தலைமைத்துவத்திற்கான புதிய தரநிலைகளை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட Janashakthi Life Great Manager விருதுகள்

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி லைஃப், அதன் விற்பனைப் படையினரிடையே காணப்படும் நிர்வாகத் திறமையின் சிறந்த செயற்றிறனைக் கொண்டாடும் வகையில் ‘Janashakthi Life Great Manager Awards’ எனும் விருது நிகழ்வை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக, கிரிக்கெட் ஜாம்பவானும், நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன கலந்து கொண்டு, திறமையான முகாமைத்துவம், தலைமைத்துவம், வேலை – வாழ்க்கை இடையேயான சமநிலையின் முக்கியத்துவம் பற்றிய பெறுமதியான விடயங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிரகாஷ் ஷாஃப்டர் மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே தனது உணர்ச்சிமிக்க உரையின் போது, இந்த முக்கியமான தருணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகையில், “ஜனசக்தி லைஃப் நிறுவனத்துடனான எமது பயணத்தில் இன்று ஒரு முக்கிய தருணத்தை குறிக்கிறது. நாம் எமது முன்னேற்றத்தைப் பற்றி சிந்தித்து, முன்னோக்கிச் செல்லும் பாதையை இங்கு காண்கிறோம். ‘சிறந்ததிலிருந்து மிகச் சிறந்த நிலைக்கு’ நகருதல் எனும் எண்ணக்கருவுடனும் நீடித்து நிலைத்திருப்பதற்காக எம்மை கட்டியெழுப்புவதற்காகவும், நீண்ட கால நிலைபேறான செயற்பாடுகள் மற்றும் முடிவுகளைத் தழுவியவாறு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொருவரும் தமது ஏனைய பொறுப்புகளைத் திறமையாக நிர்வகிக்கும் அதே வேளையில் தமது தனித்துவமான பலங்களில் ஆழமாக சிறந்து விளங்குவதற்கு வாய்ப்பளிப்பதே இதன் நோக்கமாகும்.” என்றார்.

இந்த நிகழ்வின் அறிமுகம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது ஜனசக்தி லைஃப் நிர்வாகக் குழுவைப் பற்றி நான் மிகவும் பெருமையடைகிறேன். அவர்களுக்குள் இருக்கும் பல ஒப்பிட முடியாத குணாதிசயங்களைக் கண்டு நான் பெருமிதமடைகிறேன். இவர்கள் தமது தனிப்பட்ட முன்னேற்றத்தில் மாத்திரம் கவனம் செலுத்தாமல், அவர்கள் தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளனர். ஒவ்வொரு குழு உறுப்பினரின் தேவைகளுக்காகவும் கடினமான முடிவுகளை எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். அடி மட்டம் முதல் வெற்றியை அடைவதற்காக அவர்கள் மிகத் தீவிரமாக செயற்படுகிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பை நாம் கொண்டாட வேண்டியது அவசியம். நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும், அனைவரும் சிறப்பாக மேம்படக்கூடிய சூழலை வளர்ப்பதற்கும், ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் கூட்டு வெற்றிக்கு பங்களிக்கவும் நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம்.” என்றார்.

இந்த மாலை நேர நிகழ்வில், இலக்குகளை அடைவதற்குத் தேவையான மனநிலையைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்ற, விசேட விருந்தினர்கள் பங்கேற்கும் குழு நிலை கலந்துரையாடலும் இடம்பெற்றது. அத்துடன், இந்த நிகழ்வில், ஜனசக்தி லைஃப் நிர்வாகக் குழுவில் சிறந்து விளங்குவோருக்கான தரநிலைகளை அமைத்து, விருதுகளுக்கான அளவுகோல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

‘வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் கனவுகளை வலுப்படுத்துதல்’ எனும் நிறுவனத்தின் கூட்டாண்மை நோக்கத்திற்கு உண்மையாக இருந்து, ஜனசக்தி லைஃப் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் நெறிமுறையான மற்றும் வெளிப்படையான முறையில் பெறுமதியான சேவையை வழங்க எப்போதும் பாடுபட்டு வருகிறது. வாடிக்கையாளரை முன்னிலைப்படுத்தி, அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சேவைகள் மூலம் காப்பீட்டாளரால் இது உயிர்ப்பிக்கப்படுகின்றது. இந்த நோக்கத்தை தனது ஊழியர்களுடனான தனது ஈடுபாட்டிற்கு விரிவுபடுத்தும் வகையில், ஜனசக்தி லைஃப் எப்போதும் தனது குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வளர்த்துக் கொள்ளவும், அதனை நனவாக்க உதவும் உயர்ந்த ஆதரவான பணிச்சூழலை வழங்கவும் முயற்சித்து வருகிறது.

29 வருடங்களுக்கும் மேலாக, ஜனசக்தி லைஃப் நிறுவனம் காப்புறுதித் துறையில் தொடர்ச்சியாக புரட்சியை ஏற்படுத்தி வருவதுடன், கருத்திலெடுக்கக்கூடிய ஒரு சக்தியாக முன்னோக்கி பயணித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 75 இற்கும் அதிக கிளைகள் கொண்ட அதன் வலையமைப்பு, அனைத்து தரப்பு மக்களுக்கும் அதன் தனித்துவமான காப்புறுதித் தீர்வுகளை அணுக உதவுகிறது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *