பல்வேறு நன்மைகளுடன் Huawei சேவைத் திருவிழா ஆரம்பம்

Huawei, தனது சேவைத் திருவிழாவை (Huawei Service Carnival) 2021 நவம்பரில் ஆரம்பித்துள்ளதுடன், அது டிசம்பர் 31 வரை நாடளாவிய சேவை மையங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம், Huawei சாதனங்களுக்கு புதிய தோற்றத்தை வழங்கும் வகையிலான், பிரத்தியேக சேவைகள், சலுகைகள், ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வெகுமதிகளை வழங்குகின்றது. தெரிவு செய்யப்பட்ட Huawei சாதனங்களுக்கு இச்சேவைகள் மற்றும் நன்மைகள் பொருந்தும். அந்த வகையில் ஒரே விலை மின்கல மாற்றீடு, திரை மற்றும் பின்புற மூடி மாற்றுவதற்கான தள்ளுபடி, இலவச ஸ்கிரீன் ப்ரொடெக்டர் அமைப்பு, பின்புற மூடி பாதுகாப்பு அமைப்பு (back cover protector) தள்ளுபடி வரையிலான சலுகைகள் வழங்கப்படுவதோடு, ரூ. 43 இலிருந்து 200GB வரையான சேமிப்பகத்தையும் அது வழங்குகின்றது.
இச்சலுகைக் காலத்தின் போது, ரூ. 1, 899 / ரூ. 2, 599 / ரூ. 2, 799 ஆகிய சலுகை விலையில் அதன் பெறுமதியான வாடிக்கையாளர்கள் மின்கலங்களை மாற்றுவதற்கு தகுதி பெறுகின்றனர். இந்த விலைகள் மின்கலம் மற்றும் ஊழியர் சேவை கட்டணம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது என்பதால், வாடிக்கையாளர்களுக்கு இது மாபெரும் நன்மைபயக்கக் கூடியதாகும். இதன்போது மாற்றப்படும் மின்கலங்கள் 90 நாள் உத்தரவாதத்தை பெறுவதோடு, இவ்வுத்தரவாதம் மின்கலம் மாற்றப்பட்ட பின் சாதனத்தை பெற்றுக் கொண்ட திகதியிலிருந்து ஆரம்பமாகிறது. ஒரே விலை மின்கல மாற்றீடு சலுகையானது, Huawei இனது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களிலும் செல்லுபடியாகும் என்பதுடன், P series, Mate series, Nova series, Y series, Honor 4C, G Play mini, GR3 2017, GR5 2017, MediaPad M3 Lite 10.1, MediaPad T2 7.0, Honor 4C, G Play mini, GR3 2017, GR5 போன்ற தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளுக்கு இது செல்லுபடியாகும். இப்பிரசார சலுகைகளில் பங்கேற்பவர்களுக்கு, திரை மற்றும் பின்பக்க மூடியை மாற்றீடு செய்ய, உத்தரவாதம் நிறைவடைந்த பழுதுபார்க்கும் தேவை கொண்ட, தெரிவு செய்யப்பட்ட உதிரிப் பாகங்களுக்கான தள்ளுபடி விலைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. தள்ளுபடி விலைகள் யாவும் உரிய உதிரிப் பாகங்களுக்கு மாத்திரமே பொருந்தும் என்பதுடன் இதற்கு பழுதுபார்க்கும் ஊழியர் சேவை கட்டணம் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Huawei Service Carnival வழங்கும் மற்றொரு அற்புதமான நன்மை ரூ. 43 இலிருந்து 200GB வரையான சேமிப்பக வசதியாகும். இது ஒரு மாதத்திற்கு மாத்திரம் செல்லுபடியாகும். தற்போது Huawei Mobile Cloud சேமிப்பக சந்தா சேவையில் பதிவு செய்யாத, இலங்கையில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு Huawei ID இற்கும் இது பொருந்தும். இந்த ஊக்குவிப்பிற்கான சந்தா ஒவ்வொரு மாதமும் உரிய கட்டணத்தில் தானாக புதுப்பிக்கப்படும் என்பதுடன் உரிய வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் தங்கள் சந்தாவை இரத்துச் செய்யலாம். Huawei Mobile Cloud சேவையானது, EMUI 5.1 மற்றும் அதற்கு மேற்பட்ட Huawei சாதனங்களுக்கு மாத்திரம் கிடைக்கிறது.
இத்திருவிழாவின் மிக அற்புதமான அம்சம் யாதெனில் Share-to-Win செயற்பாடாகும். இதில் வாடிக்கையாளர்கள் ஆச்சரியமிக்க பரிசுகளை வெல்ல தகுதியுடையவர்களாகின்றனர். Huawei Service Carnival இற்கான இணைய முகவரி, Huawei Mobile Facebook பக்கத்தில் உள்ளது. தங்களது Facebook கணக்குகளில் அதனை Like செய்து, இந்நிகழ்வு பற்றிய தங்களின் கருத்துகளுடன், #HuaweiServiceCarnivalLK எனும் ஹேஷ்டேக் உடன், குறித்த இணைப்பை பகிர வேண்டும். இவ்வாறு இடப்படும் இடுகை குறைந்தபட்சம் 100 Like இனை எட்டும் நிலையில், அதனை ஸ்கிரீன் ஷொட் எடுத்து, குறித்த இணையத்தில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது விபரங்களுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பரிசு வகைகள், பாகங்கள், கிடைக்கும் அளவு என்பன முதலில் வருவோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்படும்.
தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சேவைத் திருவிழா குறித்து இலங்கையின் Huawei சாதனங்களின் நாட்டுக்கான தலைவர் பீட்டர் லியு கருத்துத் தெரிவிக்கையில், “எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக Huawei சேவைத் திருவிழாவை உற்சாகமூட்டும் சலுகைகளுடன் மேற்கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சேவைத் திருவிழாவில் பல்வேறு சலுகைகள் மற்றும் உத்தரவாதங்கள் மற்றும் தள்ளுபடிகள் போன்ற விசேட நன்மைகள் வழங்கப்படுகின்றன. Huawei சேவை மையங்களின் நம்பிக்கை மற்றும் உத்தரவாதத்தின் மூலம் அசல் உதிரிப் பாகங்கள் மூலம் தங்கள் சாதனங்களை பழுதுபார்ப்பதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.” என்றார்.
Huawei Service Carnival தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, 0112423017 எனும் இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும் அல்லது My Huawei App/Support App வழியாக நேரடியாக ஒன்லைன் சட் மூலம் தொடர்பு கொள்ளவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *