மேம்பட்ட பாவனையாளர் அனுபவத்திற்காக இலங்கை முழுவதும் வாடிக்கையாளருக்கு முதலிடம் வழங்கும் சேவை வசதிகளை வழங்கும் vivo

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் உயர்தரமான வாடிக்கையாளர் சேவையினை வழங்கும் பொருட்டு தனது ஒன்லைன் சேவையை விரிவுபடுத்தியுள்ளது. அதன் விற்பனைக்குப் பின்னரான சேவைகள் மூலம், நிறுவனம் அதன் அண்மைய தயாரிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி உள்ளூர் நுகர்வோருக்குத் தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், பெறுமதி சேர்க்கப்பட்ட முயற்சிகளுடன் இடைவிடாமல் நுகர்வோருக்கு உதவ பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. vivo தனது பாவனையாளர்கள் சிறந்த தெரிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு தேவையான சேவைகளை வழங்க அதன் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.vivo Support இனைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் இப்போது வர்த்தகநாமத்தின் விற்பனைக்குப் பின்னரான சேவைகளுக்கான அணியுடன் நேரடியாக எந்த இடையூறும் இல்லாமல் தொடர்புகொள்ள முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் vivo support இணையதளத்தில் உள்நுழைவதன் மூலம் துணைப்பொருட்கள், உதிரிப்பாகங்களுக்கான விலைக்கழிவு மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலைகளையும் சரிபார்க்க முடியுமென்பதுடன், சேவை தொடர்பான சந்தேகங்களையும் உடனடியாக தீர்த்துக் கொள்ள முடியும்.

இளைஞர்களுக்கான ஒரு வர்த்தகநாமமாக, ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க vivo முயற்சிப்பதுடன், சிறப்பு சேவை நாட்கள் மூலம் வாடிக்கையாளர் திருப்தியில் விசேட கவனம் செலுத்துகிறது. இந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட vivo சேவை மையங்களில் இருந்து vivo இன் சேவைகளை இலவசமாகப் பெறலாம். ஸ்கீரின் புரொட்டெக்டிங் ஃபிலிம்களை இலவசமாக ஒட்டுதல், இலவச ஸ்மார்ட்போன் சர்வீசிங் & க்ளீனிங், ஃபிளாஷ் ரிப்பயர், ஸீரோ லேபர் கோஸ்ட் ரிப்பயர் மற்றும் இலவச மென்பொருள் அப்டேட்கள் ஆகியவை இச் சேவைகளில் அடங்கும். மேலதிக வசதிக்காக adapters, data/USB cables, headphones ஆகியவற்றை  விலைக்கழிவுடன் கொள்வனவு செய்யும் வாய்ப்பையும் வர்த்தகநாமம் வழங்குகிறது.

வாடிக்கையாளர்களே ஒவ்வொரு வணிகத்தினதும் மிகப்பெரிய சொத்தென்பதுடன்,  vivo Sri Lanka வாடிக்கையாளரது திருப்தியை  தொடர்ந்து உறுதி  செய்யும் முகமாக அதன் முயற்சிகளை மேம்படுத்தி வருகிறது. விசுவாசமான வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் மட்டுமல்லாமல், நேர்மறையான பரிந்துரைகள் மற்றும் வலுவான வாடிக்கையாளர் சேவை மூலம் புதியவர்களை ஈர்ப்பதிலும் வாடிக்கையாளர் திருப்தி முக்கிய பங்கு வகிக்கிறது என்று வர்த்தகநாமம் நம்புகிறது. எனவே, எங்கள் உள்ளூர் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை மேம்படுத்துவதற்கும், மாற்றியமைப்பதற்கும் vivo தொடர்ந்து வழிகளைக் கண்டறிந்துள்ளது.

இது தொடர்பில் vivo Sri Lankaவின் பணிப்பாளர் எலிசன் ஜின் கருத்து தெரிவிக்கையில், “எங்கள் அன்பான பாவனையாளர்களுக்கு இடையூறு இல்லாத கொள்வனவு அனுபவத்தை வழங்கும் அதே வேளையில், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய, அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலான பொறுப்பான வர்த்தகநாமமாக vivo ஆகிய நாம் இடையறாது செயல்படுகிறோம். கடந்த காலங்களில் எங்களின் முயற்சிகளுக்கு எங்கள் வாடிக்கையாளர்கள் சாதகமாக பதிலளித்துள்ளdan, இலங்கையில் vivo ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தை உருவாக்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களின் அர்த்தமுள்ள, அதிநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளிலிருந்து பாவனையாளர்கள் பயனடையக்கூடிய வகையில், எங்கள் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு முடிந்த வரையில் விரைவாக வழங்குவதையும், அவர்களின் சந்தேகங்களை விரைவில் தீர்த்து வைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.  எங்கள் வாடிக்கையாளர்களை எவ்வித சூழ்நிலையிலும் ஆதரிப்பதற்கும் அவர்களுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குவதற்கும் vivo இங்குள்ளது,” என்றார்.

கொழும்பிலும் காலியிலும் உள்ள இரண்டு பிரத்தியேக கிளைகள் மூலம் தேசிய அளவில் தனது வாடிக்கையாளர்களை சென்றடைவதன் மூலம் இந்த வணிகமானது நாட்டிலுள்ள வாடிக்கையாளர் தொடர்பை மூலோபாய ரீதியாக பலப்படுத்தியுள்ளது. புவியியல் வரையறைகளைக் கடப்பதன் மூலம், சிரமமில்லாத ஷொப்பிங் மற்றும் விற்பனைக்குப் பின்னரான சேவை அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில் வாடிக்கையாளர்களை வரவேற்கும் அதிநவீன வசதிகள் மற்றும் உபகரணங்களை vivo உறுதிசெய்கிறது.

ஆழ்ந்த நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் பெற, வாடிக்கையாளர் அவர்களின் கேள்விகள் மற்றும் தேவைகளை நிகழ்நேரத்தில் தீர்க்க Live Chat  சேவை செயல்படுத்தப்படுகிறது*. vivo சேவைகளை துரித அழைப்பான: 011 20 29 184, Facebook மற்றும் மின்னஞ்சல் மூலம் எளிதாக அணுகலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் கேள்விகளுக்கு துரித அழைப்பு, Facebook மூலம் சில நொடிகளிலும், [email protected] மூலமாக 24 மணிநேரத்திற்குள்ளும் பதிலைப் பெற முடியும். வணிக விடுமுறை நாட்களைத் தவிர்த்து, வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த எண் செயல்படும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *