முதலாவது Michelin Tyre Service கான்செப்ட் ஸ்டோர் கொழும்பில் திறப்பு

உலகின் டயர் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான Michelin, அதன் உள்ளூர் பங்குதாரரான, இலங்கையின் முன்னணி பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO உடன் இணைந்து, இலங்கையின் முதலாவது அதிநவீன Michelin Tire Service (MTS) கான்செப்ட் ஸ்டோர் (concept store) நிலையத்தை அண்மையில் கொழும்பில் திறந்து வைத்துள்ளது.

இலங்கையின் முதலாவது MTS காட்சியறையானது, குசும் டயர்ஸ், இல. 822, கொழும்பு – கண்டி வீதி, தோரண சந்தி, களனி எனும் முகவரியில் நிறுவப்பட்டுள்ளது. இது மொத்தமாக 8,000 சதுர அடி பரப்பளவில் மிக அழகிய சூழலில், புதுமையான டயர் மற்றும் உதிரிப்பாகங்களின் காட்சிப்படுத்தலுடன் அமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக பயிற்சி பெற்ற நிர்வாகிகளின் வலுவான குழுவுடன், டயர் மற்றும் வாகனம் தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்குவதற்கான முழுமையான சேவை மையத்தையும் இப்புதிய ஸ்டோர் கொண்டுள்ளது.

India Cluster வர்த்தகப் பணிப்பாளர் மனீஷ் பாண்டே இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “நாட்டில் எமது விநியோகம் தொடர்பான தடத்தை வலுப்படுத்தி வரும் நிலையில், Michelin Tyre Service கான்செப்ட் ஸ்டோர் ஆனது, மிகச் சிறந்த கொள்வனவு அனுபவத்தை வழங்கும் என்பதோடு, அதனை இலங்கைக்குக் கொண்டு வருவதில் நாம் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இந்நிலையத்தின் மூலம், இலங்கையில் உள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான சூழலையும், தொழில்துறையில் முன்னணித் தயாரிப்புகளையும் சேவைகளையும் வழங்கவுள்ளோம்.” என்றார்.

DIMO நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித பண்டார தெரிவிக்கையில், “இது DIMO மற்றும் எமது நீண்டகால பங்காளியான Michelin இற்கு உண்மையில் ஒரு சிறந்த மைல்கல்லாகும். Michelin உடன் இணைந்து, DIMO சிறந்த வாடிக்கையாளர் மதிப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளதுடன், இந்த கான்செப்ட் ஸ்டோர் மூலம் நாம் தொழில்துறையை புதுமையான அணுகுமுறையுடன் மறுவரையறை செய்கிறோம். கனவுகள் மற்றும் அபிலாஷைகளைத் தூண்டும் நோக்கத்துடன், DIMO எப்போதும் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க முயற்சித்து வருகிறது.

Michelin இனால் உருவாக்கப்பட்டுள்ள சில்லறைக் கருத்திட்டமான, Michelin Tyre Service ஸ்டோர் ஆனது, சில்லறை டயர் விற்பனை நிலையங்களின் ஒரு சுயாதீனமான தொழில்முறை வலையமைப்பின் ஒரு பகுதியாகும் என்பதுடன், இது Michelin டயர்கள் மற்றும் ஏனைய தரக்குறியீட்டு டயர்களையும் வழங்குகிறது. அத்துடன் டயர் பழுதுபார்ப்பு, சக்கர சமநிலை மற்றும் சக்கர சீரமைப்பு போன்ற தொழில்முறை சேவைகளையும் வழங்குகின்றது. எண்ணெய் மற்றும் மின்கலத்தை மாற்றுதல், விரிவான பிரேக் ஆய்வு மற்றும் மாற்றுதல், சிறிய இயந்திரவியல் பழுதுபார்ப்பு சேவைகள் போன்ற டயர் அல்லாத சேவைகளையும் இது வழங்குகின்றது. இவை அனைத்தையும் போட்டி மிக்க விலைகள் மற்றும் கட்டணங்களில், நட்பு ரீதியான அணுகலுடன், சுத்தமான, பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலில் ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது.

இலங்கையில் Michelin டயர்களுக்கான ஒரே விநியோகஸ்தரான DIMO, நாடு முழுவதும் உள்ள நீண்ட கால, புகழ்பெற்ற வணிக நிறுவனங்களான அதன் விநியோகஸ்தர் வலையமைப்பு மூலம், மோட்டார் சைக்கிள், பயணிகள் கார், SUV, ட்ரக் மற்றும் பஸ் டயர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வாகனங்களுக்கான Michelin டயர்களை வழங்குகிறது. மிகச் சிறப்பான மட்டத்தில் உள்ள Michelin தரக்குறியீடானது, DIMO வின் நம்பிக்கை மற்றும் அதன் விற்பனைக்குப் பிந்தைய இணையற்ற சேவைகள் மூலம் ஆதரிக்கப்படுகிறது.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *