தனது 5 வருட ஆடம்பர மற்றும் மறக்க முடியாத அனுபவங்களைக் கொண்டாடும் Le Grand Galle ஹோட்டல்

ஜப்பானுக்குச் சொந்தமான, மிகப் புகழ்பெற்ற சொகுசு ஹோட்டலான Le Grand Galle, தனது 5ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அண்மையில் ஒரு கோலாகல நிகழ்வை நடாத்தியிருந்தது. தனது நேர்த்தியான சேவைக்காகவும், காலி கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்கரையின் கவர்ச்சிகரமான காட்சிகளுக்காகவும் இது பிரபலமாக விளங்குகிறது.

இந்த 5 வருட நிறைவுக் கொண்டாட்டமானது, Le Grand Galle இன் சிறந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக அமைந்ததோடு, மகிழ்ச்சி, நன்றியுணர்வு மற்றும் கொண்டாட்டம் ஆகியவற்றால் நிரம்பிய மாலைப் பொழுதாக அது அமைந்தது. பிரயாணத் துறை, பெருநிறுவனத் துறை மற்றும் மதிப்பு மிக்க தனிநபர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

Le Grand Galle பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், அவை அனைத்தையும் கடந்து 2018 முதல் ஐந்து வருடங்களாக செயற்பட்டு வருகிறது. ஈடு இணையற்ற விருந்தோம்பல் அனுபவங்களை வழங்குவதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பே ஹோட்டல் வலுவாக உள்ளமைக்கு முக்கிய காரணமாகும்.

Le Grand Galle ஆனது, எல்லையற்ற ஆடம்பர வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம் மறக்க முடியாத ஒரு இடமாக அது தன்னை மாற்றுகிறது. குளியல் தொட்டிகள், கடலின் அழகிய காட்சிகள், வரலாறு நிறைந்த நகரமான காலி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை காணக்கூடிய 45 சதுர மீற்றர் முதல் பரந்த இடப்பரப்பைக் கொண்ட, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அறைகளின் அனுபவத்தை விருந்தினர்கள் இங்கு பெறலாம். 5 நேர்த்தியான நீச்சல் தடாகங்கள் மற்றும் 2 ஆடம்பரமான ஜக்குஸி (Jacuzzi) அறைகளையும் இந்த ஹோட்டல் கொண்டுள்ளது.

அது மாத்திரமன்றி, மூன்று ஒப்பிட முடியாத உணவகங்களையும் Le Grand Galle கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் தனித்துவமான உணவு அனுபவத்தை வழங்குகிறது. இதில் ஹோட்டலின் கடல் உணவு உணவகமான Blue ஆனது, சிறப்பான இரவு உணவு பட்டியலுடன் நாவின் சுவை அரும்புகளை தூண்டுகிறது. அடுத்து Dip, நீச்சல் தடாக பார் ஆன இது, புத்துணர்ச்சியூட்டும் பானங்கள் மற்றும் இலகு வகை தின்பண்டங்களை வழங்குகிறது. இது ஒரு இனிய மாலைப் பொழுதை கழிப்பதற்கு ஏற்றது. Taste ஆனது, முழு நாளும் உணவருந்தும் உணவகமான இது, பல்வேறு உணவுத் தெரிவுகளை வழங்கும் விரிவான உணவுப் பட்டியலை கொண்டுள்ளது. இது அனைத்து விருந்தினர்களுக்கும் மகிழ்ச்சியான உணவு அருந்தும் அனுபவத்தை உறுதி செய்கிறது.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், Le Grand Galle இன் பொது முகாமையாளர் லஹிரு டி சில்வா, தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார், “எமது 5ஆவது வருட செயற்பாட்டைக் கொண்டாடுவதில் நாம் உண்மையிலேயே பணிவும் பெருமையும் அடைகிறோம். எமது மதிப்புமிக்க விருந்தினர்கள் மற்றும் மதிப்பிற்குரிய கூட்டாளர்களின் அசைக்க முடியாத ஆதரவின்றி இந்த மைல்கல்லை நாம் எட்டுவது சாத்தியமில்லை. அவர்களின் நம்பிக்கையும் விசுவாசமும்தான் எமது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உந்துதலாக அமைந்தன. ஒப்பற்ற அனுபவங்களை வழங்குவதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அத்துடன் மேலும் பல்லாண்டுகளுக்கு விருந்தினர்களை வரவேற்க நாம் காத்திருக்கிறோம்.” என்றார்.

Le Grand Galle Hotel ஆனது, ஆடம்பரம், ஒப்பிட முடியாத சேவை மற்றும் பிரமிக்க வைக்கும் சூழல் காட்சிகளின் அழகிய அம்சங்களை இணைத்து வழங்குவதன் மூலம், விவேகம் கொண்ட பயணிகளுக்கான ஒரு சிறந்த தெரிவாகத் திகழ்கிறது. அதன் குறிப்பிடும்படியான 5ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் மூலம், ஹோட்டல் தனது விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதற்கும் மேலாக, அதற்கு அப்பாற்பட்டு, செல்ல வேண்டிய ஒரு இடமாக தனது நற்பெயரை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

உங்களது அடுத்த விடுமுறையை Le Grand Galle இல் கழிக்க, www.legrandgalle.lk ஊடாக முன்பதிவு செய்வதன் மூலம் 20% தள்ளுபடியைப் பெறுங்கள். இதன் மூலம், உலகெங்கிலும் உள்ள விருந்தினர்களுக்கு சிறந்த தெரிவாக இந்த ஹோட்டல் உயரக் காரணமான, மறக்க முடியாத ஆடம்பரத்தையும் விருந்தோம்பலையும் அனுபவியுங்கள்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *