தரமான கல்வி மற்றும் தொழில்வாண்மை மேம்பாட்டுக்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் PRISL பட்டமளிப்பு விழா

– இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழில்துறைக்கான திறனை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு

இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கல்வியகம் (Plastics & Rubber Institute of Sri Lanka – PRISL), அதன் முக்கியமான பட்டமளிப்பு விழாவை அண்மையில் BMICH இல் நடாத்தியிருந்தது. தனது பட்டப்படிப்பு மாணவர்களின் சாதனைகளை கௌரவித்து, இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறைக்கு அவசியமான நம்பகமான அறிவுப் பங்காளியாக, பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையில் சிறந்து விளங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை இதன் மூலம் அது வெளிப்படுத்தியது.

பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கைத்தொழிலுக்கு தரமான கல்வியின் முக்கியத்தும் அவசியமென எடுத்துரைக்கும் மேடையாக இந்த பட்டமளிப்பு விழா அமைந்தது. சிறப்பான அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்திய பட்டதாரி மாணவர்கள், அவர்கள் அடைந்த சாதனைகளுக்காக அங்கீகாரமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

கைத்தொழில்துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தான் வகிக்கும் முன்னணி பங்களிப்பிற்கு பெயர் பெற்ற PRISL ஆனது, பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையில் குறிப்பிடும்படியான பங்களிப்பை வழங்கக் கூடிய வெற்றிகரமான பட்டதாரிகளை உருவாக்குவதில் பெருமை கொள்கிறது. இலங்கையின் கல்வி சார்ந்து சிறந்து விளங்குவதையும், தொழில்வாண்மை வளர்ச்சியின் முக்கிய இயக்கி எனும் நிறுவனத்தின் நற்பெயரை நிலைநாட்டுவதையும், இப்பட்டமளிப்பு நிகழ்வு மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்நிகழ்வில் 350 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் PRISL இலிருந்து பல்வேறு துறைகளில் தகைமைச் சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள், உயர் டிப்ளோமாக்கள் உள்ளிட்ட பட்டங்களை பெற்றனர்.

பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையில் எதிர்கால முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த விழாவின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். ஈர்க்கக்கூடிய விளக்கக்காட்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம், சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், புத்தாக்க கண்டுபிடிப்புகள், தொழில்துறையின் வளர்ச்சித் திறன் பற்றிய மதிப்புமிக்க தகவலறிவுகளை பங்கேற்பாளர்கள் இங்கு பெற்றனர். இது மாணவர்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்களை, இந்த ஆற்றல்மிக்க துறையில் மேலதிக கற்கைகளில் ஈடுபடவும், வாழ்க்கைப் பாதைகளை மேம்படுத்துவற்கும் ஊக்கமளித்தது.

PRISL இன் தலைவர் கல்யாண திரசேகர இது தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த மதிப்புமிக்க பட்டமளிப்பு நிகழ்வில் எமது பட்டதாரி மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு பாராட்டுக்குரியது. மேலும் அவர்கள் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் கைத்தொழிலில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்துவர் என்று நாம் நம்புகிறோம். இந்தத் துறையில் ஆர்வமுள்ள நிபுணர்களை வளர்க்கும் தரமான கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை வழங்குவதற்கு PRISL உறுதியுடன் உள்ளது.” என்றார்.

பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையில் சிறந்து விளங்கிய பழைய மாணவர்களின் தனிப்பட்ட வெற்றிக் கதைகளும் இப்பட்டமளிப்பு நிகழ்வில் வெளிக்கொண்டு வரப்பட்டன. தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் PRISL இன் கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் சான்றுகளை இங்கு பகிர்ந்து கொண்டனர்.

ஏனைய கல்வி நிறுவனங்களில் இருந்து தனித்து நிற்கும் அதன் தனித்துவமான அம்சங்கள் மற்றும் முயற்சிகள் தொடர்பில் PRISL பெருமை கொள்கிறது. நடைமுறை ரீதியான தொழில்துறை அனுபவம், அதிநவீன தொழில்துறை வசதிகள், முக்கிய பங்குதாரர்களுடனான ஒத்துழைப்பு ஆகியவற்றில் நிறுவனம் கவனம் செலுத்துவதானது, பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் துறையில் மாணவர்களை வெற்றிகரமான தொழில்களை நோக்கி தயார்படுத்துகின்ற, விரிவான கல்வியை அவர்கள் பெறுவதை உறுதி செய்கிறது.

PRISL ஆனது அதன் தற்போதைய திட்டங்களுக்கு மேலதிகமாக, இலங்கைக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டுவரும் ஒரு தொழில்துறையாக, இறப்பர் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்துறையை உயர்த்துவதற்குத் தேவையான மனிதவளத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த மூலோபாய ரீதியான கவனம் செலுத்துகையானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் தொழிற்துறையை உரிய தொழில் வாய்ப்புகளுடன் ஒரு ஆற்றல்மிக்க மற்றும் நம்பிக்கைக்குரிய தொழிற்துறையாக நிலைநிறுத்துவதன் மூலம், மாணவர்களிடம் உள்ள எண்ணங்களை களைந்து, இத்துறையில் உயர்கல்வி மற்றும் விசேட திட்டங்களைத் தொடர்வதற்கு மாணவர்களை ஊக்குவிப்பதையும் PRISL நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பட்டமளிப்பு நிகழ்வானது, இத்துறையில் உள்ள பரந்த வாய்ப்புகளை ஆராய இளைஞர்களின் மனதை ஊக்குவிக்கும் ஊக்கியாக செயற்படுகிறது.

PRISL மற்றும் அதன் திட்டங்களைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.prisrilanka.com எனும் இயைத்தளத்தை பார்வையிடவும் அல்லது +94112864354 எனும் இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *