வாகன உதிரிப் பாகங்களுக்கு விசேட விலைக் கழிவுகளை வழங்க Greasemonkey.lk உடன் இணைந்துள்ள Orient Finance

ஜனசக்தி குழுமத்தின் கீழுள்ள முன்னணி நிதிச் சேவை வழங்குனரான Orient Finance PLC, தனது 41ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் வகையில், அதன் வாடிக்கையாளர்களுக்கு விசேட சலுகைகள் மற்றும் விலைக் கழிவுகளை வழங்குவதற்காக, இலங்கையின் மிகப் பெரும் வாகன இணைய வர்த்தகத் தளமான Greasemonkey.lk உடன் கைகோர்த்துள்ளது.

இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, Greasemonkey.lk ஆனது Orient Finance வாடிக்கையாளர்களுக்கு வாகன உதிரிப்பாகங்கள், வாகன பராமரிப்புப் பொருட்கள், எஞ்சின் ஒயில், மசகு எண்ணெய்கள், வாகன தரநிலை அறிக்கை பெறுவதற்கான சேவை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றிற்கு பல்வேறு வகையான விசேட விலைக் கழிவுகளை வழங்குகிறது. அனைத்து Orient Finance வாடிக்கையாளர்களும் www.greasemonkey.lk மூலமான விசேட ஒன்லைன் சலுகைகளைப் பெறுவதற்காக, விசேட குறியீடு (special code) வழங்கப்படும்.

அந்த வகையில் இக்கூட்டாண்மை தொடர்பில், Orient Finance PLC நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கே.எம்.எம். ஜபீர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு இந்த பெறுமதி சேர் சேவைகளை வழங்க Greasemonkey.lk உடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் எதிர்கொள்ளும் சவாலான நேரங்களில், இவ்வாறான பெறுமதி சேர் சேவைகளின் மூலம், வாடிக்கையாளர்கள் அவர்களது பணத்தை திறனான வகையில் பயன்படுத்துவதற்கும் பல்வேறு வழிகளில் செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும் எமது வாடிக்கையாளர்களை வலுவூட்டுவதற்காக நாம் கடினமாக பாடுபட்டு வருகின்றோம். இதன் மூலமான கொள்வனவு நடவடிக்கைகளை ஒரு சில கிளிக்குகள் மூலம் மேற்கொள்ள முடிவதோடு, சிரமமின்றி வீட்டு வாசலுக்கே பொருட்கள் கொண்டு சேர்க்கப்படுவதால், எமது வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வசதியான வகையிலும் உரிய நேரத்தில் தீர்வுகள் வழங்கப்படுவதையும் இது உறுதி செய்கிறது. எமது வாடிக்கையாளர்கள் இந்த பிரத்தியேக சலுகையைப் பயன்படுத்தி அதன் பலனை அனுபவிப்பார்கள் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 4 தசாப்தங்களாக எமது வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், பங்குதாரர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு தொடர்பில் நாம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்வருடம், நாம் எமது 41ஆவது வருட நிறைவைக் கொண்டாடும் நிலையில், ​​இந்த கடினமான காலத்தில் எமது வாடிக்கையாளர்களுக்கு உதவ அதிக உச்ச சேவைகளை வழங்குவதற்காக எமது விதிமுறைகளை கடந்து நாம் எமது செயற்பாடுகளை புதுப்பித்துள்ளோம்,” என்றார்.

Greasemonkey.lk நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிதுக்‌ஷ விதுசிங்க தெரிவிக்கையில், “இலங்கையில் பெரும் மதிப்பைக் கொண்டுள்ள ஒரு நிதி நிறுவனமான Orient Finance PLC உடன் இணைந்து பணியாற்றுவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள், வாகன பராமரிப்புக்கு மிக அவசியமானவையாகும். எமது இணையத்தளத்தில் அவை தொடர்பான பல்வேறு தெரிவுகள் காணப்படுகின்றன. நாம் இலங்கையின் மிகப் பெரிய வாகன இணைய வர்த்தகத் தளமாக உள்ளதோடு, எதிர்காலத்தில் Orient Finance மூலம் வழங்கப்படும் சலுகைத் திட்டத்தை ஏனைய தயாரிப்புகள் மற்றும் சேவை வகைகளுக்கும் விரிவுபடுத்த நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

கடந்த 41 வருடங்களுக்கும் மேலாக, Orient Finance PLC ஒரு புத்தாக்கமான, வாடிக்கையாளர் மையப்படுத்திய நிதிச் சேவை வழங்குனராக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் சேவையுடன் இணைந்தவாறு சரியான நேரத்தில் சிறந்த சேவைத் தயாரிப்புகளை நிறுவனம் வழங்கி வருகிறது. நீண்ட கால அடிப்படையில் வாடிக்கையாளருடன் பரஸ்பர நன்மைகளைப் பகிர்ந்தவாறு, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வெற்றியை வழங்கும் தீர்வுகளை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. Orient Finance தொடர்ச்சியாக முன்னேற்றமடைந்து, நிதி தொடர்பான நல்வாழ்வை எளிதாக்குவதன் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்கச் செய்யும். வளர்ச்சி மற்றும் விசேடத்துவம் கொண்ட இந்த அற்புதமான சகாப்தத்தில், புதிய மூலோபாய மையப்படுத்தல் மற்றும் முன்முயற்சித் திட்டங்கள், நிலைபேறான வளர்ச்சியை நோக்கி Orient Finance நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *