சாதனைகள் நிறைந்த ஆண்டைக் கொண்டாடும் பெல்வத்தை

Pelwatte Dairy Industries Pvt ltd ஆனது, பால் பதப்படுத்துதல், கால்நடை தீவனம், பால் உற்பத்திகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமாகும். இந்நிறுவனம் சமீபத்தில் தனது பணியாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வொன்றை நடத்தியிருந்தது. பெல்வத்தை நிறுவன ஊழியர்களின் கடின உழைப்பை மதிப்பிடுவதும் பாராட்டுவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது. அத்துடன், பெல்வத்தை நிறுவனத்தின் பால் கொள்முதல் பிரிவின் குறிப்பாக, அதன் களப் பணி ஊழியர்கள் மற்றும் பின்புல பணி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையிலான கொண்டாட்ட நிகழ்வும் இதன்போது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பல முக்கிய சாதனைகள் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் முன்வைக்கப்பட்டன.

கடந்த வருடத்தில் நிறுவனம் எட்டிய ‘150 ஆயிரம் சாதனையாளர்கள்’ எனும் குறிப்பிடத்தக்க சாதனை மைல்கல்லை எட்டியமை தொடர்பில் பெல்வத்தை டெய்ரி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஆரியசீல விக்ரமநாயக்க, இங்கு விளக்கமளித்தார். தினமும் 150,000 லீற்றர் பாலை சேகரிக்கும் நிறுவனத்தின் ஆற்றலை இது சுட்டிக்காட்டுகிறது. இது பெல்வத்தை நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்களான GM, DGM, CFO, பணிப்பாளர் திலக் பியதிகம ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றியதோடு, பெல்வத்தை நிறுவனத்தின் எதிர்காலம் தொடர்பான கற்பனையின் ஆற்றல் தொடர்பில் அவர் இங்கு விளக்கமளித்தார்.

அத்துடன், நிறுவனத்தின் எதிர்காலத்திற்கான திசை மற்றும் முன்னோக்கிச் செல்லும் அதன் முதன்மைப் புள்ளிகளான நாளாந்தம் பால் உள்ளெடுத்தல், ஏற்றுமதி, புதிய தயாரிப்புகளை மேம்படுத்துதல், பால் சேகரிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் பாலை அடிப்படையாகக் கொண்டு நாட்டை தன்னிறைவுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆரியசீல விக்ரமநாயக்க கருத்துகளை வெளியிட்டார்.

கடந்த வருடத்தில் பெல்வத்தை நிறுவன ஊழியர்களால் பல்வேறு முக்கிய சாதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாறான சாதனைக்கு சொந்தமானவர்கள், இந்த ஊழியர் கூட்டத்தில் உரிய அங்கீகாரம் மற்றும் பாராட்டைப் பெற்றனர். பால் கொள்முதல் தொடர்பில் அதிக அர்ப்பணிப்பு செய்த மற்றும் பால் கொள்முதல் தொடர்பான நடவடிக்கைகளுக்கான உதவிச் சேவைகளில் ஈடுபட்ட, ஆகிய இரு விடயங்களிலுமான ஊழியர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக பால் சேகரிக்கப்பட்ட பால் சேகரிப்பு மையம், அதிக தரமான பால் சேகரிக்கப்பட்ட பால் சேகரிப்பு மையம், நிறுவனத்தின் SAPP திட்டத்தை பயனுள்ள வகையில் செயற்படுத்திய பால் சேகரிப்பு மையம், மிகவும் அர்ப்பணிக்கப்பட்ட பால் சேகரிப்பு மைய பொறுப்பதிகாரி,  சிறந்த பால் சேகரிப்பு மையம் ஆகியன இங்கு வழங்கப்பட்ட சான்றிதழ்களில் சிலவாகும்.

Pelwatte Dairy Industries ஆனது உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் உயர்தர பால் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நிறுவனமாகும். பால் உற்பத்திகளுக்காக வெளிநாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் எப்போதும் கவனம் செலுத்தி வரும் பெல்வத்தை நிறுவனம், அதிநவீன தொழில்நுட்பம், தரம் தொடர்பில் உச்ச கவனம், தொழில்துறையில் பரந்த அனுபவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, அதன் வாடிக்கையாளர்களின் மிகுந்த நம்பிக்கை மற்றும் திருப்தியை பெற்றுள்ள பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது.

# ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *