விரிவான உடற்பயிற்சி கண்காணிப்பு சாதனமான Band 4e (Active) இனை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Huawei

Huawei இன் Band தொடரின் புதிய இணைப்பான Huawei Band 4e (Active) இணையற்ற சிறப்பம்சங்கள் மற்றும் மேம்பட்ட செயற்பாட்டுடன் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

6 கிராம் மட்டுமே (பட்டி இல்லாமல்) நிறை கொண்ட இந்த மிக இலகுவான ஸ்மார்ட் பேண்ட் 0.5 அங்குல PMOLED திரையுடன் வருகிறது, இது slide and touch சைகைகளையும் ஆதரிக்கிறது. Band 4e (Active) இன் நேர்த்தியான வடிவமைப்பு ஆகியன, மினரல் சிவப்பு மற்றும் கிராஃபைட் கருப்பு ஆகிய இரண்டு பட்டி வண்ணங்களுடன் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது. இதன் 40.5mm உயரம் , 14.8mm அகலம் மற்றும் 11.2mm ஆழம் என்பன கையிலோ அல்லது காலிலோ அணிந்து கொள்வதை மிகவும் சௌகரியமானதாக்குகின்றது.

Huawei Band 4e (Active) இன் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில், அதன் புதுமையான இரட்டை அணிதல் முறை, தொழில்சார் தர ஓட்ட வழிகாட்டி, சைக்கிள் ஓட்டுதல் கண்காணிப்பு, கூடைப்பந்து செயல்திறன் கண்காணிப்பு, 5ATM நீரிலிருந்தான பாதுகாப்பு, 2 வார மின்கல ஆயுள் ஆகியன முக்கிய சிறப்பம்சங்கள் என்பதுடன், இவை ஸ்மார்ட் பேண்ட் பிரிவில் ஏனையவற்றை விட சிறப்பானதாக இதனை ஆக்குகின்றது.

சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு, Huawei Band 4e (Active), அதன் தனித்துவமான cycle cadence monitoring அம்சத்துடன் ஒரு தொழில்சார் தரத்திலான ஓட்டுநர் ஆகுவதற்கு உதவுகிறது.

இது பயனரின் திறனை துல்லியமாக பதிவுசெய்கிறது. இதனால் பயனர் முடியுமான மேம்பாடுகளையும் சுழற்சியையும் மிகவும் திறமையாக அடையாளம் காண முடியும். Huawei Band 4e (Active) இன் கூடைப்பந்து பயன்முறை செங்குத்து பாய்ச்சல் தரவு, உயரம் மற்றும் செயலிழப்பு நேரம், வேகம், தூரம் மற்றும் இயக்கத்தை மேம்படுத்துவதற்கான பயன் உள்ளிட்ட இயக்க புள்ளிவிவரங்கள் போன்ற விரிவான விவரங்களை வழங்குகிறது. இந்த பேண்ட் விளையாட்டிலிருந்து விளையாட்டுக்கான செயல்திறனைப் பதிவுசெய்கிறது, இது பயனருக்கு சிறபாக பயிற்சி பெற உதவுகிறது.

இந்த பயனுள்ள கண்காணிப்பு அம்சங்களுக்கு மேலதிகமாக, Band 4e (Active) ஒரு சரியான வாழ்க்கை உதவியாளராகும், இது தூக்க கண்காணிப்பு, ஸ்டெப்கள், தூரம், கலோரிகள் கண்காணிப்பு போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க பயனருக்கு உதவுகிறது. உள்வரும் அழைப்பு / தகவல் அறிவிப்புகள், செயற்பாடுகளுக்கான நினைவூட்டல்கள், பயிற்சி நேரம், சாதனை நினைவூட்டல்கள், அலாரம், போனைக் கண்டுபிடித்தல் தெரிவு மற்றும் இது போன்ற பல்துறை அம்சங்களுடன் இது பயனருக்கு மேலும் உதவுகிறது.

5ATM நீரிலிருந்தான பாதுகாப்பு காரணமாக, பயனர் வியர்வை மிகுந்த  உடற்பயிற்சிகளிலும், சேர்பிங் அல்லது நீச்சலின் போதும் இந்த பேண்ட் இனை அணியலாம். இந்த அம்சம் பயனருக்கு பேண்ட் இனை அணியவும், மழை காலநிலையிலும் கூட உடற்பயிற்சிகளில் கலந்து கொள்ளவும் உதவுகிறது. இந்த அனைத்து திறன்களையும் அடைய, Huawei Band 4e (Active) 2 வாரங்கள் வரை மின்கல ஆயுளை வழங்கக்கூடிய பற்றரியைக் கொண்டுள்ளது.

புத்தம் புதிய Huawei Band 4e (Active), ரூபா 5,499/- என்ற வியக்க வைக்கும் ஆரம்ப விலையில் கிடைக்கின்றது. விரைவில் Huawei experience centers , அங்கீகாரம் பெற்ற Huawei மீள் விற்பனையாளர்கள், Singer காட்சியறைகள், Daraz.lk, Singer.lk   ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *