சிலாபம் புனித ரோச்சஸ் கல்லூரிக்கு கணனிகளை நன்கொடையாக வழங்கிய AMW மற்றும் Yamaha OBM

Yamaha Outboard Motors (OBM) உடன் இணைந்து Associated Motorways (Private) Limited (AMW) நிறுவனமானது சிலாபம், அம்பகந்தவிலவில் உள்ள புனித ரோச்சஸ் கல்லூரிக்கு (St. Roches College) 10 கணனிகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நிகழ்வானது, கல்விக்கு ஆதரவளிப்பதற்கும், பல ஆண்டுகளாக தங்களுக்கு ஆதரவளித்த சமூகங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்குமான AMW இன் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

Yamaha Outboard Motors நிறுவனத்திற்கு அம்பகந்தவில சமூகத்தினர் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்த முயற்சிக்காக, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பாடசாலைகள் தொடர்பில் கவனமாக பரிசீலித்த பின்னர் புனித ரோச்சஸ் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. கணனிகளை நன்கொடையாக வழங்குவதற்கு மேலதிகமாக, கல்லூரியின் கணனிக் கூடம் முழுமையாக செயற்படுவதை உறுதி செய்யும் வகையில், அது தொடர்பான பழுதுபார்ப்புகளை முன்னெடுத்து, அனைத்து மின்சார தொடர்புகள் மற்றும் இணைப்புகளையும் AMW நிறுவனம் சீர் செய்ய நடவடிக்கை எடுத்திருந்தது. பாடசாலையின் தேவைகளுக்கு ஏற்றவாறு அவசியமான அனைத்து அத்தியாவசிய மென்பொருட்களும் கணனிகளில் முழுமையாக இணைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அவை மாணவர்களின் கல்வி, ஆராய்ச்சி, கற்றலுக்கு அவசியமான விடயங்களை அணுகுவதற்கான திறனை கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.

AMW இன் முக்கிய உறுப்பினர்களான Yamaha Sri Lanka தலைவர் Shusaku Sato, Yamaha OBM விற்பனைத் தலைவர் ஜேசுமணி தமேல், தகவல் தொழில்நுட்ப பொது முகாமையாளர் லிலான் திஸாநாயக்க, Associated Motorways (Pvt) மனிதவளத் தலைவர் ஹர்ஷனி ரணசிங்க உள்ளிட்ட AMW இன் முக்கிய பிரமுகர்கள், புனித ரோச்சஸ் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் பாடசாலைக்கு கணனிகள் கையளிக்கப்பட்டன.

உள்நாட்டு வாகனத் துறையில் 75 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ள AMW, சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்குமான அதன் உறுதிப்பாட்டை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நன்கொடையானது அவர்களின் சமூக ஈடுபாடு மற்றும் ஆதரவின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லைக் குறிக்கிறது. இது இலங்கைக்கு சாதகமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது. நிறுவனம் எங்கு செயற்படுகிறதோ அங்கெல்லாம் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் தனது நோக்கத்துடன் இணைந்தவாறு, எதிர்காலத்தில் இது போன்ற மேலும் பல முன்முயற்சிகளை மேற்கொள்ள AMW எதிர்பார்க்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *