வியக்க வைக்கும் காட்சிகளுடன் கூடிய TCL 20 Pro 5G ஸ்மார்ட்போன் CES 2022 Innovation Award விருதை வென்றுள்ளது

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப நிகழ்வான Consumer Electronic Show (CES), திருப்புமுனை தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய புத்தாக்குனர்கள் அவற்றை வெளிக்காண்பிக்கும் களமாக அமைந்துள்ளது. உலகின் மிகப் பெரிய வர்த்தகநாமங்கள், வணிக நடவடிக்கைளை மேற்கொண்டு, புதிய கூட்டாளர்களைச் சந்திக்கும் இடமும், அறிவுக் கூர்மையான புத்தாக்குனர்கள் உருவாக்கப்படும் களமும் இதே மேடை என்பது குறிப்பிடத்தக்கது. TCL இன் அடுத்த தலைமுறை முதன்மையான ஸ்மார்ட்போன் சாதனமான TCL 20 Pro 5G  ஆனது, அதன் சக்திவாய்ந்த 6.67-அங்குல AMOLED முகத்திரை முழுவதும் உண்மையில் உயிரூட்டும் வண்ணம், தெளிவு மற்றும் வர்ண மாறுபாடுகளுடன் வியக்க வைக்கும் காட்சிகளை வழங்குகின்ற நிலையில், CES 2022 Innovation Award Honoree என்ற விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

TCL 20 Pro 5G ஆனது மேம்படுத்தப்பட்ட NXTVISION, மேம்பட்ட முகத்திரை உச்சப்பயனாக்கத் தொழில்நுட்பத்துடன் வெளிவருவதுடன், இது ஒரு பிரத்தியேக அனுபவத்தை வழங்கி, கூர்மையான மாறுபாட்டு விபரங்களைக் காண்பிக்கும் அதேவேளையில், அதிக மாறுபாடுகளை மேம்படுத்தும் வண்ணத் துல்லியத்தையும் மேம்படுத்துகிறது. TÜV Rheinland குறைந்த நீல ஒளிர்வுக்கான சான்று அங்கீகாரத்தை இது கொண்டுள்ளதால், கண்களுக்கு ஏற்படுகின்ற சிரமத்தைக் குறைத்து, மேம்பட்ட அளவில் கண் பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இது அதன் Qualcomm Snapdragon processor செயலி மூலம் புரட்சிகரமான வேகம், வேகமான ஸ்ட்ரீமிங், விரைவான பதிவிறக்கங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களை வழங்குகிறது. முன் மற்றும் பின் புறங்களை எதிர்கொள்ளும் கேமராக்கள் இரண்டும் முதன்மையான Sony IMX sensor களின் அனுகூலத்தைக் கொண்டுள்ளதுடன், Optical Image Stabilization தொழில்நுட்பம் மற்றும் Backlight Selfie வடிவம் ஆகியவற்றின் பக்கபலங்களையும் கொண்டுள்ளது.

பாரிய 256GB மெமரி மற்றும் 4500mAh மின்கலம் (பட்டரி) பொருத்தப்பட்டுள்ள TCL 20 Pro 5G, எந்த நேரத்திலும் இந்த ஸ்மார்ட்போனை மீண்டும் சார்ஜ் செய்யவோ அல்லது ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட எந்தவொரு உள்ளடக்கங்களை நீக்கவோ தேவையில்லை என்பதை பாவனையாளர்களுக்கு உறுதி செய்கிறது. இரட்டை matte மற்றும் glossy (பளபளப்பான) முடிவு வேலைப்பாடு கையில் கைக்கடக்கமான மற்றும் நேர்த்தியான ஒரு சீரான வடிவமைப்பை வழங்குகிறது. matte மற்றும் glossy முடிவு வேலைப்பாடு, கிடைமட்டமாக அமைந்த அம்சங்களுடன் கடலும் வானமும் சந்திக்கும் சமுத்திர நீல வர்ணம் மற்றும் Moondust Gray பழுப்பு வர்ணம், இரட்டை பக்க முப்பரிமாண (3D) கண்ணாடி மற்றும் உட்பொதிக்கப்பட்ட கமெரா ஆகியவை முதன்மையான கைக்கடக்கமான அனுபவத்தை நீங்கள் உணரக்கூடிய முழுமையான தங்குதடையற்ற தன்மையை வழங்குகின்ற வகையில் TCL 20 Pro 5G ஆனது தோற்றத்தில் சிறந்தது.

நுகர்வோர் தொழில்நுட்ப வன்பொருள், உள்ளடக்கம், தொழில்நுட்ப விநியோக கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு உற்பத்தியாளர்கள், உருவாக்குனர்கள் மற்றும் வழங்குநர்கள் உள்ளிட்ட நிறுவனங்களை CES வெளிக்காண்பிக்கின்றது. உலகின் வணிகத் தலைவர்கள் மற்றும் முன்னோடி சிந்தனையாளர்கள் தொழில்துறையின் மிகவும் பொருத்தமான சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு மாநாட்டு நிகழ்ச்சித்திட்டமும் இதில் அடங்கும். சிங்கர் நிறுவனம் சமீபத்தில் இலங்கை சந்தையில் TCL 20 தொடரை அறிமுகப்படுத்தியிருந்தது. Consumer Electronic Show (CES) 2022 நிகழ்வில் Innovator Award Honoree என்ற விருது அங்கீகாரம் TCL 20 Pro 5G க்கு கிடைக்கப்பெற்றுள்ளமை வாடிக்கையாளர்கள் மத்தியில் இதன் மீதான நம்பிக்கையை மேலும் வளர்க்க உதவும். 10 மொபைல் தொலைபேசிகள் மற்றும் 4 டெப் சாதனங்கள் உட்பட பல தயாரிப்புகள் இப்போது www.singer.lk, சிங்கர் சில்லறை விற்பனை காட்சியறைகள் மற்றும் நாடளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகக் கிடைக்கின்றன.          

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *