தொழில்வாய்ப்பு, கண்ணியமான வேலை மற்றும் தொழில் முயற்சியாண்மை திறன்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு வலியுறுத்திய DIMOவின் உலக இளைஞர் திறன் தின வெபினார்

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, ‘தொழிலுக்கான கேள்வி மற்றும் தொழிற்கல்வி – இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தூண்டுதல்’ என்ற தலைப்பிலான வெபினார் மூலம் தொழில்வாய்ப்புக்கான திறன்கள் மூலம் இளைஞர்களை தயார்படுத்தல், கண்ணியமான தொழில் மற்றும்  தொழில் முயற்சியாண்மை போன்றவற்றின் முக்கியத்துவத்தும் தொடர்பில் கவனம் செலுத்தி, உலக இளைஞர் திறன் தினத்தை கொண்டாடியது.

இதன் பிரதான உரையை, தொழிற்துறை நிபுணரான, மங்கள பி.பீ யாப்பா – பணிப்பாளர் நாயகம் / பிரதான நிறைவேற்று அதிகாரி இலங்கை இலங்கை தொழில் தருனர் சம்மேளனம் நிகழ்த்தியிருந்ததுடன்,  குழாமில் முன்னணி மனிதவளத்துறை நிபுணர்களான, தில்ருக்ஷி குருகுலசூரிய – பிரதம மனிதவள அதிகாரி – DIMO , சிந்தக பிரேமரத்ன – குழும மனிதவள பணிப்பாளர் – Fairway Holdings, இஷான் தண்டநாராயண – குழும பிரதம மனிதவள அதிகாரி – Brandix ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் , இந் நிகழ்வை யொஹான் திலகரட்ன – தலைவர் கோர்பரேட் தொடர்பாடல்கள் – DIMO  ஒழுங்குபடுத்தியிருந்தார். DIMO வின் பேண்தகைமை நிகழ்ச்சி நிரலில் தொழிற்பயிற்சி ஒரு முக்கிய அம்சமென்பதுடன், ‘தொழிலுக்கான கேள்வி மற்றும் தொழிற்கல்வி – இளைஞர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை தூண்டுதல்’ அவையானது சரியான திறன்களுடன் மாறிவரும் இளைஞர்களை வலுப்படுத்துவதற்கான DIMO வின் அண்மைய முயற்சியாகும்.

மங்கள பி.பீ யாப்பா, தனது பிரதான உரையில் குறிப்பிட்டதாவது, “அறிவு, திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியன சிக்கலான முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட 3 கூறுகளாகும். இன்று அறிவு திறன்களை விஞ்சியுள்ளது, எனவே, அது முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், திறன்களை வளர்க்காத அறிவு, சமூகத்திற்கு பயனளிக்காது என்று நான் நம்புகிறேன். தொழிற்கல்வி மூலம், நாம் செய்ய முயற்சிப்பது அறிவு மற்றும் திறன்களை வளர்ப்பதாகும். அறிவும் முக்கியமானது ஆனால் கற்றல் மற்றும் தேவையற்றவற்றை நீக்குதல் ஆகிய இரண்டு எண்ணக்கருக்களும் இன்றைய கால கட்டத்தில் இன்றியமையாததாக இருப்பதால், நாம் அதன் அடிமையாக இருக்கக்கூடாது,”என்று தெரிவித்தார். ஒரு நபரின் கனவுகளை நனவாக்க சிறந்த வழிகளில் ஒன்று தொடர்புடைய தொழிற்கல்வி. ஒருவரின் திறனை முழுதாக பயன்படுத்தவும், கனவுகளை நனவாக்கவும் தொழிற்கல்வியைத் தழுவுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இன்றைய இளைய தலைமுறையினர் தொழிற்பயிற்சியைப் பெற தயங்குவது தொடர்பில், சிந்தக பிரேமரத்ன, கருத்து தெரிவிக்கையில், “நீங்கள் வெவ்வேறு தலைமுறைகளைப் பார்த்தால், பேபி பூமர்கள் ஜென் எக்ஸின் சில பகுதியினரும் ஓய்வுபெற்றுள்ளனர். இவற்றுக்கும் மேல் கோவிட் – 19 தொற்றுநோய் மக்கள் ஓய்வு பெறுவதையும் வேலையை விட்டு வெளியேறுவதையும் துரிதப்படுத்தியுள்ளது. பல்வேறு வகையான பட்டங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால், அனைத்து வகையான பட்டங்களையும் வழங்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த பட்டப்படிப்புகளை முடித்தவர்கள் கடைசியாக அலுவலக வேலையை தேடுவதால், தொழில் திறன்களைக் கொண்ட தனிநபர்கள் என்று வரும்போது திறன்களுக்கான இடைவெளி உருவாகின்றது. மேலும், தொழில்நுட்பம் எங்களுக்கு உதவியிருந்தாலும், அது இளைய தலைமுறையினரை ‘உடல்’ ரீதியான வேலைகளைச் செய்ய தயக்கம் காட்டச் செய்துள்ளது. அவர்கள் கதிரையில் உட்கார்ந்து எல்லாவற்றையும் தங்கள் விரல் நுனியில் வைத்திருக்க விரும்புகிறார்கள். மேலும், முச்சக்கர வண்டி அல்லது கெப் ஓட்டுதல் போன்ற சில வேலைகளை நீங்கள் பார்த்தால், அந்த நபர் விரும்பும் போது வேலை செய்ய முடியும் என்பதால் ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அவை கொண்டுள்ளன. இவை அனைத்துமே இன்றைய இளைய தலைமுறையினரை தொழிற்பயிற்சியில் இருந்து தடுப்பவையாகும்,”என்றார்.

தொழில் பயிற்சியில் பெண்களின் பங்கேற்பு தொடர்பில் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட தில்ருக்ஷி குருகுலசூரிய, கருத்து தெரிவிக்கையில், “மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமானோர் பெண்கள் என்ற போதிலும், துரதிருஷ்டவசமாக பொருளாதார நடவடிக்கைகளில் போதுமான பங்கேற்பு இல்லை. பெண்களின் பங்கேற்பு இல்லாமையானது, அறிவு மற்றும் திறன்களின் பற்றாக்குறையின் விளைவாக இல்லை என்பது தெளிவாகிறது. ஏனெனில், பெண்கள் நிச்சயமாக சமமான திறன் கொண்டவர்கள். சமூக விதிமுறைகள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்புகள் அவர்களைத் தடுத்து நிறுத்துவதால், பெண்கள் உட்பட  அனைவரிடமும் கருத்து மாற்றம் தேவை. உதாரணமாக, கடினமான வேலைகளில் ஒன்றாக அறியப்படும், கேன்ட்ரி கிரேன் இயக்கும் வேலையில் கூட இலங்கையில் பெண் குழு உறுப்பினர்கள் உள்ளனர். அதேபோல, வழக்கத்திற்கு மாறான ஓட்டோ மெக்கானிக்ஸ், டெக்னீஷியன்கள், மெஷின் ஒபரேட்டர்கள் போன்ற பல வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை நான் எல்லா பெண்களுக்கும் வலியுறுத்த விரும்புகிறேன். இதற்கு தேவை அவர்கள் சரியான தொழிற்பயிற்சி பெறுவதும், ஒரு இலக்கை நிர்ணயிப்பதும், அதனை நோக்கிச் செல்வதுமே ஆகும்,” என்றார்.

நிறுவனங்களில் தொழில்நுட்பத்தின் தோற்றம் மற்றும் தொழிற்துறை வேலை வாய்ப்புகளை அது எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய தனது கருத்துக்களை  இஷான் தண்டநாராயண பகிர்கையில், “வணிக நிலைமாற்றம், மாற்ற முகாமைத்துவம் மற்றும் விரைவான செயல்முறைகள் போன்ற அம்சங்களில் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. நிறுவனங்கள் ஒட்டோமேஷனை எப்படித் தழுவுவது, நேரத்தையும் பணத்தையும் மீதப்படுத்துவதற்கான அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை மாற்றுவது, ஒரு புதிய தயாரிப்பை உற்பத்தி செய்யும் போது செலவுகளைக் குறைப்பது மற்றும் சந்தையில் பொருட்களை வெளியிடுவதை துரிதப்படுத்துவது போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. தொழில்நுட்பம் வேகமாக மாறும்போது, ​​இந்த தொழில்நுட்பங்களை மாற்றியமைப்பதற்கு சரியான திறன்களைக் கொண்டவர்கள் தேவை, அங்குதான் தொழிற்பயிற்சி உள்ளவர்கள் மிகவும் முக்கியமாகின்றனர். தொழில்நுட்பம் சில தொழில்களில் மனித தலையீட்டின் தேவையை குறைக்கலாம் என்றாலும், தொழில்நுட்பங்கள் சீராக இயங்க உங்களுக்கு தொழில் பயிற்சி உள்ளவர்கள் தேவை.

எனவே, தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகமாகும்போது, ​​தொழிற்பயிற்சி கொண்ட அத்தகைய நபர்களின் தேவையும் அதிகரிக்கும்,” என்றார்.

தொழிற்பயிற்சிக்கு மென்மையான திறன்களின் முக்கியத்துவம் தொடர்பில் வெபினார் கவனம் செலுத்தியது. இவற்றில் திறந்த மனப்பாங்கு, ஆர்வமுள்ள மனம், கற்றுக்கொள்ள விருப்பம், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் மேம்படுத்துதல், நேர்மறையான “முடியும்” என்ற மனப்பான்மை, கல்வி ஒரு தொடர்ச்சியான பயணம் என்பதை புரிந்துகொள்வது மற்றும் ஒருவர் துறையின் உச்சத்தை அடைந்த பின்னரும் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பது ஆகியவை அடங்கும்.

இலங்கை இளைஞர்களுக்கு தொழிற்கல்வியைத் தெரிவு செய்வதன் முக்கியத்துவம் மற்றும்  தொழில் வாய்ப்புகளை வழங்க அவை கொண்டிருக்கும் ஆற்றல் குறித்து இன்றைய இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த DIMO தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகள் மற்றும் அவைகளை நடாத்தும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *