இளமானி பட்டதாரிகளுக்கான மடிக்கணினியினை பெற்றுக்கொடுக்க Softlogic Information Technologies நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள இலங்கை தொழில்நுட்ப கம்பஸ்

டிஜிட்டல் உருமாற்றத்தை  மாணவர்கள்  பின்பற்ற உதவும் முயற்சியாக, Softlogic Information Technologies Pvt Ltd நிறுவனம் இலங்கை தொழில்நுட்ப கம்பஸ்ஸுடன் (SLTC) இணைந்துள்ளது.
இந்த இணைப்பானது SLTC இன் 2021 ஆம் ஆண்டில் உள்வாங்கப்படும் 1000 இற்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் உயர் கல்வியைத் தொடர சிறப்பு தள்ளுபடி விலையில் ஒரு புதிய மடிக்கணினியை கொள்வனவு செய்ய உதவுகின்றது.


இந்த இணைப்பு குறித்து Softlogic ITதலைமை நிர்வாக அதிகாரியும் இயக்குனருமான ரோஷன் ரஸூல் கூறுகையில்,

உயர் கல்வி வாய்ப்புகளில் காலடி எடுத்து வைக்கும் புதிய இளமானி பட்டதாரிகளுக்கு ஆதரவளிக்க SLTC உடன் இணைந்து கொள்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த முன்னோடி முயற்சியால், புதிய தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் உயர்கல்வியில் தற்போதுள்ள இடைவெளிகளைக் குறைக்க எதிர்பார்க்கிறோம், இது காலத்தின் தேவை என்று நாங்கள் கருதுகிறோம். ஒரு சமூக பொறுப்புள்ள நிறுவனம் என்ற வகையில், மாணவர்கள் தங்கள் உயர் கல்வியில் வெற்றிபெறவும், வாழ்க்கையில் உயர் நிலைகளை அடையவும் இந்த திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதில் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.


டிஜிட்டல்மயமாக்கல் உலகெங்கிலும் உள்ள உயர் பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலப்பின கற்றல் மாதிரியின் தோற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இன்று மிகவும் வசதியான இந்த கற்றல் மாதிரியில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது மாணவர்களுக்கு நேரடியான விரிவுரைகள் மற்றும் இணைய வழி விரிவுரைகள் (virtual lectures) இரண்டிலும் பங்கேற்க உதவுகின்றது. இது பாரம்பரிய கற்றல் அனுபவத்திலிருந்து விலகிச் செல்கிறது. இந்த பின்னணியில், Softlogic IT மற்றும் SLTC ஆகியவற்றின் இணைப்பானது இளமானி பட்டதாரிகளுக்கு அவர்களின் உயர் கல்வியைத் தொடர தொழில்நுட்பத்தின் ஆதரவுடன் உலகலாவிய ரீதியில் வாய்ப்புகளை வழங்குகிறது.


SLTC இன் நிறுவனர் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பொறியியலாளர், ரஞ்சித் ஜி. ரூபசிங்க கருத்து தெரிவிக்கையில்,

ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு புதிய மடிக்கணினியை பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்கும், தள்ளுபடி விலையில் ஒரு மடிக்கணினியைப் பெற்றுக் கொள்வதற்கும் எங்கள் சமீபத்திய இளமானி பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்க Softlogic IT உடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


புகழ்பெற்ற உயர்கல்வி வழங்குநராக திகழும் SLTC , இலங்கையின் முன்னணி அரசு சாரா பல்கலைக்கழகமாக தொழில்நுட்பம், பொறியியல், வணிகம், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம், இசை, தொழில்முறை ஆய்வு கற்கைகளிலும் முதுகலை கற்கைகளில் நிபுணத்துவம் பெற்றது. இலங்கையின் முதல் பெரும்நிறுவன வகையில் இயங்கும், ஆராய்ச்சி அடிப்படையிலான, Residential university ஆக SLTC உள்ளது. இது ஆய்வகங்கள், உயர் கல்விக்கு சாதகமான சூழலை வழங்கும் ஆய்வு இடங்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடியது.
ஒரு தலைமுறை கண்டுபிடிப்பு மற்றும் சிறப்பை உருவாக்குவதை மையமாகக் கொண்டு, SLTC உயர் தரமான கல்வியை வழங்குவதற்கான அதிநவீன கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்துகிறது. இது தொழில் தரங்களுக்கு இணையானது. தொழில்முறை நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாட்டைச் செயல்படுத்துவதற்கும், பன்முகத்தன்மை, ஆக்கபூர்வமான விமர்சனம் என்பவற்றை ஊக்குவிப்பதற்கும், பூரணம் மிக்க பட்டதாரிகளை உருவாக்கும் மிக உயர்ந்த திறனுக்கான ஆராய்ச்சி மற்றும் கற்றலுக்கான தாராளமய சூழலை உருவாக்குவதற்கும்SLTC  ஒரு மூலோபாய நோக்கில்  இயக்குகிறது. அதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்கும் திறனையும் இது கொண்டுள்ளது.


Softlogic Holdings இன் துணை நிறுவனமான Softlogic Information Technologies ஆனது தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளில் முன்னோடியாக திகழ்கின்றது. அதேவேளை இது இலங்கைக்கு ICT தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனமாகவும் விளங்குகின்றது. பல ஆண்டுகளாக, பல விருது நிகழ்வுகளில் அதன் சிறப்பான செயல்திறனுக்காக நிறுவனம் பல விருதுகளை சுவீகரித்துள்ளது.


இன்று, Softlogic IT நிறுவனம் இலங்கையில் உள்ள நிறுவனங்களுக்கு விருப்பமான IT பங்காளராக மாறியுள்ளதுடன், உலகத்தரம் வாய்ந்த ICT தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. வாடிக்கையாளர் மையமாக, அகில இலங்கை ரீதியிலான காட்சியறைகள், விநியோகஸ்தர்கள் மற்றும் நம்பகரமான உத்தரவாதங்களால் ஆதரிக்கப்படும் துணை விநியோகஸ்தர்கள் மூலமாக  Softlogic  IT நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தகவல் தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றது.

   
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *