தனது Pre-owned சொகுசு வாகனங்களுக்கு CARPITAL ஆலோசனை சேவையை அறிமுகப்படுத்தும் DIMO

இலங்கையின் வாகனத் துறையில் நீண்ட கால முன்னோடி நிறுவனமாகத் திகழும் DIMO, தனது DIMO CERTIFIED மூலம், பயன்படுத்தப்பட்ட (Pre-owned) ஆடம்பர கார்களை கொள்வனவு செய்பவர்களுக்கும் விற்பனை செய்பவர்களுக்கும் CARPITAL ஆலோசனை சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. CARPITAL மூலம், கொள்வனவாளர்களுக்கும் விற்பனையாளகளுக்கும் தங்கள் Pre-owned சொகுசு கார்களுக்கு சரியான முதலீட்டு முடிவை எடுக்க வழிகாட்டப்படுகிறது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரிக்கும் வாகன சந்தைப் பெறுமதி ஆகியன, Pre-owned சொகுசு கார் துறையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளதோடு, CARPITAL மூலம் ஆபத்தற்ற, 100% வெளிப்படையான பரிவர்த்தனைகள் மூலம் வாகனம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்யும் செயன்முறை முழுவதும், நிபுணர் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.

DIMO நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனைப் பிரிவின் பொது முகாமையாளர் தரங்க குணவர்தன இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “Pre-owned சொகுசு வாகனச் சந்தையில், முடிவெடுக்கும் விடயம் தொடர்பில், ஒரு தனித்துவமான பங்களிப்பை CARPITAL வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த சொகுசு வாகன விற்பனை நிபுணர்களான எமது CARPITAL ஆலோசகர்கள், சொகுசு வாகனங்களின் சந்தை மதிப்புகள் அதிகரித்துள்ள முக்கியமான காலங்களில், எமது வாடிக்கையாளர்கள் Pre-owned சொகுசு வாகனங்களில் மேற்கொள்ளும் முதலீடுகளை அதிக இலாபம் ஈட்டுவதற்காகவும், உயர் பலன்களை பெறுவததனை நோக்காகக் கொண்டு, உரிய ஆலோசனை சேவைகளை வழங்குகின்றனர்.” என்றார்.

Pre-owned சொகுசு வாகனச் சந்தையில், மறைக்கப்பட்ட பழுதுபார்ப்புச் செலவுகளைக் கண்டறிதல், முறையாக முன்னெடுக்கப்படாத பராமரிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்பதோடு, மறைக்கப்பட்ட விபத்துத் தகவல்கள், தவறான வாகன ஆவணங்கள் தொடர்பான சட்டச் சிக்கல்கள் போன்றன, வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் மீள்விற்பனையின் போது, அதன் விற்பனைப் பெறுமதியில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

CARPITAL ஆனது, Mercedes-Benz, Jeep, Audi, BMW, Land Rover, Range Rover போன்ற முன்னணி ஆடம்பர வர்த்தகநாமங்களின் உண்மையான கொள்வனவாளர்களுக்காக, அவை தொடர்பான விரிவான தகவல்களை பெறக் கூடிய தளத்தை அணுகுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. இது, வாகனங்களின் கொள்வனவு மற்றும் விற்பனை செய்யும் செயன்முறையை ஒழுங்குபடுத்துகிறது.

வாகன விற்பனையாளர்களுக்கு, உண்மையான சந்தைப் பெறுமதியின் மதிப்பீடு மற்றும் அவர்களது சொகுசு வாகனத்திற்கான காலத்திற்கேற்ற வழிகாட்டல் ஆகியவற்றின் அடிப்படையில், உச்சபட்ச விலையை CARPITAL ஆலோசகர்கள் வழங்குகிறார்கள். அதே சமயம் DIMO நிறுவனத்தின் பயிற்சி பெற்ற வாகன வல்லுநர்களால் முன்னெடுக்கப்படும் மதிப்பீடுகள் மூலம் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் யூகங்கள் மூலம் அன்றி, சரியான முடிவுகளை எடுக்க உதவுவதற்கான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து Pre-owned சொகுசு வாகனங்களும் CARPITAL ஆலோசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வாகனங்கள் என்பதால், உத்தரவாதமளிக்கப்பட்ட விற்பனைக்குப் பின்னரான சேவைகள் மற்றும் மட்டுப்படுத்தப்படாத தூரத்துடன் ஒரு வருட  உத்தரவாதத்துடன் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த சேவையின் மூலம், 100% வாகனத்தின் உரிமை வாடிக்கையாளர்களுக்கு மாற்றப்படும்.

85 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் Mercedes-Benz, Chrysler, Jeep ஆகியவற்றுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக விளங்கும் DIMO நிறுவனத்தின் நம்பகமான சேவைகள், வாடிக்கையாளர்களுக்கு உச்சபட்ச நன்மைகளை உறுதி செய்கின்றன.

CARPITAL, பிரதானமாக, தற்போதுள்ள சொகுசு வாகன உரிமையாளர்களுக்கு முதன்மையான சேவையை வழங்கும் அதே வேளையில், எதிர்காலத்தில் சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்ய விரும்புபவர்களுக்கும் தனது சேவைகளை வழங்க காத்திருக்கிறது.

இலங்கையில் வழங்கப்படும் வெளிப்படையான மற்றும் பிரத்தியேகமான சேவைகளை அனுபவிப்பதற்கு, DIMO CERTIFIED இன் CARPITAL ஆலோசகர் ஒருவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *