நம்பமுடியாத அம்சங்களுடன் Huawei P40 Pro இலங்கையில் வெளியீடு

புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, சிறப்பம்சங்கள் பலவற்றினால் நிறைந்த Huawei P40 Pro இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியுள்ளது. இந்த வலுநிலையமனாது ஒளி முறிவு தோற்றத்தையும், சிறு விபரங்களிலும் நேர்த்தியை வெளிப்படுத்தும் 6.58 அங்குல OLED full view திரையையும் கொண்டது. வேகம், வலு, கெமரா, வடிவமைப்பு மற்றும் மேலும் பல சிறப்பம்சங்களிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் Huawei இன் திறனை Huawei P40 Pro மேலும் நிரூபித்துள்ளது.

பகலோ இரவோ , பொருள் அருகிலோ அல்லது தொலைவிலோ எதுவாக இருப்பினும் மிகவும் தெளிவான படப்பிடிப்பை Huawei P40 Pro மீள் வரையறை செய்கின்றது. இதன் Ultra Vision Leica Quad camera  தொகுதியானது மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், சிறந்த புகைப்படங்களை பெற்றுக் கொள்வதற்கு இது மட்டுமே பாவனையாளர்களுக்கு போதுமானதாகும். இதன் 50 MP Ultra Vision camera (Wide Angle, f/1.9 aperture, OIS) + 40 MP Cine Camera (Ultra-Wide Angle, f/1.8 aperture) + 12 MP Super Sensing Telephoto Camera (f/3.4 aperture, OIS) + 3D Depth Sensing Camera ஆகியன புகைப்படவியலுக்கான தூண்களாக உள்ளன.

இதன் quad  கெமரா தொகுதியானது auto focus, image stabilization: OIS + AIS plus ஆகியவற்றுடனும் digital, optical மற்றும் hybrid ஆகிய 3 Zoom தெரிவுகளுடன் வருகின்றது. இதற்கு மேலதிகமாக, இந்த 4 கெமெரா தொகுதியானது 4k 60fps வீடியோ பதிவு (3840×2160 pixels)  வீடியோ பதிவுக்கு உதவுவதுடன், 8192×6144 pixels image resolution மற்றும் 3840×2160 pixels video resolution ஆகியவற்றையும் வழங்குகின்றது. இந்த 32 MP செல்பி கெமெராவானது (f/2.2 aperture) சக்தி வாய்ந்ததுடன், வெளிச்ச நிலைக்கு இசைவாக்கமடைந்து, இயற்கையான  தோற்றத்துடன் கூடிய செல்பிகளை எடுக்க உதவுகின்றது.  இதன் மென்மையான ஒளியூட்டல், அசல் தோலின் நிறம் இயற்கையான அமைப்பு multi-focus மற்றும் distortion correction ஆகியன அனைவரும் எதிர்ப்பார்க்கும் நேர்த்தியான செல்பியை வழங்குகின்றது.

Huawei P40 Pro , வேகமான செயன்முறைப்படுத்தலுடன் ஸ்மார்ட்போன் அனுபவத்தில் புரட்சியை ஏற்படுத்தும்  அதி நவீன Huawei Kirin 990 பிரசசரினால் வலுவூட்டப்படுவதுடன், பல தரப்பட்ட ஒளிமயமான கிராபிக்ஸை வழங்கும் Mali-G76 GPU ஐக் கொண்டது.  அதி-உயர் வலையமைப்பு வேகத்தின் மூலம் பாவனையாளர்கள் 4K live streams களை கூட எளிதாக அனுபவித்து மகிழ முடியும்.

இதன் 8GB RAM + 256GB நினைவகம் ஒரு சிறந்த கலவையாகக் கருதப்படுகிறது, இது உயர்நிலை விளையாட்டுகளை விளையாடும் போது, ​​அதிக செயலிகளைப் பயன்படுத்தும் போது சீரான ஓட்டத்தை வழங்குவதுடன் வினைத்திறன் மற்றும் செயற்திறனை மேம்படுத்துகின்றது. மேலும் புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள், விளையாட்டுகள் மற்றும் பயன்பாடுகளை சேமிக்க போதுமான இடத்தையும் வழங்குகிறது.

இது தொடர்பில் தனது கருத்துக்களை வெளிப்படுத்திய என Huawei Devices – இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியூ , “Huawei P40 Pro” என்பது நம்பமுடியாத கெமரா அமைப்பு மற்றும் அதன் ஆஈ திறன்களின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பத்தால் நிரம்பிய சாதனமென்பதால் கவனைத்தை ஈர்த்துள்ளது. இதன் Quad  கெமரா அமைப்பானது ஸ்மார்ட்போன் புகைப்படவியலின் புதிய எல்லையை ஆராய்வதுடன், வாழ்வின் மிகவும் அழகான தருணங்களை மகிழ்ந்து அனுபவிக்க வழி செய்கின்றது. பிளாக்சிப் சாதனங்களில் இருந்து எதிர்ப்பார்க்கப்படும் புத்தாக்கமான மற்றும் நவீன அம்சங்களை Huawei P40 Pro கொண்டுள்ளது.”

Huawei P40 Pro, நீடித்து நிலைக்கும் 4200mAh மின்கலத்தைக் கொண்டுள்ளதுடன், AI பொறிமுறையுடன் கூடிய அதன் நவீன CPU வடிவமைப்பனது சக்தி வினைத்திறனை அதிகப்பதன் மூலம் பாவனையாளர்கள் இலகுவாக தமது நாளாந்த செயற்பாடுகளை குறைந்த மின்கல பாவனையுடன் முன்னெடுக்க உதவுகின்றது. இது Huawei Super Charge (Max 40W) ஐ ஆதரிக்கிறது, Huawei Super Charge cable மற்றும் charger ஆகியன சாதனத்திற்கு மேலும் பெறுமதி சேர்க்கின்றன. அதே நேரத்தில் பாவனையாளர்கள் அதிகபட்ச பயன்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க உதவுகிறது.

ஸ்மார்ட்போனை மடிகணினியுடன் இணைத்து கோப்புகளை இரு சாதனங்களிடையே பரிமாறும் மற்றும் ஸ்மார்ட்போன் திரையை மடிக்கணியின் திரையில் பிரதிபலிக்கும்  Multi-screen collaboration வசதி ஆகியனவற்றையும் கொண்டுள்ளது.

Huawei P40 Pro சாதனமானது Huawei AppGallery உடன் வருகின்றது. இது பல வகையான அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. இதனோடு Petal search app ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமையானது பல வகையான அப்ளிகேஷன்களுக்கான வாய்ப்பை வழங்குகின்றது. பாவனையாளர்கள் தமது home screen இலிருந்து இலகுவாக அப்ளிகேஷன்களை தேடி, தரவிறக்க முடியும். மேலும், Huawei AppGallery மற்றும் 3ஆம் தரப்பு அப்ளிகேஷன்கள் வழங்குனர்களிடமிருந்து பல அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன.

Huawei P40 Pro,  Silver Frost, Deep Sea Blue  மற்றும் Blush Gold வண்ணங்களில் ரூபா 172,999 என்ற அற்புதமான அறிமுக விலையில் கிடைக்கின்றது. 

.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *