ரசிகர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஒக்டோபர் 8 வரை நீடிக்கப்பட்டுள்ள Big Bad Wolf ஒன்லைன் புத்தக விற்பனை

அத்தியாவசிய தொழிநுட்ப ஆலோசனை வழிகாட்டலின் கீழ் இலகுவான அனுபவத்தை உறுதிசெய்கின்றது.

இவ் வருடம் www.bigbadwolfbooks.lk இணையத்தள முகவரியினூடாக மீண்டும் திரும்பியுள்ள உலகின் மாபெரும் புத்தக மலிவு விற்பனையானது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிறைவு திகதியான ஒக்டோபர் 4 இலிருந்து தற்போது ஒக்டோபர் 8 ம் திகதி இரவு 11.59 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னர் என்றும் இல்லாத அளவில் பலர் தமக்கு விரும்பிய புத்தகங்களை இவ் இணையத்தளத்தின் ஊடாக தேடிப் பெற்றுக்கொண்டு வருகின்ற காரணத்தினால், குறிப்பிடத்தக்க அளவிலான புத்தகப் பிரியர்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம் மலிவு விற்பனையை Big Bad Wolf குழுவானது மேலும் நான்கு நாட்கள் நீடிப்பதற்கு தீர்மானித்ததன் மூலம் தமது தீவிர ரசிகர்களுக்கு மேம்பட்ட ஷொப்பிங் அனுபவத்தை வழங்குகின்றது.

Big Bad Wolf Books இணை ஸ்தாபகர் ஜக்குலின் என்ஜி இந்த விற்பனைத் திகதி நீடிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “விற்பனையின் முதல் மூன்று நாட்களிலேயே கிடைக்கப்பெற்ற மிகப்பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, எமது ரசிகர்களை, எம் மீதான அவர்களது உற்சாகம் மற்றும் ஆதரவுக்காக கௌரவிக்க விரும்பினோம். எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு பின்னூட்டத்தையும் நாம் மதித்து பாராட்டுகின்றோம். சகல கேள்விகளையும், கோரிக்கைகளையும் தீர்க்கவும், பூர்த்தி செய்யவும் எம் தொழிநுட்ப மற்றும் வாடிக்கையாளர் உதவிக் குழுவின் உதவியுடன் அயர்வின்றி நாள் முழுதும் உழைக்கின்றோம். இந்த திகதி நீடிப்பானது எமது ரசிகர்கள், இவ்வாண்டு reader’s portal ஊடாக கிடைக்கக்கூடிய மேலும் பல வகைப்பட்ட புத்தகங்களை ஆராய்ந்து பெற்றுக்கொள்ள அதிக கால அவகாசத்தை வழங்குகின்றது,” எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, cartcheckout இனை கிளிக் செய்தவுடன், இணையத்தளமானது, PayHere மற்றும் Sampath வங்கியால் வலுவூட்டப்படும் அந்தந்த கட்டண நுழைவாயில் பக்கங்களுக்கு திருப்பி விடப்படும் என  வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகின்றது. ஒரு ஓர்டரை இறுதி செய்வதற்காக வாடிக்கையாளர்கள் “view cart” ஐ கிளிக் செய்து, அந்தந்த வங்கிகளால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான கட்டண முறை மூலம் பணம் செலுத்தத் தயாரானவுடன் checkout இற்கு செல்லுமாறு குழு கேட்டுக்கொள்கிறது. சில டெபிட் அட்டைகள் இயல்பாகவே இந்த வசதியை செயல்படுத்தாததால், Sampath வங்கி அல்லாத வாடிக்கையாளர்கள் தொந்தரவு இல்லாத பரிவர்த்தனை செயல்முறையை உறுதி செய்யும் ஒன்லைன் கட்டண வசதியை செயல்படுத்த அந்தந்த அட்டை சேவை மையங்களுடன் பேசுவதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். Sampath வங்கி அட்டைகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து ஒன்லைன் பரிவர்த்தனைகளுக்கும், வாடிக்கையாளர்கள் மிகவும் பாதுகாப்பான பரிவர்த்தனையை செயல்படுத்தும் பொருட்டு SMS வழியாக ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெறுவார்கள். பரிவர்த்தனைகளுக்கான உத்தரவாதத்தை ஒப்புதல் ரசீது / விலைப்பட்டியல் மூலமாகவும், அந்தந்த credit  அல்லது debit  அட்டை நிதி நிறுவனம் மூலமாகவும் பெறலாம். OTP தகவல்களைப் பெறுவதற்காக ரசிகர்கள் தங்கள் மொபைல் SMS அறிவிப்புகளை செயற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்தந்த நிதி நிறுவனத்திடமிருந்து ஒரு ஓடர் இரத்து செய்தியைப் பெற்றால், ஓடர் எண்கள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிசெய்து இருமுறை சரிபார்க்கும் படி வாடிக்கையாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஒருவர் cart விபரங்களை refresh செய்வதன் காரணமாக ஓர்டர் நகல் செய்தி கிடைக்கப்பெறலாம்.

தொழிநுட்ப குழுவானது மேலும் விபரிக்கையில், “ஒரு தடவை நீங்கள் பணம் செலுத்தும் பக்கத்தில் உள்ளபோது, அந்த இணையப்பக்கத்தை refresh செய்வதோ அல்லது அப்பக்கத்திலிருந்து வெளியேறுவதோ முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால், உங்களது ஓடர் தானாகவே இரத்துச்செய்யப்பட்டுவிடும். நீங்கள் மறுபடியும் குறித்த கணக்கினூடாக லொகின் செய்து உள்நுழைந்து, இரத்துச்செய்யப்பட்ட ஓடரை மீளப்பெறவோ / உங்களுக்குப் பிடித்த தெரிவுகளை மீள ஓடர் செய்யவோ முடியும். “கட்டணம் செலுத்தமுடியாமை” அல்லது “ஓடர் இரத்துச் செய்யப்பட்டது” எனும் தகவல்களைப் பெறுமிடத்து, உரிய வங்கி/ நிதி நிறுவனத்தை அதன் கணக்கு அட்டை அழைப்பு நிலையமூடாக தொடர்புகொண்டு, இந்த கொள்வனவைப் பூர்த்தி செய்யத் தேவையான முன்நிபந்தனைகளை அறிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.”

Big Bad Wolf  குழுவானது அதன் ஒன்லைன் புத்தக விற்பனையின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கு தயாராக உள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு புதிய ஒன்லைன் ஷொப்பிங் அனுபவத்தை அளித்துள்ளது. இது தொடர்பிலான உதவிகளுக்கு, The Big Bad Wolf Books Facebook  இற்கு நேரடியாக தகவலை அனுப்பவோ அல்லது  online Support Help Centre இற்கு தகவலை அனுப்பவோ முடியும்.  தொற்றுநோய் நிலையானது சமூக ஊடக மற்றும் இலத்திரனியல் வர்த்தக பாவனையை அதிகரித்துள்ளதுடன், பலரை இலத்திரனியல் வர்த்தக சமூகத்தின் அங்கமாக மாற்றியுள்ளது. இந்த விற்பனையின் ரசிகர்கள் தங்கள் குறைகளை Big Bad Wolf  குழுவுடன் பகிர்ந்து கொள்வதை இது எளிதாக்கியதுடன், அவர்கள் தமது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

விற்பனையின் முதல் நாட்களிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான ஓடர்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், Big Bad Wolf குழு இப்போது அடுத்த சில நாட்களில் முதல் தொகுதி புத்தகங்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வாடிக்கையாளர் திருப்தியை மேலும் உறுதி செய்யும் முகமாக, மலேசியாவிலிருந்து அனுப்பப்படும் புத்தகங்களுக்கு எந்தவொரு சர்வதேச கப்பல் கட்டணமும் அறவிடப்படுவதில்லை மற்றும் வீட்டு வாசல்களுக்கே விநியோகிக்கப்படும் புத்தகங்களுக்கு உள்நாட்டு விரைவு அஞ்சல் கட்டணங்கள் வியக்கத்தக்க வகையில் குறைந்த அளவிலேயே உள்ளன.

புத்தக பிரியர்கள் www.bigbadwolfbooks.lk மூலம் புத்தகங்களை அணுகலாம், மேலும் பிக் பேட் ஓநாய் புத்தக விற்பனை தொடர்பான பிந்திய விபரங்கள் மற்றும் போட்டிகளை Facebook – ww.facebook.com/bbwbookssrilanka மூலம் மற்றும் Instagram – www.instagram.com/bigbadwolfbooks_lk மூலம்பெற்றுக்கொள்ளலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *