பெண்களுக்கான புதிய Dandex Head & Hair, 2-in-1 கூந்தல் தீர்வு அறிமுகம்

Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான Dandex, பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய கூந்தல் பராமரிப்பு Dandex – Head & Hair தீர்வு வகைகளை அறிமுகப்படுத்துகிறது. Dandex- Head & Hair நாடு முழுவதும் பல்வேறு பெறுமதியிலான பொதி அளவுகளில் கிடைப்பதோடு, 30 வருடகால கூந்தல் பராமரிப்பு நிபுணத்துவத்தினால் வலுவூட்டப்படுகிறது. Dandex- Head & Hair ஆனது 2-in-1 தீர்வாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இது பொடுகை எதிர்த்துப் போராடுவதோடு, ஆரோக்கியமான உச்சந்தலையையும் மென்மையான மற்றும் மிருதுவான கூந்தலையும் வழங்குகிறது.

Dandex- Head & Hair தயாரிப்புகள், Power Moisture, Strong & Nourish, Healthy & Fresh ஆகிய 3 தனித்துவமான வகைகளில் வருகின்றன. ஒவ்வொரு வகையும் உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு போசாக்கு, ஈரப்பதன், தூய்மையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் நுகர்வோரின் வாழ்க்கை முறையின் அடிப்படையில் அவர்களின் வெவ்வேறு தேவைகளையும் அவை பூர்த்தி செய்கின்றன. இத்தயாரிப்பின் அடிப்படை வகைகள் போன்று, Dandex – Head & Hair தயாரிப்புகளின் ஒவ்வொரு வகையிலும் க்ளைம்பசோல் (Climbazole) உள்ளது. இது Malassezia வை ஏற்படுத்தும் பொடுகை எதிர்த்துப் போராடும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தயாரிப்பு வகையிலும் புரோவிற்றமின் B5 மற்றும் இயற்கை மூலப்பொருட்களின் சாறுகள் காணப்படுகின்றன.

இதன் Power Moisture வகையானது உச்சந்தலை மற்றும் கூந்தல் வேர்களுக்கு ஈரப்பதன் மற்றும் நீரேற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒலிவ் எண்ணெய் மற்றும் கருஞ்சீரக விதைகளின் இயற்கையான சாறுகளைக் கொண்டுள்ளதன் காரணமாக, மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தலை உறுதி செய்கிறது. Strong & Nourish வகையானது போசாக்கு மற்றும் வலிமையை சேர்ப்பதோடு, ஆரோக்கியமான கூந்தலை உறுதி செய்கிறது. அத்துடன் கூந்தல் உதிர்வை எதிர்த்துப் போராடுகிறது. Healthy & Fresh வகையானது, உச்சந்தலையை மிருதுவாக தூய்மைப்படுத்தி, சுத்தப்படுத்துவதோடு எண்ணெய்த்தன்மை, பக்டீரியா மற்றும் அழுக்குகளை நீக்குகிறது. இது உச்சந்தலைக்கு புத்துயிரளித்து கூந்தலை புத்தம் புதியதாக பேணுகிறது.

Dandex – Head & Hair வகைகளானவை, போட்டித்தன்மை மிக்க விலையில் நிர்ணயம் செய்யப்பட்டு, நாடு முழுவதும் கிடைக்கிறது. 80 மி.லீ. போத்தலின் விலை ரூ. 370 ஆகவும், 175 மி.லீ. போத்தலின் விலை ரூ. 650 ஆகவும் உள்ளது. இவற்றின் பொதி அமைப்பானது, Dandex யின் அடிப்படை வகைகளிலிருந்து தெளிவாக வேறுபிரித்தறியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, வர்த்தகநாம தகவல்தொடர்பு பிரிவினரின் பாராட்டையும் பெற்றுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு புதிய வகையினதும் மருத்துவ அம்சங்கள், மூலப்பொருட்களை, வாடிக்கையாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் பொதியின் வடிவமைப்பு காணப்படுகிறது.

Hemas Consumer Brands இனால் உற்பத்தி செய்யப்படும் Dandex – Head & Hair வகைகளானவை, மருத்துவரீதியாக பொடுகை எதிர்த்துப் போராடுவதற்கும், ஈரப்பதனளிப்பதற்கும், போசாக்களிப்பதற்கும், கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கும் வகையிலான உச்ச கண்டிஷனிங்  அம்சத்தை வழங்கவுமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவை, அழகுக்காகவும் பொடுகின் எரிச்சலை எதிர்த்துப் போராடுவதற்கும் உதவுகின்றன.

 END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *