மேம்பட்ட சேவைகளுடன் புதுப்பிக்கப்பட்ட தோற்றத்துடன் Huawei சேவை மையங்கள்

உலகளாவிய ரீதியில் புத்தாக்கமான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, புத்தம் புதிய தோற்றத்துடனும் மேம்பட்ட சேவைகளுடனும் புதுப்பிக்கப்பட்ட ஐந்து வாடிக்கையாளர் சேவை மையங்களில், உச்ச பயிற்சி பெற்ற அதன் ஊழியர்களுடன் நுகர்வோருக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குகிறது. பம்பலப்பிட்டி, மஹரகம, கண்டி, அநுராதபுரம், காலி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் Huawei சேவை மையங்கள் அமைந்துள்ளன. அதன் நன்கு அனுபவம் வாய்ந்த மற்றும் அனைத்து வளங்களையும் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் கருவிகளைப் பயன்படுத்தி, நுகர்வோருக்கு சிறந்த உதவியை வழங்க Huawei செயற்பட்டு வருகின்றது. ஸ்மார்ட்போன் மற்றும் டெப்லட் பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் உத்தரவாத சேவைகள் போன்ற சேவைகள் இங்கு வழங்கப்படுகின்றன. Huawei தலைமை அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் நேரடியாக, விரிவான, பயிற்சியைப் பெற்ற திறமையான மற்றும் தகுதி வாய்ந்த ஊழியர்களிடமிருந்து, முதல் தர சேவைகள் மற்றும் ஆலோசனைகளை நுகர்வோர் பெறுவார்கள். சந்தையில் தனது தரக்குறியீடு மேலும் வளர்ச்சி அடைந்து வருவதால், வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட தேவைகளையும் நிவர்த்தி செய்யும் பொருட்டு, வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக, தமது சேவை வழங்கலுக்கான உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. Huawei இலங்கையில் ஒரு தீவிரமான விரிவாக்கத் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில், இந்த சேவை மையங்களின் அமைப்பானது அதிநவீன வசதிகளை வழங்குவதை உறுதி செய்துள்ளது. வாடிக்கையாளர்கள், அர்ப்பணிக்கப்பட்ட குழுவொன்றிடமிருந்து, உரிய கவனத்துடன், தங்களுக்கு வசதியான இடத்தில், தொந்தரவு இல்லாத சேவையை அணுகும் வாய்ப்பை இது மேலும் உறுதி செய்கின்றது.

Huawei சேவை மையங்கள்: கொழும்பில் இல: 9, 1/2 புகையிரத நிலைய வீதி, பம்பலப்பிட்டி வீதி, MC இற்கு அருகில் மற்றும் வர்த்தக நிலைய இல: B4, இல 125, Amity Shopping Complex, ஹைலெவல் வீதி, மஹரகம மற்றும் கண்டிக் கிளை இல: 337, பேராதனை வீதி, கண்டியிலும், அநுராதபுரக் கிளை இல: 514/3B, சமனல கட்டடம், மைத்திரிபால சேனநாயக்க வீதி, அநுராதபுரம் எனும் முகவரியிலும்; காலிக் கிளை, இலக்கம்: 60A, கொழும்பு வீதி, களுவெல்ல, காலியிலும்; யாழ்ப்பாணக் கிளையானது வர்த்தக நிலைய இல 20, இல: 80, மாநகர கட்டடத் தொகுதி, கஸ்தூரியா வீதி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. அனைத்து Huawei சேவை மையங்களும் அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களின் Huawei ஸ்மார்ட் சாதனங்களை புதுப்பித்த நிலையில் பேணும் பொருட்டான சேவைகளை வழங்குவதுடன், விசேட தள்ளுபடிகள் மற்றும் ஊக்குவிப்புகளையும் அவை வழங்குகின்றன.

Huawei சாதனங்களின் நாட்டுக்கான தலைவர் Peter Liu இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “Huawei அதன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது ஸ்மார்ட்போன்களை புதுப்பித்து, கிருமிகள் இல்லாத மற்றும் பாதுகாப்பானதாக பேண உதவும் வகையில் அவர்களுக்கு முதல் தர சேவைகளை தொடர்ந்தும் வழங்கும். Huawei யினால் அங்கீகரிக்கப்பட்ட பழுதுபார்த்தல் சேவைகளை மாத்திரம் உரிய வகையில் பேணுவதன் மூலம், உயரிய மற்றும் விரிவான ஸ்மார்ட் வாழ்க்கை அனுபவத்தைப் பெற முடியும் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்திருப்பது அவசியமாகும். அங்கீகரிக்கப்படாத சேவை வழங்குநர்கள் Huawei இன் உரிய சான்றளிக்கப்பட்ட பழுதுபார்க்கும் கருவிகளைக் கொண்டிருப்பதில்லை என்பதுடன், அவர்கள் தொழில்துறை ரீதியாகப் பயிற்சி பெற்றவர்களாகவோ அல்லது அத்தகைய சேவைகளைச் செய்வதற்குத் தேவையான அறிவைக் கொண்டவர்களாகவோ இருக்கமாட்டார்கள். இலங்கையில் உள்ள எமது புதுப்பிக்கப்பட்ட 6 Huawei சேவை மையங்களிலும், உயர் பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் நாம் நுகர்வோருக்கு சேவைகளை வழங்குகிறோம்.” என்றார்.

Huawei சேவை மையங்கள் தற்போது நுகர்வோருக்கு பல்வேறு விசேட சலுகைகளை வழங்குகின்றன. தெரிவு செய்யப்பட்ட Huawei ஸ்மார்ட் போன் மாதிரிகளின் மின்கலங்களை மாற்றும்போது அதற்கு தள்ளுபடிகள் வழங்கப்படுவதுடன், விசேட சேவை தின சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, நான்கு முக்கிய களங்களில் ஒருங்கிணைந்த தீர்வுகளுடன், புத்தாக்கம் கொண்ட ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக அறியப்படுவது மட்டுமல்லாமல், இலங்கையில் உள்ள ஆறு Huawei சேவை மையங்கள் மூலம் அதன் அனைத்து நுகர்வோருக்கும் முதன்மையான சேவைகள் மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் உறுதியாக இருந்து வருகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *