நாடளாவிய ரீதியில் Honda மோட்டார்சைக்கிள் சோதனை ஊக்குவிப்பு பிரசாரத்தை முன்னெடுக்கும் Stafford Motors

ஜப்பானிய Honda Motor Corporation நிறுவனத்தின், இலங்கையிலுள்ள ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motors நிறுவனம், Honda மோட்டார் சைக்கிள்களுக்கான நாடு தழுவிய சோதனை ஊக்குவிப்பு திட்டத்தை நடாத்தி வருகிறது. நாடளாவிய ரீதியில் உள்ள விநியோகஸ்தர்களுடன் இணைந்து இந்த ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அசல் உதிரிபாகங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விழிப்பூட்டுவதே இப்பிரசாரத் திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன், பொருளாதார நெருக்கடியான இவ்வேளையில் மோட்டார் சைக்கிள்களை உரிய வகையில் பராமரிக்க வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதை Stafford Motors நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அது மாத்திரமன்றி, பராமரிப்பு தேவைப்படுகின்ற வாகனத்திற்கு அவசியமான, எந்தவொரு உதிர்பாகத்திற்கும் 15% தள்ளுபடியை Stafford Motors நிறுவனம் வழங்குகின்றது. இந்த வாகன பரிசோதனை ஊக்குவிப்புப் பிரசாரமானது, மாகாண ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளதோடு, மேல் மாகாணத்தில் 2023 மே 15 – 20 வரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வடமேல் மாகாணத்தில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, ஜூன் 17 வரை ஏனைய மாகாணங்களிலும் இது முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக கணிசமாக குறைவடைந்த, மோட்டார் சைக்கிள்களின் அனைத்து சேவை நடவடிக்கைகளையும், விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு திறனை அதிகரிக்கவும் இப்பிரசாரத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊக்குவிப்பு பிரசாரத் திட்டம் குறித்து, Stafford Motors நிறுவனத்தின், கள சேவைகள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் சம்பத் வாசல முதலி கருத்துத் தெரிவிக்கையில், “எமது Honda வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் திருப்தியே எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த நாடளாவிய பிரசாரத் திட்டத்தின் மூலம், Honda மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் உரிய தரமான நிலையில் இருப்பதை அறியவும், அவர்கள் நம்பிக்கையுடனும் மன நிம்மதியுடனும் தமது வாகனத்தில் பயணிப்பதற்கும், அதிக பயணத் தூரத்தை மேற்கொள்வதனை உறுதி செய்வதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.

Honda மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை அறிமுகப்படுத்துவது, தங்கள் வாகனங்கள் நிபுணர்களால் பரிசோதிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதை மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் உறுதிசெய்ய, அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் செல்வதை ஊக்குவிப்பதும் இப்பிரசாரத் திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும். கடந்த சில வருடங்களாக முகர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஊக்குவிப்பு பிரசாரத் திட்டமானது, முகவர்கள் மற்றும் Honda மோட்டார்சைக்கிள் உரிமையாளர்களுக்கு இடையே பிணைப்புகளை உருவாக்கவும், அதனை புதுப்பிக்கவும் வழிவகுத்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *