மகளிர் தின கொண்டாட்டத்தில் பன்முகத்தன்மை, உட்படுத்தலை தழுவும் ராஜா ஜூவலர்ஸ்

தங்க நகை உலகில் நேர்த்தி மற்றும் விசேடத்துவம் பெற்று விளங்கும் ராஜா ஜூவலர்ஸ், சர்வதேச மகளிர் தினம் நெருங்கும் இவ்வேளையில், வலுவூட்டல், உட்படுத்தல், நேர்த்தியான கைவினைத்திறன் ஆகியவற்றின் கொண்டாட்டத்திற்காக 2024 மார்ச் 07 முதல் 09 வரை தயாராகிறது.

சர்வதேச மகளிர் தினமானது, உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அந்த வகையில், ராஜா ஜூவலர்ஸ் இந்த அர்த்தமுள்ள கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறது. தமது வணிகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை மதிக்கின்ற ராஜா ஜூவலர்ஸ், பெண் கைவினைஞர்கள், வடிவமைப்பாளர்கள், முகாமையாளர்கள், பணிப்பாளர்கள், சந்தைப்படுத்துவோர் உள்ளிட்ட நகைத் துறையில் உள்ள பலதரப்பட்ட பாத்திரங்களை வகிப்பவர்களை கௌரவிக்கிறது. ஆபரண கைவினைத்திறனானது, ஒரு பாலினத்துடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதோடு, பாலினத்தைப் பொருட்படுத்தாமல் தனிநபர்களின் திறமைகள் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் மேலோங்கி வளர்கிறது என்பதை இந்த கொண்டாட்டமானது கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த விசேட தினத்தைக் குறிக்கும் வகையில், ராஜா ஜூவலர்ஸ் உள்ளக மற்றும் வெளியக நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. மார்ச் 08 ஆம் திகதி, சர்வதேச மகளிர் தினத்தில், உள்ளக ஊழியர்களின் அர்ப்பணிப்பை மதிக்கும் வகையில் பிரத்தியேகமான கொண்டாட்ட நிகழ்வொன்று நடத்தப்படவுள்ளது. மார்ச் 09 ஆம் திகதி, ராஜா ஜூவலர்ஸ் காட்சியறைகளில் வாடிக்கையாளர்களுக்கு விசேட கொண்டாட்ட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இங்கு அவர்கள் சர்வதேச மகளிர் தினத்துடன் ஒன்றரக் கலந்து, பிரத்தியேகமான தயாரிப்புகளின் அனுபவத்தை பெறலாம்.

இக்கொண்டாட்டங்கள் தொடர்பில் தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய, ராஜா ஜூவலர்ஸ் நிர்வாக பணிப்பாளர் அத்துல எலியபுர, “ராஜா ஜூவலர்ஸ் ஆகிய நாம், எமது சமூகத்தில் பெண்களின் பாரிய பங்களிப்பை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் கடமைப்பட்டுள்ளோம். சர்வதேச மகளிர் தினம் தொடர்பான எமது நிகழ்வுகள் மற்றும் பிரத்தியேக சலுகைகள், பெண்களை வலுவூட்டுவதிலும் எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்குவதிலுமான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.” என்றார்.

இந்த கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக, பெண்களின் பல்வேறு தேவைகள் மற்றும் தெரிவுகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏராளமான நகை வடிவமைப்புகளை ராஜா ஜூவலர்ஸ் வழங்குகிறது. சுமார் 80% ஆன அதன் தயாரிப்புகள் பெண்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒப்பற்ற தெரிவுகளை வழங்குகிறது. தனித்துவமான மற்றும் நாகரிகமான டிசைன்களை விரும்பும் உயர்தர வாடிக்கையாளர்களுக்கு, ஆச்சரியமூட்டும் வைர நகை வடிவமைப்பான Paragon அமைகின்றது. விலைமதிப்பற்ற மற்றும் வண்ணக் கற்களின் நேர்த்தியாக அமைக்கப்பட்ட தனித்துவமான இரத்தினங்களுடனான வடிவமைப்புகளை தேடும் பெண்களுக்கு ஏற்றதாக Serendib வடிவமைப்புகள் காணப்படுகின்றன. Opera வடிவமைப்புகள், தொழில் புரியும் பெண்கள் மற்றும் தொழில்முனைவோருக்காக தனித்துவமான தெரிவுகளை கொண்டதாக அமைகின்றன.

இக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரத்தியேக சலுகைகளையும் அறிமுகப்படுத்த ராஜா ஜூவலர்ஸ் உற்சாகமாக உள்ளது. இதில் தெரிவு செய்யப்பட்ட வடிவமைப்புகளுக்கு விசேட தள்ளுபடிகள், தெரிவு செய்யப்பட்ட கடனட்டைகளுக்கு மாதாந்த தவணைத் திட்டங்கள் மற்றும் குறித்த நிகழ்வு தினத்தில் (மார்ச் 09) நகைகளைக் கொள்வனவு செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அற்புதமான பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக புகைப்பட பகுதியின் மூலம் மறக்கமுடியாத தருணத்தை படம்பிடித்து, உடனடியாக புகைப்படங்களாக நினைவுப் பரிசுகளாக பெற வாடிக்கையாளர்கள் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *