தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக SLIM DIGIS இல் வெற்றிப் பயணத்தைத் தொடரும் HUTCH

கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பாடல் சேவைகள் தொடர்பான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, சமீபத்தில் இடம்பெற்ற SLIM DIGIS 2.2 இல் ஐந்து SLIM DIGIS விருதுகளை வென்றுள்ளது.

இலங்கையில் உள்ள சந்தைப்படுத்தலுக்கான தேசிய அமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தால் (Sri Lanka Institute of Marketing – SLIM) நடத்தப்படும் SLIM DIGIS விருது விழாவானது, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் சிறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் தொழில்துறையில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டிஜிட்டல் தீர்வுகளை அங்கீகரிக்கின்ற மிகவும் பெருமைக்குரிய நிகழ்வாகும்.

இந்த விருது வழங்கும் விழாவில், தொலைத்தொடர்பு பிரிவு மற்றும் ஒட்டுமொத்த பிரிவுகளின் கீழ் ஒரு வெள்ளி, 3 வெண்கலம் மற்றும் ஒரு மெரிட் விருதை HUTCH பெற்றுள்ளது. அந்த வகையில் இதற்கு முன் இடம்பெறாத வகையில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைக் கொண்ட வரலாற்றை பதிவு செய்த, அதிக போட்டி நிறைந்த ஆண்டில் இடம்பெறும் இந்நிகழ்வில் இவ்விருதுகளை HUTCH வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த கௌரவம் தொடர்பில் HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா கருத்துத் தெரிவிக்கையில், “SLIM DIGIS 2.2 இல் இந்த மதிப்புமிக்க விருதுகள் மூலம் அங்கீகாரம் பெற்றதையிட்டு நாம் பெருமையடைகிறோம். உயர்தர சேவைகளை வழங்கி, இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் நாடு முழுவதும் உள்ள மக்களைச் சென்றடைவதில் எமது சாதனைகள் மற்றும் நிலைபேறானதன்மையின் உண்மையான பிரதிபலிப்பு இதுவாகும். ஆர்வமுள்ள மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கும் எமது குழுவினர் இல்லாமல் இந்த விருதுகளை பெறுவது நிச்சயமாக சாத்தியமில்லை. அத்துடன் இந்த தொடர்ச்சியான மற்றும் மட்டிட முடியாத வெற்றிகள் தொடர்பில் அவர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக்  கொள்கிறேன்.” என்றார்.

Fortune Global 500 இனது கூட்டு நிறுவனமான CK Hutchison Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமான HUTCH ஸ்ரீலங்கா, இந்த டிஜிட்டல் யுகத்தில் வாடிக்கையாளர்கள் தாம் விரும்பிய அனுபவத்தை பெறும் பொருட்டு, தனது வலையமைப்பு மற்றும் அதன் உள்ளக செயன்முறைகள் ஆகிய இரண்டிலும் டிஜிட்டல் மாற்றத்தின் முக்கிய கட்டத்தை நிறைவு செய்துள்ளது.

HUTCH தற்போது நாட்டின் மிகப்பெரிய 4G வலையமைப்புகளில் ஒன்றாக செயற்படுவதோடு, அது ‘டிஜிட்டல் இணைப்பு’ மூலம் நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 95 வீதத்தினரை சென்றடைவதன் மூலம், டிஜிட்டலை அடைவதில் காணப்படும் பாகுபாட்டைக் குறைக்கிறது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *