ராணி சந்துன் வாசனா வரம் வெற்றியாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் இலங்கையின் பாரம்பரிய வர்த்தகநாமாமன Rani Sandalwood

Rani Sandalwood இன் நம்பிக்கைக்குரிய நுகர்வோருக்கு வெகுமதி அளிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ராணி சந்துன் வாசனா வரம் ஊக்குவிப்பு திட்டத்தின் தங்க அட்டியல்  வெற்றியாளர்களை Swadeshi Industrial Works PLC  அண்மையில் அறிவித்தது.

இதன் 6 வெற்றியாளர்களான யு.மரியான் பெர்னாண்டோ- மாரவில, டபிள்யூ.டீ. சமரக்கோன்-  அனுராதரபுரம், நதீச தீப்தி ஜயதிலக்க – மெல்சிரிபுர, எச்.எச்.புஸ்ப மாலனி – மெதிரிகிரிய, ராஸ்மினி மதுஷாலி – வெலிப்பனை மற்றும் டி.டீ. மாலனி பிரியந்திகா – அம்பாறை ஆகியோருக்கு 22 கரட் தங்க அட்டியல்கள் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து பரிசாக வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்று வந்த ராணி வாசனா வரம் ஊக்குவிப்புத் திட்டத்துக்கு ஏராளமான பதில்கள் கிடைத்தன, அவற்றில் வெற்றியாளர்கள் குலுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். தங்க அட்டியல்வெகுமதிகளுக்கு மேலதிகமாக, இந்த ஆறு வார கால ஊக்குவிப்பு திட்டமானது 6 சலவை இயந்திரங்கள், 6 மைக்ரோவேவ் ஒவன்கள், 6 மீடியா பேட்கள், 6 கேஸ் குக்கர்கள், 6 ரைஸ் குக்கர்கள் மற்றும் 84 ராணி பரிசுப் பொதிகளையும் வழங்கியது.

Swadeshi பேச்சாளரொருவர் இது தொடர்பில் கூறுகையில், “எங்கள் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களுடனான  நீண்டகால உறவுக்கு நன்றி செலுத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த பிரசாரத்திற்கான சிறந்த வரவேற்பை நாங்கள் பெற்றுள்ளதுடன், மீண்டுமொரு பிரசாரத்தை மேற்கொள்வதற்கான  ஊக்குவிப்பை வழங்கியுள்ளது. இந்த பிரசாரத்துக்கு கிடைத்த வரவேற்பின் மூலம் ராணி சந்தனம் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் விரும்பத்தக்க சவர்க்காரமாக கருதப்படுகிறது. மேலும்  பெண்களின் அழகை மெருகூட்டுவதற்கான தெரிவாக ராணி சந்தன சவர்க்காரம் விளங்குகிறது,” என்றார்.

பெண்களின் அழகு அபிலாஷைகளை நிறைவேற்றும் பயணத்தில், Rani Sandalwood சருமத்தை மென்மையாக்க உதவும் அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும், ஒளிரும் மற்றும் பளபளப்பாகவும் வைத்திருக்கும். Rani Sandalwood 80 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான வர்த்தகநாமமாகும், இது பெரும்பாலும் இலங்கையில் அழகு ராணியாக கருதப்படுகிறது. மேலும், வெளிநாடுகளிலும் பரந்த அளவில் sandalwoodஅழகு பராமரிப்பு பிரிவில் ஒரு தலைவராக உருவெடுத்துள்ளது.

Swadeshi Industrial Works PLC இலங்கையில் மூலிகை சவர்க்கார தயாரிப்பின் முன்னோடியாகும். இந் நிறுவனத்தின் புதுமையான மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான முன்னேற்றங்களில் இலங்கையில் பல முதன்மையான சவர்க்காரத்தை  தயாரித்த பெருமை இந்நிறுவனத்தையே சேரும். இதில் சந்தன சவர்க்காரமான – ராணி சந்தனம்,  மூலிகை அழகு மற்றும்  குழந்தைகளுக்கான தயாரிப்பையும் உள்ளடக்கும் இந் நிறுவனத்தின் முதன்மையான வர்த்தக நாமங்களான சுதேசியின்  Khomba Herbal, Rani Sandalwood, Khomba Baby, Little Princess, Perlwite, Lak Bar, Safeplus, Lady, Black Eagle Perfume மற்றும் Swadeshi Shower Gel வரிசை ஆகியவை அடங்கும்.

Swadeshi Industrial Works PLC என்பது ISO 9001: 2015 சான்றளிக்கப்பட்ட நிறுவனமாகும், இதில் சிறந்த மூலிகைகள் கலவைகளை பயன்படுத்துவதுடன், அதன் அனைத்து மூலப்பொருட்களும்  ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுவதுடன், தரத்தை உறுதிப்படுத்த தயாரிப்புகள் முழுமையாக பரிசோதிக்கப்படுகின்றன.

அனைத்து Swadeshi தயாரிப்புகளும் 100% விலங்கு சேர்மானங்கள் அற்றவை மற்றும் விலங்குகள் மீது சோதிக்கப்படவோ மற்றும் துன்புறுத்துவதுமில்லை.

பட விளக்கம்:

Swadeshi Industrial Works PLCஇன் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் மற்றும் ராணி சந்துன் வாசனா வரம  பிரசாரத்தின் வெற்றியாளர்கள் தங்க அட்டியல்களுடன்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *