சிறந்த சில்லறை பங்குதாரர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கி கௌரவித்த HUTCH – FriMi Mastercard உடன் பிரத்தியேக சில்லறை விற்பனையாளர் வெகுமதி அட்டை வெளியீடு

இலங்கையின் முன்னோடியான கையடக்கத் தொலைபேசி தொலைத்தொடர்பாடல் நிறுவனமான HUTCH, 2023 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் தனது முக்கிய சில்லறை பங்குதாரர்களின் சிறப்பான செயற்றிறனை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையிலான, மிகவும் எதிர்பார்ப்புமிக்க ‘கௌரவாபிமான’ சில்லறை விற்பனையாளர் விருது வழங்கும் விழாவை அண்மையில் நடத்தியிருந்தது. நாட்டின் சவாலான சூழலுக்கு மத்தியில் அவர்களது அளப்பரிய முயற்சிகள் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக, நாடு முழுவதும் மாவட்ட ரீதியாக, சிறப்பாக செயற்பட்ட சில்லறை வணிக கூட்டாளர்களுக்கு தங்க நாணயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறந்த சில்லறை பங்குதாரர்களை அங்கீகரித்த இந்நிகழ்வு, சிறப்பாகச் செயற்பட்ட விநியோகஸ்தர் பங்காளிகள் மற்றும் அவர்களது முன்னணி சில்லறை பங்குதாரர்களை தொடர்ச்சியாக பேணி வந்த அவர்களது ஊழியர்களையும் HUTCH இந்நிகழ்வில் பாராட்டி கௌரவித்தது.

இந்நிகழ்வில் FriMi – MasterCard உடன் இணைந்து தமது சில்லறை விற்பனையாளர் கூட்டாளர் வலையமைப்பிற்கான பிரத்தியேக இணை-வர்த்தகநாம முத்திரை கொண்ட, சில்லறை விற்பனையாளர் வெகுமதி அட்டையையும் HUTCH வெளியிட்டது. இந்த புத்தாக்கமான அட்டையானது, அதன் சில்லறை விற்பனையாளரின் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகைகளை வைப்பிலிடுவதற்கான வசதியுடன், பல விதமான நன்மைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. HUTCH – FriMi MasterCard இன் அறிமுகமானது, அதன் சில்லறை வர்த்தக பங்காளிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களின் வளர்ச்சி மற்றும் வெற்றியை ஊக்குவிப்பதற்கும் அதன் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், HUTCH அதன் நன்மைகளை வழங்குவதற்கான புதிய உலகத்திற்கான தொடக்கமாகும்.

HUTCH Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா இங்கு உரையாற்றுகையில், “இது இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஆரம்பத்தை குறிக்கிறது. கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத மூன்று வருட சவால்களுக்குப் பின்னரான, கடினமான காலங்களில் எமது செயற்பாடுகளைத் தக்கவைப்பதில் விதிவிலக்கான செயற்றிறன், அர்ப்பணிப்பு, மீளெழுச்சி ஆகியவற்றை வெளிப்படுத்திய எமது சம்பியன்களுடன் இங்கு கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். காலம் மேம்படும் போது, ஒன்றாக இணைந்து, புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, எமது வணிகங்களை மேம்படுத்த எமக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. வளர்ந்து வரும் எமது வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக எமது கூட்டாளர்களுக்கு எமது ஆதரவைத் தொடர்ந்து வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்.

HUTCH Sri Lanka விற்பனைப் பொது முகாமையாளர் தரிந்து விஜேரத்ன இந்நிகழ்வு பற்றி தனது கருத்துகளைத் தெரிவிக்கையில், “HUTCH கெளரவாபிமான விற்பனையாளர் விருது வழங்கும் விழாவை வெற்றிகரமாக நடத்தியதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். எமது வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய எமது சில்லறை விற்பனையாளர் கூட்டாளர்களுடன் நாம் கட்டியெழுப்பியுள்ள ஒப்பற்ற உறவுக்கு இது ஒரு சான்றாகும். இந்த இக்கட்டான காலத்திலும் அவர்கள் வழங்கிய விற்பனை சாதனைகளின் சிறந்த பங்களிப்புகளை நாம் அங்கீகரித்து கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எமது விற்பனைப் பங்காளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, எதிர்வரும் 4 மாதங்களில் ஆரம்பிக்கும் இதன் இரண்டாவது தொடரானது, உற்சாகமான பந்தயமாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்..” என்றார்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *