பெண்கள் சமத்துவ தின கொண்டாட்டங்களில் பெண்களை வலுவூட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஃபெம்ஸ் கைகோர்த்துள்ளது

இலங்கையில் முன்னணி பெண்களின் சுகாதார வர்த்தகநாமங்களில் ஒன்றான ஃபெம்ஸ், ‘‘நிலைபேற்றியலுடனான எதிர்காலத்திற்கான இன்று பாலின சமத்துவம்’’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகின்ற சர்வதேச பெண்கள் சமத்துவ தினம் 2022 இற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. பெண்களுக்கு வலுவூட்டுவதற்காக, குறிப்பாக மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுத்தம் மீதான சமூக களங்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முயற்சிகளுடன், ஃபெம்ஸ் தனது தயாரிப்பு வழங்கல்களுக்கும் அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளது. இது இலங்கைப் பெண்களின் நாடித் துடிப்பைப் புரிந்துகொண்டு அவர்கள் தமது இலக்குகளை அடைய உதவும் முயற்சியில் அவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு வர்த்தகநாமமாகும்.

இந்த வர்த்தகநாமம் 18 ஆண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில், அனைத்து வயது மட்டத்திலான பெண்களுக்கும் ஆதரவளிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பது மட்டுமன்றி, பல்வேறுபட்ட சமூக முயற்சிகளினூடாக பெண்களின் நலனுக்கும் பங்களித்து வருகின்றது. மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மாதவிடாய் குறித்த சமூக களங்கத்தைப் போக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் உழைக்கும் இலங்கையின் முதன்முதல் வர்த்தகநாமங்களில் ஒன்றாக ஃபெம்ஸ் மாறியுள்ளதுடன், காலத்தின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் கட்டுபடியான விலையில் அனைத்து இலங்கை பெண்களின் தேவைக்கும் உதவும் வகையில் ஃபெம்ஸ் அவள்என்ற சுகாதார அணையாடையை அறிமுகப்படுத்தியது. இது தரத்தில் எவ்விதமான குறைவுமின்றி மாதவிடாய் காலத்தின் போதான சுகாதார வசதியின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு கட்டுபடியான தெரிவாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபெம்ஸின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளரான ரொசேல் பெரேரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “ஒரு முன்னணி பெண்மை பராமரிப்பு வர்த்தகநாமமாக இருப்பதால், ஃபெம்ஸ் எப்போதும் பெண்களுக்கு வலுவூட்டுதல் மற்றும் பாலின சமத்துவத்திற்கு ஆதரவாக இருந்து வருகிறது. சர்வதேச பெண்கள் சமத்துவ தினம் 2022 கொண்டாடப்படுவதால், நாம் சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்தி, இந்தச் செய்தியை நாம் எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் முக்கிய பங்காற்றவும், பெண்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தவும் இந்த வர்த்தகநாமம் தயாராக உள்ளது.” என்று குறிப்பிட்டார்.

இன்னுமொரு மாபெரும் அடியை முன்னெடுத்து வைத்து, இலங்கைப் பெண்கள் மத்தியில் பரந்த அளவில் அறிவூட்டுவதற்கும், மாதவிடாய் விடயங்கள் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஃபெம்ஸ் நாடளாவிய ரீதியில் ஃபெம்ஸ் அவள் முயற்சியை ஆரம்பித்தது. இந்த முயற்சி மெரில் ஜே. பெர்னாண்டோ அறக்கட்டளை, Arka முயற்சி, சர்வோதய பெண்கள் இயக்கம் மற்றும் சர்வோதய ஃபியூஷன் போன்ற கூட்டாளர் அமைப்புகளால் மிகவும் பாராட்டப்பட்டதுடன், அவற்றால் வெகுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஃபெம்ஸ் இன் வழிகாட்டலுடன் இந்த அமைப்புக்கள் கடந்த ஆண்டில் நேரடியான செயலமர்வுகள் மற்றும் இணையவழி பயிற்சி அமர்வுகள் மூலம் கிராமப்புறங்கள் மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் 2906 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வலுவூட்டியுள்ளன.

ஃபெம்ஸின் மற்றொரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, பாலின வேறுபாடின்றி, ஹேமாஸ் கொன்சியூமர் பிராண்ஸ் இன் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் ஃபெம்ஸ் அவள் சுகாதார அணையாடைகளை விநியோகித்தது. தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சூழ்நிலைகளில் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுத்தம் பற்றிய கலந்துரையாடலை இயல்பாக்குவதற்கு இந்த முயற்சி ஒரு கருவியாக இருந்தது. ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் டராஸ் போன்ற வர்த்தக நிறுவனங்களுக்காக இந்த வர்த்தகநாமம் செயலமர்வுகளை நடத்தி, அனைத்து பாலினத்தவர்களுக்கும் இவ்விடயத்தில் அறிவூட்டுவதற்கும், சகாக்கள் மற்றும் குடும்பங்களுக்கு இடையேயான உரையாடலை இயல்பாக்குவதற்கும் வழிவகுத்தது.

பெண்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட வர்த்தகநாமமாக, மாதவிடாய் பராமரிப்பு தொடர்பான மிகவும் பிரச்சனை கொடுக்கும் கவலைகளை நிவர்த்தி செய்வதிலும், பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு நலன் அளிக்கும் இந்த விடயத்தைப் பற்றிய கலந்துரையாடலை சமூகமயமாக்குவதிலும் ஃபெம்ஸ் முக்கிய பங்காற்றுகிறது.

முற்றும்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *