வெல்வெட் சவர்க்காரம் சருமத்திற்கு 6 மணி நேர ஈரப்பதத்தை அளிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

Hemas Consumer Brands நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெண்களுக்கான முன்னணி வர்த்தகநாமமான வெல்வெட் (Velvet), மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை அளிக்கின்ற, ஈரப்பதனூட்டும் செயற்படுத்திகள் (moisturizing actives) மற்றும் விற்றமின் A, E ஆகியவற்றுடன் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு புதிய சவர்க்காரத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது. வெல்வெட் சவர்க்காரத்தின் சிறப்பம்சம் யாதெனில், அது 6 மணி நேரத்திற்கு சருமத்தில் ஈரப்பதனை தக்கவைக்கும் திறன் கொண்டது என்பதாகும். இலங்கைப் பெண்களின் சருமத்தின் முக்கியத்துவத்தைப் எப்போதும்  புரிந்துகொண்டுள்ள வெல்வெட், பெண்கள் தங்களது சருமத்தின் வகைகள் மற்றும் நிறங்ககள் குறித்து விழிப்புடன் இருக்க அவர்களை ஊக்குவிக்கும் ஒரு வர்த்தக நாமமாகவும் திகழ்ந்து வருகிறது.

வெல்வெட் 6 மணி நேர ஈரப்பதனூட்டும் புதிய சவர்க்காரம், உடலில் உள்ள இயற்கையான ஈரப்பதத்திற்கு தீங்கு விளைவிக்கின்ற அழுக்குகளை நீக்குவதோடு, சருமத்தை கரடுமுரடான மற்றும் வரண்டதாக பேணக்கூடிய, சாதாரண சவர்க்காரங்களை விட, சிறந்த வகையில் ஈரப்பதனை தக்கவைக்கிறது என சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

தனது நுகர்வோரின் தேவைகளை எப்போதும் புரிந்து கொண்ட ஒரு வர்த்தகநாமமான வெல்வெட் அதன் சவர்க்கார தயாரிப்பை, 70 கிராம் மற்றும் 45 கிராம் பொதிகளில் வெளியிட்டுள்ளது. குறித்த இரண்டு வெல்வெட் சவர்க்கார வகைகளுக்கும் முறையே ரூ. 130 மற்றும் ரூ. 75 எனும் விலைகளை நிர்ணயம் செய்துள்ளதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தனது தயாரிப்பை மேலும் கட்டுப்படியான விலை கொண்டதாக மாற்றி மேலும் ஒரு படி முன்னே சென்றுள்ளது.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் அது இயற்கையாக கொண்டுள்ள அழகைத் தக்கவைக்கவும் ஒரு சிறந்த ஈரப்பதனூட்டி அவசியம் என்பதை வெல்வெட் புரிந்துகொண்டுள்ளது. அந்த வகையில், ஈரப்பதத்தை 6 மணி நேரத்திற்கு பேணிப் பாதுகாக்கும் சந்தையில் உள்ள ஒரே சவர்க்காரம் வெல்வெட் சவர்க்காரம் மட்டுமேயாகும்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *