‘தீவா கைகளுக்கு வலு’ திட்டம் மூலம் வட மாகாண பெண் தொழில்முனைவோரை வலுவூட்டும் தீவா

‘தீவா கைகளுக்கு வலு’ பயிற்சி அமர்வுகள், பெண்கள் தமது வீட்டில் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் வழங்கும் சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பெண் தொழில்முனைவோருக்கு அவசியமான வளங்கள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை அளித்து, அவர்கள் தன்னம்பிக்கையுடன் அவர்களது வணிகத்தில் வளர்ச்சியை மேம்படுத்த உதவுவதே ‘Diva Dathata Diriya’ (‘தீவா தேத்தட்ட திரிய’ – தீவா கைகளுக்கு வலு) பயிற்சி அமர்வுகளின் நோக்கமாகும்.

அதற்கமைய, கடந்த 2023 பெப்ரவரி 21 ஆம் திகதி, Women in Management (WIM) அமைப்புடன் இணைந்து தங்கொட்டுவையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வுகளின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த முயற்சியின் இரண்டாம் கட்டம் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் ஐந்து விரிவான பயிற்சி அமர்வுகளை நடத்தியிருந்தது. அந்த வகையில், உற்பத்தியாளர்கள் முதல் தொழில்முனைவோர் வரை மனநிலை மாற்றம், நிதிக் கணக்கு புத்தக பராமரிப்பு மற்றும் நிதி முகாமைத்துவம், விலை நிர்ணயம், சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை, டிஜிட்டல் சந்தை, வர்த்தகநாம பிரபல்யத்துவம் போன்ற தலைப்புகளை இது உள்ளடக்கியிருந்தது.

பங்கேற்பாளர்களின் முன்னேற்றத்திற்கு அங்கீகாரமளிக்கும் வகையில், யாழ். மாவட்ட செயலகத்தின் பயிற்சி நிலையத்தில் 2023 மார்ச் 05 ஆம் திகதி பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. பயிற்சியை நிறைவு செய்த 51 பெண் தொழில்முனைவோரின் தொழில்முனைவு பயணத்திற்காக இந்நிகழ்ச்சியில் அங்கீகாரமளிக்கப்பட்டது. அத்துடன், இந்நிகழ்ச்சியானது, பங்கேற்பாளர்களுடன் தொடர்ச்சியாக இணைந்து, அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் என்பதோடு, இதில் முதல் மூன்று இடத்தை பெறும் 3 பெண் தொழில்முனைவோருக்கு, அவர்களது தொழில் முனைவுப் பயணத்தை ஆதரிக்கவும் முன்னேற்றவும் அவசியமான மூலதன நிதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hemas Consumer பற்றி

வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands ஆனது, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட வர்த்தக நாமங்கள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம் நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்பு வகைகளின் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிநபர் பராமரிப்புத் தீர்வுகளை வாழ்க்கையில் கொண்டு வர முயற்சிக்கிறது. வளர்ச்சியின் மூலம் ஈர்க்கப்பட்ட புத்தாக்கம் கொண்ட குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சந்தையில் முன்னணியான மற்றும் விருது பெற்ற சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்காக நிறுவனம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்குவதன் மூலமும், நம்பகமான கூட்டாண்மைகளை வளர்ப்பதன் மூலமும்  சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலமும் அது நாடு முழுவதிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *