பல்வேறு தொழில்துறை பாராட்டுகளுடன் சிறப்பான வருடத்தை நிறைவு செய்த Alumex PLC

Aluminium Extrusion உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான Alumex PLC, 2023 ஆம் ஆண்டை சிறந்த வெற்றிகளுடன் நிறைவு செய்துள்ளது. கடந்த வருடத்தில் 14 இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி துறையை சிறப்பான பாதையை நோக்கிக் கொண்டு செல்வதில் தலைமைத்துவத்தையும் ஆளுமை, நிலைபேறான தன்மை மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. .

Alumex நிறுவனம், 25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2023 விழாவில், “Overall Emerging Exporter of the Year 2021/2022” (ஒட்டுமொத்த வளர்ந்து வரும் ஏற்றுமதியாளர்) எனும் அனைவராலும் விரும்பத்தக்க பட்டத்தையும், இலகு பொறியியல் துறையில் மெரிட் விருதையும், 31ஆவது NCE ஏற்றுமதியாளர் விருதுகளில் இயந்திரவியல் மற்றும் இலகு பொறியியல் துறையின் கீழ் வெள்ளி விருதையும் வென்றது.

இது தொடர்பில், Alumex PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெதிவல தெரிவிக்கையில், “அலுமினியம் உற்பத்தித் துறையில் நாம் தொடர்ச்சியாக முன்னோடியாக இருந்து வருகிறோம். சிறந்து விளங்குதல் மற்றும் புத்தாக்கத்தில் முன்னெப்போதும் இல்லாத தரங்களை அமைத்து வருகிறோம். அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நிலைபேறான நடைமுறைகளை தழுவுவதற்கான எமது செயலூக்கமான அணுகுமுறைகள் ஆகியன, உலகளாவிய சந்தைகளில் முதலாவது பாதையை அமைப்பவர்களாக எம்மை நிலைநிறுத்தியுள்ளது. இது எமது நாட்டிற்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்புகளைத் தேட உதவுகிறது.” என்றார்.

2019 ஆம் ஆண்டு முதல், இலங்கையின் ஏற்றுமதி பிரிவிற்குள் தனது உயர்தர அலுமினிய உற்பத்தி தயாரிப்புகளுடன் புதிய ஏற்றுமதி தயாரிப்பு வகையை நிறுவுவதற்காக நிறுவனம் முன்னோடியாக செயற்பட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து, சர்வதேச ரீதியிலான விரிவாக்கப் பயணத்தை Alumex மேற்கொண்டதுடன், உலகளாவிய சந்தைகளை வெற்றிகரமாக அடைந்து வளர்ச்சியடைந்துள்ளது.

நிறுவனத்தின் மூலோபாய நோக்கு மற்றும் செயற்பாட்டுத் திறமை ஆகியன கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளுக்கு, கணிசமான அளவிலான ஏற்றுமதியை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதன் மூலம், உயர்தர அலுமினிய உற்பத்தித் தீர்வுகளைத் தேடும் தொழில்துறைகளுக்கு நம்பகமான பங்காளியாக Alumex மாறியுள்ளது.

இந்த முன்னோக்கு சிந்தனை கொண்ட அணுகுமுறையானது, இலங்கையின் ஏற்றுமதியின் பல்வகைமையை விரிவுபடுத்தியதோடு மட்டுமன்றி, தமது சொந்த ஏற்றுமதி உத்திகளை பன்முகப்படுத்தவும், வலுப்படுத்தவும், உலகளாவிய சந்தை ஊடுருவலுக்கான புதிய வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்ட தொழில்துறையினருக்கு ஒரு பாதையையும் ஏற்படுத்துகிறது.

வருடாந்த பசுமை விருதுகள் விழாவில், பெறப்பட்ட நிலைபேறான தயாரிப்பு சான்றிதழுக்கான தங்க விருதானது, நிறுவனத்தின் நிலைபேறான தன்மைக்கான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டியிருந்தது. நிறுவன அறிக்கையிடலுக்கான CA Sri Lanka TAGS விருதுகளில் உற்பத்திக்கான வெள்ளி விருதையும் Alumex வென்றது.

வணிகச் விசேடத்துவத்திற்கான ஒரு முக்கியமான உதவியாளர் எனும் வகையில், நிறுவனம் ESG இல் கவனம் செலுத்துவது தொடர்பில் பிரமுக் தெதிவல எடுத்துக் கூறுகையில், “Hayleys Lifecode இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பரந்த இலக்குகளுடன் இணங்கும் வகையிலான எமது சொந்த ESG திட்ட வரைபடத்தை நாம் தீவிரமாக உருவாக்கி வருகிறோம். இது Hayleys குழுமத்தின் ESG அபிலாஷைகள் மற்றும் 2030ஆம் ஆண்டுக்கான திட்ட வரைபடத்தை வெளிப்படுத்துகிறது. நாம் ASI சான்றிதழைப் பெறுவதற்காகவும் செயற்பட்டு வருகிறோம். வனப் பாதுகாப்பு நடவடிக்கைகள், இளைஞர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் எமது ஊழியர்களுக்கான நலன்புரி தலையீடுகள் ஆகியவற்றில் எமது பங்கேற்பை நோக்கும்போது, எமது அர்ப்பணிப்பு அப்பாற்பட்டது என்பது தௌிவாகும்.” என்றார்.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்துறை விசேடத்துவ விருதுகளில் சூப்பர் தங்க விருதை Alumex பெற்றுக் கொண்டது. அத்துடன், இலங்கை தேசிய தொழில்துறைகள் சம்மேளனத்தின், 2023 தொழில்துறை விசேடத்துவ விருதுகள் மற்றும் 2023 தேசிய வணிக விசேடத்துவ விருதுகளிலும் Alumex சாதனைகளை பதிவு செய்தது. தேசிய விநியோக சங்கிலி விசேடத்துவ விருதுகள் 2023 இல் 3ஆவது இடத்தைப் பெற்றது.

பிரமுக் தெதிவல மேலும் தெரிவிக்கையில், “தொடர்ச்சியான வளர்ச்சி மூலம் செழிப்பான வளர்ச்சிக்கான ஊக்கமளிக்கும் குழுவொன்றை உருவாக்க நாம் அர்ப்பணித்துள்ளோம். எமது ‘Trade Test’ (வர்த்தக சோதனை) ஆனது, தொழில்நுட்பத் திறன் தரம் கொண்ட ஊழியர்களை உறுதிப்படுத்துவதோடு, எமது ஊழியர்களுக்கான மாதாந்த விருதுகள் மூலம் செயற்பாட்டுக் குழுக்களின் விசேடத்துவத்தை அங்கீகரிக்கிறது. எமது ‘Speaker in You’ எனும் பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் Alumex தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் எமது குழு உறுப்பினர்கள் வலுவூட்டப்படுகின்றனர்,” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *