புதிய சிந்தனையுடன் தினமும் புதிய பிரச்சினையைத் தீர்க்க மீண்டும் 7UP® இன் FIDO DIDO

~இப்புதிய பிரசாரம் 7UP இன் Think Fresh தத்துவத்தை வலுவூட்டுவதுடன், வேடிக்கையான தொடருக்கான மற்றுமொரு பிரசாரத்தை இணைக்கிறது~

தெளிவான புத்துணர்ச்சியூட்டும் பானமான 7UP®, இலங்கை இளைஞர்கள் அன்றாடம் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டறிவதை ஊக்குவிக்கிறது. 7UP® இன் ‘Think Fresh’ (திங்க் ஃப்ரெஷ் – ‘ப்ரெஷ்ஷா யோசி’) தொடரின் ஒரு பகுதியாக இன்று ஆரம்பிக்கப்பட்ட அதன் இப்புதிய பிரசாரத்தின், சிந்தனையைத் தூண்டும் கருத்து, ஒரு வேடிக்கையான அணுகுமுறையின் மூலம் எம்மை நோக்கி வரும் மாறுபட்ட பந்துகளை எதிர்கொள்வதற்கான நகைச்சுவையான மற்றும் வேடிக்கையான தீர்வுகளைக் கண்டறியும் வகையில் அமைகின்றது. இந்த நகைச்சுவையான குறுகிய நிமிட வீடியோக்களில், அனைவராலும் மிகவும் விரும்பப்படுகின்ற, சுருண்ட தலைமுடியுடனான 7UP® உருவமான Fido Dido வலம் வருகின்றது. அது தினசரி எதிர்கொள்ளும் வித்தியாசமான சவால்களுக்கான பதிலை விளையாட்டுத்தனமான மற்றும் கூளான முறையில் வெளிப்படுத்துகின்றது.

7UP® யின் இந்த ஆக்கபூர்வமான பிரசாரம், வீதியைக் கடக்க முயலும் ஒரு வயதான பெண்மணி, வீதிக் கடவையின் குறுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு காரின் காரணமாக, வீதியை கடக்க முடியாமல் தடுமாற்றத்தை எதிர்கொள்கிறார்.  இதன் போது Fido Dido மற்றும் அதன் நண்பர்களும் இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள குதிக்கிறார்கள்.  ஒரு ‘Think Fresh’ நடவடிக்கையாக, Fido தன்னிடமுள்ள 7UP® ஐ விரைவாக எடுத்துக் குடித்துவிட்டு ஒரு புதிய யோசனையுடன் வருவதை அதில் காணலாம். இதன்போது காரின் முன்பகுதியிலுள்ள பொனட்டில் (bonnet) Fido ஏறி காரின் மேல் குறுக்காக நடந்து வீதியைக் கடந்து செல்வதுடன், காரின் சாரதி அவரது முட்டாள்தனத்தை உணர வைக்கிறது. இதனைத் தொடர்ந்து வயதான பெண்மணி மகிழ்ச்சியுடன் Fido Dido வின் கன்னத்தை செல்லமாக கிள்ளி, அதன் உடனடியான தீர்வைப் பாராட்டுவதோடு குறித்த வீடியோ நிறைவடைகிறது.

இப்புதிய பிரசாரம் பற்றி, PepsiCo, Flavors, இலங்கை பிராந்தியத்தின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் பணிப்பாளர் நசீப் பூரி தெரிவிக்கையில், “இந்த வேடிக்கையான பிரசாரத்தின் மூலம் நாம் கூற விரும்பும் செய்தி யாதெனில், உங்கள் வாழ்க்கையில் எந்தவொரு மாறுபட்ட பிர்ச்சிகைள் வந்தாலும், ‘Think Fresh’ (புதிதாக சிந்தியுங்கள்) மூலம் சிரமமின்றி தீர்வுகளைக் கண்டறியுங்கள். அன்றாட வாழ்க்கையில் சமூக மட்டத்தில் நியாயமான, முறையான தீர்வுகள் இல்லாத நாம் எதிர்நோக்கும் சில குழப்பமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான, புதிய சிந்தனைக்கான ஆற்றலை இந்த வீடியோ பிரதிபலிக்கிறது. தந்திரம் மிக்க சூழ்நிலைகளில் தெளிவான பானத்தை அருந்தி நுணுக்கமான, வினோதமான, குளிர்ச்சியான மனதுடன் வழமைக்கு மாற்றமாக சிந்தித்து அதிலிருந்து விடுபட இளைஞர்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். 7UP இன் ‘Think Fresh’ தத்துவம் நையாண்டியான வடிவில் வெளிவரும் என்று நாம் நம்புவதுடன், இது எமது நுகர்வோர் மத்தியில் வலுவாக எதிரொலிக்கும் என்றும் நம்புகிறோம்.

7UP® பிரசாரம் தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்கள், ஏனைய ஊடகங்கள், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளின் ஊடாகவும் பரப்பப்படும். 7UP® வழக்கமான மற்றும் நவீன சில்லறை விற்பனை நிலையங்கள், தெரிவு செய்யப்பட்ட இணைய வர்த்தக தளங்களில் தனியான மற்றும் ஒன்றிணைந்த பொதிகளில் கிடைக்கிறது.

இப்புதிய பிரசாரத்தைப் பார்வையிட, இங்கே கிளிக் செய்யவும் – https://www.youtube.com/watch?v=4wmjxCKrESg

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *