2021 இல் நடுத்தர வகை கையடக்கத் தொலைபேசி தெரிவாக தொடரும் Huawei Nova 7i

2020 ஆம் ஆண்டு Huawei Nova 7i அறிமுகப்படுத்தப்பட்டதோடு, இது இன்று வரை மிகவும் விரும்பப்படும் நடுத்தர வகை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட போதிலும், ஸ்மார்ட்போன் பயனர்களிடையே தொடர்ந்தும் பிரபலமாக இருந்து வருகின்றமைக்கு காரணம், விலைக்கேற்ற வகையில், அது கொண்டுள்ள அம்சங்களாகும்.

Nova குடும்பத்தின் முந்தைய ஸ்மார்ட்போன் வரிசைகளைப் போன்று, Nova 7i இலும் சிறப்பாக நிறைவு செய்யப்பட்ட அதன் மேற்பரப்பானது அதன் ஈர்க்கப்படும் அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அதன் வளைந்த அலுமினிய சட்டமானது கையில் பிடிப்பதற்கு மிகவும் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் இளம் பச்சை, கறுப்பு, கடும் பச்சை (Sakura Green, Midnight Black, Crush Green) ஆகிய அழகிய 3 வண்ணங்களும் அதன் வடிவமைப்பிற்கு புதிய பரிமாணத்தைச் சேர்க்கின்றன. Nova 7i ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றத்தை மெருகூட்டும் வகையில், உன்னத பார்வைத் திறன் அனுபவத்தை வழங்கும் 6.4 அங்குல பனித் துளி அமைப்பிலான (dew drop) திரையை அது கொண்டுள்ளது. Nova 7i ஆனது, 1080×2310 எனும் தெளிவுத்திறனையும், 83.5% உடலுக்கு திரை விகிதத்துடன் (screen-to-body ratio), விளையாட்டுகளில் ஈடுபடவும்,  திரைப்படங்களைப் பார்ப்பதற்கும், இணையத்தில் உலாவுவதற்கும் ஏற்ற வகையில் சட்டகத்திற்கான (bezels) குறைந்தபட்ச இடத்தை பேணியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Nova 7i ஆனது, ஒரு நடுத்தர வகை சாதனமாக இருந்த போதிலும், அதன் கெமரா அம்சத்தை நோக்கும் போது, அதே விலை எல்லைக்குள் உள்ள சாதனங்களை விஞ்சியவாறான அம்சங்களை அது கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும். இதன் 4 கெமராக்களைக் கொண்ட குவாட் கெமரா தொகுதியானது, 48MP பிரதான கெமரா, 8MPஅல்ட்ரா வைட் ஆங்கிள் கெமரா, 2MP மெக்ரோ கெமரா, 2MP ஆழ அம்சத்திற்கான கெமராக்களை கொண்டுள்ளதன் மூலம், பயனர்களுக்கு ஆக்கபூர்வமாகவும், தெளிவானதும், மன நிறைவளிக்கும் புகைப்படங்களை எடுக்க வழி வகுக்கிறது. அதன் AI கொண்ட Super Night Mode அம்சமானது, மங்கலான அல்லது குறைந்த ஒளி நிலைமையின்போது, கலக்கமற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் எடுக்க உதவுகிறது. Portrait, Panaroma, HDR, Slow motion, Moving picture, Super Macro, Time lapse போன்ற ஆக்கபூர்வமான பாணிகளுடன் அதன் கெமரா அம்சம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் Nova 7i ஆனது 16MP செல்பி கெமராவையும் கொண்டுள்ளது. இது தெளிவான மற்றும் அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய புகைப்படங்களை எடுக்க உதவுகின்றது.

அதன் சக்தி மற்றும் செயற்பாடு ஆகியவற்றை பொறுத்தவரை, Nova 7i ஆனது, ஏனைய நடுத்தர வகை சாதனங்களை விட உயரிய வகையில், 8GB RAM மற்றும் 128GB உள்ளக சேமிப்பு ஆகியவற்றுடன், Kirin 810 chipset தொகுதியையும் கொண்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த வன்பொருள் கட்டமைப்பு மற்றும் 8GB RAM ஆகியவற்றின் கலவையானது, அதிக திறன் கொண்ட விளையாட்டுகளை விளையாடும்போது கூட, வேகமானதும் மிருதுவானதுமான செயற்றிறனை வழங்குகிறது.

Nova 7i ஆனது, 4,200mAh எனும் பாரிய சக்தி கொண்ட மின்கலத்தினால் இயக்கப்படுவதால், பயனருக்கு அவர்களது ஸ்மார்ட்போன் பணிகளில் அடிக்கடி மின்கல வலு இழப்பதன் காரணமாக ஏற்படுகின்ற இடையூறுகளின்றி, தொடர்ச்சியாக பணியாற்றுவதற்கான சக்தியை வழங்குகின்றது. அதன் 40W Huawei Super Charge (விரைவாக மின்னேற்றம்) தொழில்நுட்பமானது, சாதனம் வெறும் 30 நிமிடங்களில் 70% வரை சார்ஜ் செய்ய வழிவகுக்கிறது. இது மிக அதிகளவில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தும் பயனர்களுக்கு மேலதிகமான ஒரு அம்சமாகும்.

அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வருடத்திற்குப் பின்னரும், அதன் புதுமையான வடிவமைப்பு, உயர்தர கெமரா, சக்திவாய்ந்த RAM மற்றும் முன்னணி chip ஆகியவற்றின் அடிப்படையில் Nova 7i ஆனது, பெரும்பாலான நடுத்தர வகை ஸ்மார்ட்போன்களை வெற்றி கொண்டுள்ளது. Huawei Nova 7i கையடக்கத் தொலைபேசியை, அனைத்து Huawei அனுபவ மையங்களிலும், நாடளாவிய ரீதியில் உள்ள சிங்கர் காட்சியறைகளிலிருந்தும் கொள்வனவு செய்ய முடியும். அத்துடன் Daraz.lk, Singer.lk இணையத்தளங்கள் ஊடாக ஒன்லைனிலும் அதற்கான கொள்வனவுகளை மேற்கொள்ளலாம்.

தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வர்த்தக நாமமான Huawei, முழுமையாக இணைக்கப்பட்ட, நுண்ணறிவான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிற்றல் தொழில்நுட்பங்களை கொண்டு செல்ல உறுதி பூண்டுள்ளது. உலகளாவிய மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Huawei, புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக கௌரவிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகளின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகள் தொடர்பான, BrandZ Top 100 பட்டியலில் Huawei 45ஆவது இடத்தையும், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடகள் பட்டியலில் 79ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன் சமீபத்திய Brand Finance Global 500 மிகவும் மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Interbrand இனது, சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகள் பட்டியலில் Huawei 68ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *