துறையில் முன்னணியான முன்பக்க கெமரா திறனை பாவனையாளர்களுக்கு கொண்டு வரும் V20 ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்திய vivo

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, தனது முதற்தர V தொடரின் புதிய ஸ்மார்ட்போனான V20 ஐ இன்று அறிமுகப்படுத்தியது. V20 இல் நன்கு மேம்பட்ட செல்பி அனுபவத்தை வழங்கும் Autofocus (AF)  திறனுடன் கூடிய தொழில் தர 44MP Eye Autofocus    கெமராவை உள்ளடக்கியதன் மூலம் முதற்தர ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புத்தம் புதிய V20 மிகவும் மெல்லியது மற்றும் இலகுவானதென்பதுடன், இளம் பாவனையாளர்களின் வேகமான வாழ்க்கை முறைக்கு உறுதுணையாக அமையும் வகையில்  7.38mm மிக நேர்த்தியான AG Glass இனைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது பல தடவை zoom செய்த பின்னரும் மிகவும் துள்ளியமான தெளிவுடன் கூடிய படங்களை எடுக்கக்கூடிய Super Night Mode ஐக் கொண்ட 64MP அதி விசேட பின்பக்க கெமராவைக் கொண்டது. V20 ஆனது துரிதமாக மின்னேற்றல் செய்யக்கூடிய 33W FlashCharge தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதுடன், இதன் மின்கலமானது ஒருநாள் முழுவதும் தாக்குப்பிடிக்கக்கூடியது.

“மாறும் வாடிக்கையாளர்களின் நடத்தை மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்வதில் vivo உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. செல்பிக்கள் மீதான பேரார்வம், புகைப்படவியல் போக்குகள் மற்றும் புத்தாக்க எண்ணம் கொண்டோரின் தேவைகள் குறித்து நாம் புரிந்து கொண்டுள்ளோம். V20 உடன், அதன் எதிர்கால அம்சங்கள் மற்றும் வடிவமைப்பின் மூலம்  முதற் தர ஸ்மார்ட்போன்களுக்கான நியமங்களை மாற்றத் தயாராக உள்ளது. மிக நேர்த்தியான நவீன பாணியிலான வடிவமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மேம்பட்ட Autofocus கெமரா திறன்களுடன் V20 அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது,” என vivo Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் தெரிவிக்கின்றார்.

V20 இன் அதி நவீன கெமரா கட்டமைப்பானது, புத்தம் புதிய செல்பி அனுபவத்தை வழங்கும் அதி சக்தி வாய்ந்த மற்றும் அறிவார்ந்த Autofocus  திறனைக் கொண்டது. இதன் 44MP Eye Autofocus  வசதியானது அனைத்து தருணங்களையும் இலகுவாகவும், ஸ்திரத்தன்மையுடனும் படம் பிடிக்க உதவுகின்றது.Eye Autofocus படம் மற்றும் வீடியோ தரத்தை மேம்படுத்துவதற்கும் பாவனையாளரை எப்போதும் ‘focus’ செய்வதற்கும் மேம்பட்ட பொருள்-கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

இரவு மற்றும் குறைந்த ஒளி கொண்ட சூழ்நிலைகளில் சிறந்த வண்ண வெப்பநிலை உடன் கூடிய V20வின் Aura Screen Light ஐ உபயோகப்படுத்தி தெளிவான செல்பிகளை எடுப்பதற்கு  ஏதுவாக  Super Night Selfie போன்ற பல மேம்பட்ட கெமரா அம்சங்களை  இந்த சாதனமானது கொண்டுள்ளது. Tripod Night Mode ஆனது stability மற்றும் exposure ஐ அதிகரிக்கிறது. அதே நேரத்தில் Motion Autofocus நகரும் பொருள்களை தெளிவாக கண்காணித்து படமெடுக்கின்றது. Dual-view video அம்சம் முன் மற்றும் பின்புற கெமராக்கள் பதிவுசெய்வதை பயனர்கள் நிகழ்நேரத்தில் பரிசோதிக்க அனுமதிக்கிறது. ஏனைய குறிப்பிடத்தக்க அம்சங்களான Slo-mo Selfie வீடியோ, Steadiface Selfie வீடியோ மற்றும் 4K Selfie வீடியோ ஆகியவற்றைப் பயன்படுத்தி துறையில் சிறந்த கமெரா அம்சங்கள் மூலம் சிறப்பான வீடியோக்களை எடுக்க முடியும்.

இதன் 64MP பிரதான பின்புற கெமரா + 8MP கெமரா அமைப்பானது  (Super Wide Angle/Bokeh/Super Macro)  மிகத் தெளிவானதும், மிகத் துள்ளியமானதுமான புகைப்பட அனுபவத்தை வழங்குகின்றது.

V20 ஆடம்பரமான தோற்றத்தின் உச்சமாகத் திகழ்வதுடன், அதி நேர்த்தியான மற்றும் நவீன பாணியிலான வண்ணத்தில் இளைஞர்களின் ஸ்மார்ட் மற்றும் வளர்ந்து வரும் வாழ்க்கை முறையுடன் இணங்கிச் செல்கின்றது. இந்த சாதனம் அதன் 7.38mm அதி நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் 2.5D அமைப்பு வெறும் 171 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இது 6.44 அங்குல AMOLED FHD + திரையைக் கொண்டுள்ளது. இது துடிப்பான மற்றும் அசல் வண்ணங்களை உயிர்ப்பிக்கிறது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த AG Glass தொழில்நுட்பமானது போனின் மேற்பரப்பை கீறல்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பதுடன், இது போனை இலகுவாக பிடித்து வைத்திருக்க ஏற்றதாக காணப்படுகின்றது. V20 ஆனது கவனமாக Dual Tone Step உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் பிளாஷ் முதல் லேயரிலும், இரண்டாவது லேயரில் கெமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

V20 இயற்கையின் அழகினால் ஈர்க்கப்பட்ட வண்ணங்களுடன் கூடிய எளிமையான கைவண்ணமாகத் திகழ்கின்றது. தகவல் மூலங்களின் பிரகாரம், V20 இரு வண்ணங்களில் கிடைக்கவுள்ளது, மிட்நைட் ஜாஸ் (Midnight Jazz) – தனித்துவ வண்ணமான இது மர்மமான மற்றும் ஆற்றல் நிறைந்தது, சன்செட் மெலடி (Sunset Melody), இது சூரிய அஸ்தமனம் மற்றும் கடற்கரைகளை நினைவூட்டும்.

V20 என்பது வேகமாக நகரும் பாவனையாளர்களுக்கான சக்திவாய்ந்த கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது. இது Qualcomm® Snapdragon™ 720G புரசசரினால் வலுவூட்டப்படுவதுடன்,  8GB RAM மற்றும் 128GB ROM இன் உதவியுடன் அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ்களுக்கு சீரான செயற்பாட்டினை வழங்குகின்றது. Funtouch OS 11 (Android 11 ஐ அடிப்படையாகக் கொண்டது)  சீரான பாவனையாளர்கள்  இடைவினையை வழங்குகிறது. V20 ஆனது 33W FlashCharge  உடன் கூடிய 4,000mAh மின்கலமானது துரித வேகத்தில் மின்னேற்றத்தைப் பெற்றுக்கொள்வதுடன், Multi Turbo, gaming turbo, HD restoration உடன் கூடிய memory recaller  சிறப்பம்சங்களையும் இது கொண்டுள்ளது.

V20 ஐ Abans, Dialog, Singhagiri விற்பனையகங்கள் மற்றும் நாடுபூராகவும் உள்ள vivoவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் ரூபா 69,990 என்ற விலையில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும்,  V20 ஐ கொள்வனவு செய்பவர்களுக்கு Dialog  இடமிருந்து  50GB  கிடைப்பதுடன், இது ஒக்டோபர் 15 ஆம் திகதியிலிருந்து 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *