தனது முதலாவது கிளையை யாழ்ப்பாணத்தில் திறப்பதன் மூலம் நிதித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் First Capital

ஜனசக்தி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான First Capital Holdings PLC, யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில் அதன் முதலாவது கிளையை திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கின்றது. இது யாழ்ப்பாண மக்களுக்கு மூலதன சந்தை தயாரிப்புகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடும்படியான படிக்கல்லாகும். முதலீட்டு துறையில் நான்கு தசாப்த பாரம்பரியத்துடன் திகழும் First Capital, இணையற்ற நிபுணத்துவம், பல்வேறு வகையான நிதித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை இப்பிராந்தியத்திற்கு கொண்டு வரவுள்ளது.

ஜனசக்தி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரமேஷ் ஷாஃப்டர் இது தொடர்பில் தெரிவிக்கையில், “எமது இதயங்களில் ஒரு விசேட இடத்தைப் பிடித்துள்ள யாழ்ப்பாணத்தில் எமது கால்தடத்தை பதிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நீண்ட காலமாக இப்பிராந்தியத்தில் நம்பகமான பெயராக ஜனசக்தி இருந்து வருகிறது. அந்த வகையில் First Capital மூலமான யாழ்ப்பாணத்தில் எமது விரிவாக்கமானது, மூலதனச் சந்தையின் திறனை மேம்படுத்துவதன் மூலம் முன்னேற்றம் மற்றும் செழிப்பை வளர்ப்பதற்கான எமது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. First Capital இன் அறிமுகம் மூலம், எமது விரிவான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் இப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக செயற்படும் எனும் நம்பிக்கையில் நாம் உறுதியாக உள்ளோம். நேர்மை மற்றும் தொழில்தர்ம கொள்கைகளை கடைப்பிடிக்கும் குழுவாக நாம் இருந்து வருவதோடு, ஒத்துழைப்பை வளர்த்து, மரியாதைக்கு முன்னுரிமை அளித்து, செயற்திறன் சார்ந்த திட்டங்களில் வெற்றி பெறுகிறோம். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் கலாசாரத்தை நிலைநிறுத்துகிறோம். இந்த முக்கிய மதிப்புகள் எமது சேவையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கும் என்பதை உறுதியளிக்கிறோம்.” என்றார்.

இந்த யாழ்ப்பாணக் கிளைத் திறப்பானது, முதலீட்டு வங்கித் துறையில் முன்னோடியாக First Capital இன் நிலையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இப்பிரதேசத்தில் பௌதீக ரீதியாக தனது இருப்பை நிலைநிறுத்தும் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து (CBSL) உரிமம் பெற்ற வங்கி அல்லாத முதலாவது முதன்மை முகவர் நிறுவனம் எனும் பெருமையையும் பெற்றுக்கொள்கிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, முதலீட்டாளர்களுக்கும் மாறும் நிதி வாய்ப்புகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மைல்கல்லின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி First Capital இன்பிரதம செயற்பாட்டு அதிகாரி தரூஷ ஏகநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்தில் First Capital இன் முதலாவது கிளையின் திறப்பு விழாவானது, இப்பிராந்தியத்தின் நிதித் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. நிபுணத்துவ வழிகாட்டலை வழங்குவதன் மூலம், பல்வேறு வகையான மூலதன சந்தை தயாரிப்புகளுக்கான அணுகலை எளிதாக்குகிறது. எமது கிளையின் மூலம், முதலீட்டாளர்கள் பாரம்பரிய முதலீட்டு வழிகளைத் தாண்டி, பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆலோசனைகளிலிருந்து பயனடையவும் முடியும்.” என்றார்.

முன்னுதாரணமான சேவைகள், மூலதனச் சந்தைகளில் விருது பெற்ற நிதி நிபுணத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் நெறிமுறையான நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காகப் புகழ்பெற்று விளங்கும் First Capital ஆனது, இலங்கை மத்திய வங்கி (CBSL), இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC), கொழும்பு பங்குச் சந்தை (CSE) ஆகியவற்றினால் ஒழுங்குபடுத்தப்பட்ட, LRA “A” கடன் தரப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இந்நிறுவனம் அரசாங்கப் பத்திரங்கள் (Government Securities), அலகு அறக்கட்டளை நிதிகள் (Unit  Trust Funds), தனிப்பட்ட  சொத்து முகாமைத்துவம் (Private Wealth Management), வணிக கடன் (Corporate Debt), வணிக ஆலோசனை (Corporate Advisory) மற்றும் பங்குத் தரகு (Stock Brokering) உள்ளிட்ட விரிவான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. தனது முழுமையான ஆராய்ச்சிப் பிரிவின் ஆதரவுடன், தகவல் அறிந்த முதலீட்டு முடிவுகளை எடுப்பதில் தனிநபர்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதற்கு First Capital தன்னை அர்ப்பணித்துள்ளது.

‘முதலீட்டு வங்கித் துறையில் மிகவும் மதிப்புமிக்க நுகர்வோர் வர்த்தக நாமம்’ எனும் மதிப்புமிக்க விருதை Brand Finance இடமிருந்து பெற்றுள்ள First Capital நிறுவனம், LMD சஞ்சிகையினால் இலங்கையின் சிறந்த 100 பெருநிறுவனங்களுக்குள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வாறான பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றுள்ள First Capital அதன் சிறப்பு மற்றும் உறுதிப்பாட்டை தொடர்ந்து பேணி வருகிறது. நிதித் துறையில் புத்தாக்கம், நிதித் தீர்வுகள் மூலம் அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் நோக்குடன், First Capital ‘செயற்திறனுக்கு முதலிடம்’ வழங்கி செயற்பட்டு வருகிறது.

END

Captions:

ஜனசக்தி குழுமத்தின் நிறுவுனரும் அதன் தலைவருமான சி.டி.ஏ. ஷாஃப்டர், First Capital இன் பிரதித் தலைவி திருமதி மஞ்சுளா மெதிவ்ஸ், First Capital இன் MD/CEO டில்ஷான் விரசேகர ஆகியோர் யாழ்ப்பாணக் கிளையை வைபவ ரீதியாக திறந்து வைத்தபோது…
First Capital Holdings – யாழ்ப்பாண கிளை

First Capital Holdings PLC பற்றி:

First Capital Holdings PLC ஆனது, ஜனசக்தி குழுமத்தின் கீழ் உள்ள ஓர் நிறுவனமாகும். முதன்மை முகவர், பெருநிறுவன நிதி ஆலோசகர், சொத்து முகாமைத்துவ நிறுவனம், பங்குத் தரகர் என அதன் பல்வேறு செயற்பாடுகள் மூலம் ‘செயற்திறனுக்கு முதலிடம்’ வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மூலதனச் சந்தை தீர்வுகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றுள்ள First Capital Holdings PLC ஆனது, இலங்கையில் உள்ள பட்டியலிடப்பட்ட முழுமையான முதலீட்டு நிறுவனமாகும். First Capital Holdings PLC ஆனது, LRA இனால் [SL] A with Stable கடன் தர மதிப்பீட்டை பெற்றுக்கொண்டுள்ளது.

First Capital Holdings PLC இன் பணிப்பாளர் சபையானது, தலைவர் நிஷான் பெர்னாண்டோ, பிரதித் தலைவர் மஞ்சுள மெத்திவ்ஸ், முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி டில்ஷான் வீரசேகர, ரமேஷ் ஷாஃப்டர், மினெட் பெரேரா, சந்தன டி சில்வா மற்றும் நிஷான் டி மெல் ஆகியோரை உள்ளடக்குகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *