இலங்கையில் முதலீட்டுக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் Unilever; சபுகஸ்கந்தவில் அதன் முதலாவது மோல்ட் பான தொழிற்சாலைக்கு அடிக்கல்

– ஒரு மில்லியன் இலங்கையர்களின் வாழ்வை மேம்படுத்தும் பயணத்தில் ரூ. 4 பில்லியன் முதலீடு

கடந்த 85 வருடங்களாக இலங்கையில் ஆழமாக வேரூன்றிய யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம், தேசத்திற்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், அதன் மோல்ட் உணவு பானங்களின் உற்பத்தியை உள்ளூர்மயமாக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் அதன் முதலாவது மோல்ட் பான தொழிற்சாலையை சபுகஸ்கந்தவில் லங்கா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் லிமிடெட் (LINDEL) வலயத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது நிறுவனம் 97% ஆன அனைத்து தயாரிப்புகளையும் இலங்கையில் உற்பத்தி செய்கிறது. அந்த வகையில் இப்புதிய திட்டம் யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளை மேலும் மேம்படுத்துகிறது. இது ரூ. 4 பில்லியன் முதலீட்டின் மூலமானது என்பதோடு, ஒரு மில்லியன் இலங்கையர்களின் வாழ்வாதாரத்திற்கான பயணத்தின் ஒரு பகுதியாக Viva மற்றும் Horlicks ஆகியவற்றை இந்த தொழிற்சாலை உற்பத்தி செய்யும்.

அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட இந்த தொழிற்சாலையில் Vacuum Bran Dryer (உலர்த்தி) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இது தயாரிப்புகளின் தரம் மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த உதவுகிறது. இலங்கையிலுள்ள குடும்பங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கத் தேவையான சக்தியுடன் தங்கள் நாளைத் தொடங்குவதற்கு, மோல்ட் மற்றும் பார்லியின் நற்குணத்தால் செறிவூட்டப்பட்ட உயர்தர Viva மற்றும் Horlicks தயாரிப்புகளின் நிலையான விநியோகத்தை இது உறுதி செய்கிறது.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில், யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹாஜர் அலபிபி தலைமையில் இடம்பெற்றதுடன், முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி ரேணுகா வீரகோன் மற்றும் கம்பஹா மாவட்ட செயலாளர் தர்ஷன பாண்டிகோரள உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர். யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்களான விநியோகச் சங்கிலி பணிப்பாளர் தமித் அபேரத்ன, சந்தைப்படுத்தல் பணிப்பாளர், வீட்டு பராமரிப்பு மற்றும் போசணை பணிப்பாளர் ஷர்மிளா பண்டார, தேசிய நிதிப் பணிப்பாளர் நிரோஷன் ஜயசூரிய மற்றும் உட்பட பல உறுப்பினர்கள் முன்னிலையில் அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றது. யூனிலீவர் தெற்காசியாவின் போசணை வணிகப் பிரிவு தலைமைத்துவ குழுவினர்களும் இதில் கலந்து கொண்டனர். அந்த வகையில் தெற்காசியாவின் போசணை மற்றும் ஐஸ்கிரீம் பிரதித் தலைவர் கவிதா ஜெயின்,  போசணை தெற்காசியா போசணைச் செயற்பாட்டு தலைவர் கிருஷ்ணன் சுந்தர்ராம், போசணை மற்றும் ஐஸ்கிரீம் தெற்காசிய நிதித் தலைவர் பிரசாந்த் பிரேம்ராஜ்கா ஆகியோர் இந்த முக்கியமான நிகழ்வில் கலந்து சிறப்பிக்க இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எம். நயீமுதீன், முதலீடு மற்றும் இலங்கையின் பொருளாதாரத்திற்கான பங்களிப்பு குறித்து கருத்தைத் தெரிவிக்கையில், “புதிய சுகாதார உணவுப் பானங்கள் திட்டத்தில் யூனிலீவரின் முதலீடானது, முதலீட்டுத் தளம் எனும் வகையில், இலங்கையின் ஆற்றலுக்கு ஒரு சான்றாகும். இந்த முதலீடானது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்து உள்ளூர் பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது. யூனிலீவர் நிறுவனம் நாட்டின் வளர்ச்சியில் முதலீடு செய்வது மட்டுமல்லாது, உயர்தர மோல்ட் உணவுப் பான வர்த்தகநாமங்களை உற்பத்தி செய்வதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும் பங்களித்து வருவது பாராட்டுக்குரியதாகும். இலங்கைக்கான யூனிலீவரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நாம் வரவேற்பதோடு, எதிர்காலத்தில் அதிக முதலீடுகளை எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவரும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் தலைவருமான தினேஷ் வீரக்கொடி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “பொருளாதார சவால்களுக்கு மத்தியில், அர்த்தமுள்ள முதலீடுகள் மூலம் நாட்டின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக, யூனிலீவர் போன்ற நிறுவனங்கள் ஆதரவளிப்பது உண்மையிலேயே புத்துணர்ச்சி அளிக்கிறது. அதற்காக யூனிலீவர் நிறுவனத்திற்கு எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையின் ஆற்றலில் நம்பிக்கை வைத்து, இது போன்ற முயற்சிகள் மூலம் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்காகவும், அவர்களின் எதிர்கால முதலீட்டுத் திட்டங்களில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.” என்றார்

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் தலைவியும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹாஜர் அலபிபி மேலும் தெரிவிக்கையில், “யூனிலீவர் ஸ்ரீ லங்கா எனும் வகையில் இது எமக்கு ஒரு பாரிய மைல்கல் ஆகும். 85 வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்து எமது பயணத்தை ஆரம்பித்தோம். எமது புதிய மோல்ட் பானங்கள் தொழிற்சாலையில் முதலீடு செய்வதானது, நாட்டின் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், 125 இற்கும் மேற்பட்ட நேரடி வேலை வாய்ப்புகளையும், மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கி, பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்க உதவும். யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் இந்த முதலீடு அனைத்து இலங்கையர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் “இலங்கை தயாராக உள்ளது”, “ஆம், இலங்கையால் முடியும்” எனும் செய்தியுடன் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். நாட்டை ஸ்திரப்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்தியமைக்காக அரசாங்கத்திற்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் எதிர்காலத்தில் பல்வேறு முதலீடுகள் மூலம் எமது நுகர்வோர், சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்.” என்றார்.

யூனிலீவரின் விநியோகச் சங்கிலிப் பணிப்பாளர் தமித் அபேரத்ன இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “இந்த அதிநவீன தொழிற்சாலைக்கான எமது முதலீடானது, நாட்டின் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமன்றி, இலங்கையில் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கின்றது. நவீன தொழில்நுட்பம் மற்றும் செயன்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உயர்தர தயாரிப்புகளை நாம் உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், நவீன அறிவு மற்றும் திறன்களை எமது பணியாளர்கள் மற்றும் கூட்டாளர்களுக்கு கைமாற்றுகிறோம். இந்த முதலீடு நாட்டின் உணவு மற்றும் பானங்கள் தொழில்துறையில் நீடித்த சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு, இலங்கையின் நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும் என நான் நம்புகிறேன்.” என்றார்.

யூனிலீவரின் வீட்டு பராமரிப்பு மற்றும் போசணை சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஷர்மிளா பண்டார தெரிவிக்கையில், “பல மில்லியன் கணக்கான இலங்கையர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். அத்துடன் இந்த புதிய முதலீடு அந்த இலக்கை அடைவதற்கு எம்மை நெருக்கமாக்கும். எமது மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமங்களான Viva மற்றும் Horlicks ஆகியவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதன் மூலம், இலங்கையிலுள்ள குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயர்தர தயாரிப்புகளின் நிலைபேறான விநியோகத்தை உறுதிசெய்ய முடியும். இந்த புதிய தொழிற்சாலையின் மூலம், எமது நுகர்வோருக்கு சேவை செய்வதற்கும், அவர்களுக்கு சிறந்த போசணை தெரிவுகளை வழங்குவதற்குமான சிறந்த இடத்தில் எம்மால் இருக்க முடியும்.” என்றார்.

கடந்த 85 வருடங்களில், யூனிலீவர் நிறுவனமானது, இலங்கை சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, உண்மையான இலங்கையர்களின் வாழ்க்கை முறையைப் பாதுகாத்து வளர்க்கும் செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது. இது நாட்டிலுள்ள மிகப்பெரிய, மிக வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். அதன் 97% ஆன தயாரிப்புகளை ஹொரணையில் உள்ள தனது உற்பத்தி நிலையத்திலும், உள்ளூர் மூன்றாம் தரப்பு உற்பத்தித் தளங்களிலும் மிக இறுக்கமான உற்பத்தித் தரங்களை பேணியவாறு உற்பத்தி செய்கிறது. யூனிலீவர் உற்பத்திகளில் Sunlight, Signal, Lifebuoy, Knorr, Vim உள்ளிட்ட சந்தையில் முன்னணியிலுள்ள 30 வர்த்தகநாமங்கள் உள்ளடங்குகின்றன. இந்நிறுவனம் இதுவரை உள்ளூர் உற்பத்தி திறனாக, ரூ. 19.8 பில்லியனுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.

Ends

Photo Captions

அடிக்கல் நடும் விழாவில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள்
யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவியும், முகாமைத்துவப் பணிப்பாளருமான திருமதி ஹாஜர் அலபிபி தலைமையில் இடம்பெற்ற புதிய மோல்டட் பான தொழிற்சாலைக்கான அடிக்கல் நடும் விழாவில், முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி ரேணுகா வீரகோன், யூனிலீவர் தெற்காசியாவின் போசணை மற்றும் ஐஸ்கிரீம் பிரதித் தலைவர் திருமதி கவிதா ஜெயின், யூனிலீவர் ஸ்ரீ லங்கா விநியோகச் சங்கிலியின் பணிப்பாளர் தமித் அபேரத்ன, யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் வீட்டு பராமரிப்பு மற்றும் போசணை சந்தைப்படுத்தல் பணிப்பாளர் திருமதி ஷர்மிளா பண்டார ஆகியோர் விழாவில் கலந்து சிறப்பித்த போது…
யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவன தலைவியும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹாஜர் அலபிபி உரையாற்றிய போது…
யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் புதிய மோல்ட் பான தொழிற்சாலையின் அடிக்கல் நடும் விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள்…
அடிக்கல் நடும் விழாவின் போது…
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *