மூங்கில் கொட்டன் பட்ஸ்களை அறிமுகப்படுத்தும் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி

ஹேமாஸ் கொன்ஷியுமர் பிராண்ட்ஸின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேமி செரமி, குழுமத்தின் பேண்தகமையை நோக்கிய பயணத்திற்கு இணைவாக மூங்கிலைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கொட்டன் பட்ஸை அண்மையில் அறிமுகப்படுத்தியமையின் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க உதவும் அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்த மூங்கில் கொட்டன் பட்ஸ்கள் 100% உயிரியல் முறையில் சிதைவடையக் கூடியவை என்பதுடன், அவற்றின் தண்டு இயற்கை மூங்கிலாலும், முனைப் பகுதியானது தூய பருத்தியைக் கொண்டும் தயாரிக்கப்படுகிறது. எமது தேசத்தின் குழந்தைகளுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான தயாரிப்புகளை வழங்குவதில் தொடர்ந்து பாடுபடும் ஒரு வர்த்தகநாமம் என்ற வகையில், அதன் விநியோகச் சங்கிலி முழுவதிலும், சுற்றுச்சூழலுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துபவற்றை குறைப்பதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. நீண்ட கால பேண்தகு வளர்ச்சிக்கு சூழலுக்கு தீங்கான விளைவை ஏற்படுத்தாத மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதில் பேபி செரமி ஆர்வமாக உள்ளது. இந்த 100% உயிரியல் முறையில் சிதைவடையக் கூடிய புதிய கொட்டன் பட்ஸ்கள் அந்த இலக்கை அடைவதற்கான தொடர்ச்சியான முயற்சியின் விளைவாகும்.

“எங்கள் குழந்தைகள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் வளர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புவதால், பேபி செரமி என்றுமே எங்கள் பெறுமதியான நுகர்வோருக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் வர்த்தகநாமமாக திகழ்கின்றது. அதேபோல, எங்கள் குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் சுத்தமான சூழலில் வாழ வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஹேமாஸ் கொன்சியுமர் பிராண்ட்ஸ் அதன் செயற்பாடுகளை சுற்றுச்சூழல் பேண்தகைமைக்கு ஏற்றவாறு மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த புதிய மூங்கில் கொட்டன் பட்ஸின் அறிமுகமானது சுற்றுச்சூழல் பேண்தகைமைக்கான பரப்பில் சந்தையில் மாற்றத்தை முன்னெடுக்கும் எங்கள் முயற்சிகளில் முன்நோக்கிய மற்றொரு படியாகும்,” என ஹேமாஸ் கொன்சியுமர் பிராண்ட்ஸின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் பியோனா ஜூரியன்ஸ் முனசிங்க கருத்து தெரிவித்தார்.

வலுவான வர்த்தகநாம பெறுமதி மற்றும் பாரம்பரியத்துடனும், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் தனது திறனை இந்த வர்த்தகநாமம் நம்புகிறது. நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான இலங்கை அரசின் முயற்சிகளுக்கு உதவும் முகமாக, பேபி செரமி தனது வளங்களை 100% உயிரியல் முறையில் சிதைவடையக் கூடிய மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த சுற்றுச்சூழல் நட்பு ரீதியான தயாரிப்பு கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி செய்வதற்கும் வடிவமைப்பதற்கும் முதலீடு செய்துள்ளது.

பேபி செரமியானது,  சவர்க்காரம், ஷாம்பூ, பேபி கொலன், பேபி கிறீம் மற்றும் லோஷன், பேபி அணையாடைகள், துடைப்பான்கள்,   சலவைத்தூள் மற்றும் திரவம், போத்தல் வோஷ், கொட்டன் பட்ஷ், பேபி பரிசுப் பொதிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான குழந்தை பராமரிப்பு தயாரிப்பு வரிசையின் மூலம் குழந்தைகளை போஷிக்கின்றது. தன் உயர் தரமான தயாரிப்புகள் மற்றும் அதி நவீன உற்பத்திச் செயன்முறைக்கான அங்கீகாரமாக இலங்கையில் குழந்தை சவர்க்காரங்களுக்கான SLS சான்றிதழைப் பெற்ற முதல் குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமம் பேபி செரமி ஆகும். அனைத்து பேபி செரமி தயாரிப்புகளும் குழந்தையின் தோலில் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும் பொருட்டு தோலியல் சார்ந்த பரிசோதனைக்குட்படுத்தப்படுவதுடன், IFRA (International Fragrance Association) இனால் சான்றளிக்கப்பட்ட வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *