புத்தம் புதிய துணை நிறுவனமான Rootcode AI இனை அறிமுகப்படுத்திய Rootcode Labs

புத்தாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தும் மென்பொருள் நிறுவனமான  Rootcode Lab, தனது தகவல் தொழில்நுட்ப பயணத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. அந்நிறுவனம் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பிரதானமாக ஐரோப்பிய, அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகளுக்கு வழங்கி வருகின்றது. இலங்கையை தலைமையகமாகக் கொண்டுள்ள Rootcode Labs , தனது வியாபார அலுவலகங்களை எஸ்டோனியா மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கொண்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது உலகிற்கு புதிய எண்ணக்கருவல்ல.  கடந்த சில தசாப்தங்களாக அது சீராக வளர்ச்சியடைந்து வருகின்றமையையும்,  கடந்த சில வருடங்களாக அதன் வளர்ச்சி அசுர வேகத்தில் உள்ளமையையும் நாம் கண்டு வருகின்றோம். தற்போது செயற்கை நுண்ணறிவானது எங்கும் காணப்படுகின்றதொன்றாகியுள்ளதுடன்,  பல துறைகளின் தொழில்நுட்ப செயற்பாடுகளில் மட்டுமன்றி விநியோக சங்கிலி முதல் சுகாதார பராமரிப்பு வரையிலான பிரதான வணிக செயன்முறைகளிலும் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உலகம் பூராகவும் உள்ள வணிகள் செயற்கை நுண்ணறிவை செயற்பாடுகளின் வினைத்திறனை மேம்படுத்தவும், மனிதனால் முடியாத மாதிரிகளை அடையாளம் காண்வதற்கும் பயன்படுத்தி வருகின்றன.

அண்மையில் தனது துணை நிறுவனங்களில் ஒன்றான Rootcode AI இனை Rootcode Labs அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்வு கொழும்பு Mövenpick ஹோட்டலில்  மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதுடன், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இடம்பெற்றது. இலங்கை வணிகத்துறையில் உள்ள உயர் பதவிகளை வகிக்கும் நிறைவேற்று அதிகாரிகள், ஆரம்பநிலை வணிகங்களின் ஸ்தாபகர்கள் மற்றும் Rootcode Labs  அணியினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு AI இன் கவர்ச்சிகரமான தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியதுடன், இது இனிமேலும் ஒரு ஆராய்ச்சிப் பகுதி அல்லவென்பதுடன் வணிகங்கள் எதிர்கொள்ளும் மிகவும் சிக்கலான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறையாகும் என்பதையும் விளக்கியிருந்தது. இந்த காரணத்தினாலேயே Rootcode AI தன்னை ஒரு AI தீர்வுகள் வழங்குநராக – ஆராய்ச்சி, கட்டிடக்கலை, உற்பத்தி மற்றும் தொழில் தர செயலிகள் மற்றும் உத்திகள் ஆகியவற்றில் பரந்த அனுபவத்துடன் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கபூர்வமான மாற்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளது.

இந் நிறுவனத்தின் அண்மைய வெற்றி தொடர்பில் கருத்து தெரிவித்த Rootcode Labs இன் பிரதான நிறைவேற்று அதிகாரி அழகன் மஹாலிங்கம், “புத்திசாலித்தனமான மனிதர்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு செயல்திறனை அதிகரிப்பதிலும், மனிதர்களுக்கு தனியாக சமாளிக்க கடினமாக இருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்க முடியும். எங்கள் அண்மையில் தொடங்கப்பட்ட துணை நிறுவனமான Rootcode AI மூலம், வணிகங்கள், மனிதநேயம் மற்றும் நாம் வாழும் உலகத்தின் நலனுக்காக அதன் சக்தியைப் பயன்படுத்த முற்படுகிறோம்,” என்றார்.

இதன் போது அழகன் மஹாலிங்கத்தால் அறிவுபூர்வமான குழு விவாதமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.  இதில் Randhula De Silva – Co-founder and CEO of GLX, Mangala Perera – Vice president of IFS, and Mohammed Fawaz – Founder and CEO of Curve Up  ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் தொழில்துறைகளில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் குறித்து விவாதித்ததுடன், AI க்கு பின்னால் உள்ள நெறிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

Fortune Business Insights 2020 இன் பிரகாரம் செயற்கை நுண்ணறிவிற்கான சந்தையின் பெறுமதி 27.23 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. இது 2027 ஆம் ஆண்டில் 266.92 பில்லியன் அமெரிக்க டொலர்களாக, சுமார் 10 மடங்கால் வெறும் 6 வருடங்களில் அதிகரிக்குமென கணிக்கப்படுகின்றது. மேலும் 10 வணிகங்களில் ஒன்று செயற்கை நுண்ணறிவில் முதலிட்டு வருகின்றமையானது, இதில் வணிக சமூகம் கொண்டுள்ள ஆர்வத்துக்கான வெளிப்பாடாகும்.

இந்நிலையில், Rootcode Labs இன் துணை நிறுவனமான Rootcode AI அனைத்து தொழிற்துறைகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு தமது வியாபாரத்தை முன்னோக்கி கொண்டு செல்ல மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவினால் வலுவூட்டப்படும் தீர்வுகளை கட்டமைத்து உதவுவதில் ஆர்வத்துடன் உள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *