யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவை நுகர்வோருடன் கொண்டாடும் Diva Power

Diva Power மற்றும் Hemas Consumer Brands குழுமத்தின் ஏனைய முக்கிய அழகுசாதன வர்த்தகநாமங்களான Velvet, Paris, Kumarika, Vivya போன்றன கடந்த 2022 ஓகஸ்ட் 23 – 27 வரை நடைபெற்ற நல்லூர் திருவிழாவின் போது தமது பங்களிப்பை வழங்கியிருந்தன. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அடிப்படை மட்டத்திலிருந்தான முயற்சியாக அதன் நுகர்வோருடன் நேருக்கு நேர் ஒருவரையொருவர் மீண்டும் இணைக்கும் வாய்ப்பை வர்த்தகநாமம் பெற்றிருந்தது. இங்கு மக்களை ஈர்க்கும் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் குலுக்கல் போட்டிகள் உள்ளிட்ட விடயங்களுடனான ஒரு கூடம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் வாடிக்கையாளர்களை உற்சாகமூட்டும் பரிசுகள் மற்றும் மாபெரும் பரிசாக சலவை இயந்திரத்தை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. அது மாத்திரமன்றி, தள்ளுபடிகளைக் கொண்ட பல்வேறு கூப்பன்களும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டதோடு, அச்சலுகைகளை, அடுத்த முறை Diva கொள்வனவு செய்யும் போது பெற்றுக் கொள்ள முடியும். இதே நேரத்தில், யாழ்ப்பாணம் முழுவதும் உள்ள தெரிவு செய்யப்பட்ட SMMT விற்பனை நிலையங்களிலும் இதேபோன்ற நிகழ்வுகளை Diva Power நடாத்தியது.

Diva Power விசேட வகையானது, Colour Guard, Germ Guard ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. Colour Guard ஆனது, ஆடைகளின் நிறத்தைப் பாதுகாக்க உதவுகின்றது. Germ Guard ஆனது, வேம்பு மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைக் கொண்டுள்ளதன் மூலம் ஆடைகளில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றது. அத்துடன், இது சிறந்த துப்புரவை மேற்கொள்வதோடு, சலவை இயந்திரங்களில் பயன்படுத்த உகந்ததாகும். இந்த இரண்டு வகைகளும் திரவ மற்றும் தூள் வடிவில் கிடைக்கின்றன.

யாழில் மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலம், மக்களுக்கு Diva Power வகைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, நுகர்வோர் இந்த வர்த்தக நாமத்துடன் ஒன்றிணைவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் Diva Power, இந்த பயணத்தில் நுகர்வோருடன் தனது ஈடுபாட்டை தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.

About Hemas Consumer வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகளின் தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட  புத்தாக்கம் கொண்ட குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த வகையில், அர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து, மேலும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *