பம்பலப்பிட்டியில் ஒரு அதிநவீன காட்சியறையை திறந்துள்ள Unity Systems PVT Ltd

இலங்கையிலுள்ள முன்னணி அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் கணனி விற்பனை நிலையமான Unity Systems PVT Ltd தனது புத்தம் புதிய விற்பனை நிலையத்தை பிரமாண்டமாக பம்பலப்பிட்டியில் திறந்து வைத்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. இந்த அற்புதமான வளர்ச்சியானது அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை காண்பிக்கிறது. Unity Plaza வில் முன்பு காணப்பட்ட இந்த காட்சியறையானது, தற்போது இணையற்ற ஷொப்பிங் அனுபவத்தை உறுதி செய்வதோடு, மேலதிக வசதியாக விற்பனைக்குப் பின்னரான சேவை மையத்தையும் கொண்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத் தயாரிப்புகளின் வரிசையை கொண்டுள்ள Unity Systems PVT Ltd, கணனி ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் அன்றாடப் பயனர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தன்னை அர்ப்பணித்துள்ளது. புதிய பம்பலப்பிட்டி விற்பனை நிலையமானது, வாடிக்கையாளர்களின் கணனி அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் நோட்புக்குகள், உயர் ரக வர்த்தகநாம கணனிகள், கணனித் திரைகள், பிரின்டர்கள் மற்றும் தொழில்முறை ரீதியான கணனிப் பாகங்கள் ஆகியவற்றின் விரிவான தெரிவுகளை கொண்டுள்ளது.

2004 இல் நிறுவப்பட்ட Unity Systems PVT Ltd ஆனது, கணனி தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் செல்ல வேண்டிய ஒரு இடம் எனும் நற்பெயரைப் பெற்றுள்ளது. ASUS, DELL, HP, Acer, Lenovo, Microsoft போன்ற தொழில்துறையின் முன்னணி நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட மறுவிற்பனை கூட்டாளர் எனும் வகையில் Unity Systems PVT Ltd வழங்கும் ஒவ்வொரு தயாரிப்பின் நம்பகத்தன்மையுடன் தரத்திற்கான உத்தரவாதத்தையும் அளிக்கிறது. இவ்வாறான பெறுமதி மிக்க கூட்டாண்மையானது, சந்தையில் கிடைக்கக் கூடிய சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வாய்ப்பை ஏற்படுத்துகிறது. Unity Systems PVT Ltd ஆனது, வணிக பெறுநிறுவனங்கள் மற்றும் டெண்டர் அடிப்படையிலான திட்டங்களையும் எளிதாக்குகிறது.

Unity Systems PVT Ltd பணிப்பாளர் டி.ஜி. வசந்த தினுவன் இது தொடர்பில் தெரிவிக்கையில், Unity Systems PVT Ltd விற்பனை நிலையத்தை பம்பலப்பிட்டிக்கு கொண்டு வருவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு எமது புதிய காட்சியறை ஒரு சான்றாக விளங்கும். ஒவ்வொரு தனிநபரின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான சரியான தீர்வு எம்மிடம் உள்ளது என்பதை, எம்மிடமுள்ள கணனி உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் உறுதிப்படுத்துகின்றன. அறிவார்ந்த மற்றும் நட்புறவுடனான எமது ஊழியர்கள், போட்டித் தன்மை கொண்ட விலையில், வாடிக்கையாளர்கள் சிறந்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு எப்போதும் உதவத் தயாராக உள்ளனர்.” என்றார்.

தனது விரிவான தயாரிப்புகளுக்கான சலுகைகள் மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறையில் Unity Systems PVT Ltd பெருமை கொள்கிறது. நீங்கள் இத்துறையில் ஒரு முன்னணி நிபுணராகவோ அல்லது புதிய கணனி பயனராக இருந்தாலும், பிரத்தியேகமான வழிகாட்டல் மற்றும் உதவியை வழங்க Unity Systems PVT Ltd காட்சியறையில் உள்ள எமது நிபுணத்துவம் கொண்ட ஊழியர்களின் உதவியை நீங்கள் பெறலாம். அவர்களது ஆழ்ந்த அறிவு மற்றும் 10 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன், வாடிக்கையாளர்களுக்கு தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுவதோடு, தமது தேவைகளுக்கு ஏற்ற சரியான தொழில்நுட்ப தீர்வுகளை கண்டறிவதை அவர்கள் உறுதி செய்வதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.

பம்பலப்பிட்டியில் புதிய Unity Systems PVT Ltd காட்சியறை திறப்பு விழாவானது, நிறுவனத்திற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். அனைவரையும் தங்களது புதிய காட்சியறைக்குச் சென்று, அது வழங்கும் ஓப்பற்ற ஷொப்பிங் அனுபவத்தை பெறுமாறு Unity Systems PVT Ltd அழைப்பு விடுக்கிறது. இல. 83 காலி வீதி, கொழும்பு 04 இல் அமைந்துள்ள இப்புதிய விற்பனை நிலையமானது, தொழில்நுட்ப ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்துறையில் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விரும்பும் அனைத்து கணனி பயனர்களையும் வரவேற்கத் தயாராக உள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *