுள்ள இவ்வேளையில், மக்களின் வாழ்க்கையில் அதிக சுமை ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், பணத்திற்கான உயர் மதிப்பை வழங்கும் நோக்கில், திவா அதன் 700 கிராம் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Hemas Manufacturing நிறுவனத்தின் Category Manager அனுஷ்கா சபாநாயகம் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “Diva Fresh சலவைத் தூள் வகைகள் எப்போதும் இலங்கையர்களின் இதயங்களோடு நெருக்கமாக இருந்து வந்துள்ளது. மாறிவரும் நுகர்வோரின் நடத்தைகளை அறிந்து, புதிய மாறுபட்ட வகைகள் மற்றும் பொதியின் அளவுகளை நுகர்வோருக்காக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை இவ்வர்த்தகநாமம் உறுதி செய்துள்ளது. Diva Fresh 700 கிராம் பொதியை அறிமுகப்படுத்தியமை தொடர்பில், நாம் நுகர்வோரிடமிருந்து சிறந்த கருத்துகளைப் பெற்றுள்ளோம். அத்துடன் இது ஒரு குறுகிய காலத்தில் சலவைத் தூள் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகநாமத்தின் மிகவும் கட்டுப்படியான விலையில் ஒரு பொதியை அறிமுகப்படுத்துவது தொடர்பான சரியான நேரத்திலான நடவடிக்கை இதுவாகும். Diva Fresh வகைகள் தொடர்ந்தும் பல்லாண்டுகளுக்கு இலங்கையர்களின் சலவைத் தேவைகளை மேம்படுத்தி, சேவைகளை வழங்கும்.” என்றார்.

சலவைத் தூளை தெரிவு செய்யும் போது, ​​நுகர்வோர் தேடும் 3 விடயங்களை கருத்தில் கொள்ளுகின்றனர். இத்தயாரிப்பு அழுக்கை நீக்குகிறதா, துணிகளுக்கு பிரகாசத்தை வழங்குகிறதா, புதிய வாசனை வழங்குகிறதா ஆகியனவே அவையாகும். Diva Fresh பாவனையாளர்களின் கருத்து யாதெனில், சலவைத் தூள் ஒன்றிலிருந்து தாங்கள் எதிர்பார்க்கும் விடயங்களின் அடிப்படையில் அவர்கள் இந்த உற்பத்தியின் நன்மைகளில் திருப்தி அடைந்துள்ளனர். Diva Fresh யில் உள்ள Fibre Clean Technology, Optical Brighteners  அம்சங்கள் ஆடைகளுக்கு உச்சபட்ச தூய்மை மற்றும் பிரகாசத்தை உறுதியளிக்கிறது. Diva Fresh அதன் ஒவ்வொரு வகையிலும் தனித்துவமான இனிமையான வாசனை திரவியங்களை கொண்டிருப்பது, அதன் உற்பத்திகள் நுகர்வோர் மத்தியில் உயர்வான இடத்தைப் பிடிப்பதற்கு மற்றொரு காரணமாகும்.

சிறந்த சலவை பராமரிப்புத் தீர்வுகளை வழங்கும் வளமான வரலாற்றைக் கொண்ட ஒரு வர்த்தக நாமமான திவா, எப்போதும் நுகர்வோரின் நாடித்துடிப்பை அறிந்து, பணத்திற்கான உயர் தர மதிப்பை தொடர்ந்தும் வழங்கி வருகிறது. நுகர்வோர் தேவைகளுடன் தொடர்ந்து பரிணமித்து வரும் Diva Fresh தயாரிப்பினால் வழங்கப்படும் புத்தாக்கமான மற்றும் சரியான நேரத்திலான சலவைத் தீர்வுகள் மூலம் இலங்கையர்களின் இதயங்களை கவருவதற்கு இவ்வர்த்தகநாமத்தினால் முடிந்துள்ளது.

Hemas Consumer பற்றி

வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands ஆனது, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட வர்த்தக நாமங்கள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம் நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பு வகைகளின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிநபர் பராமரிப்புத் தீர்வுகளை வாழ்க்கையில் கொண்டு வர முயற்சிக்கிறது. வளர்ச்சியின் மூலம் ஈர்க்கப்பட்ட புத்தாக்கம் கொண்ட குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த, சந்தையில் முன்னணியான மற்றும் விருது பெற்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்காக நிறுவனம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்குவதன் மூலமும், நம்பகமான கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலமும்  சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலமும் அது நாடு முழுவதிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையைத் தொடுகிறது.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *