2022 SLIM தேசிய விற்பனை விருதுகளில் யூனிலீவர் அணிக்கு மாபெரும் வெற்றி

 அண்மையில் இடம்பெற்ற SLIM National Sales Awards 2022 (2022 தேசிய விற்பனை விருதுகள்) விழாவில் யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவன ஊழியர்கள் ஆறு பேர், 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் ஆகிய 6 விருதுகளைப் பெற்றனர்.

இலங்கையில் விற்பனை தொடர்பான இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாகக் கருதப்படும், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தால் (SLIM) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய விற்பனை விருதுகளானவை, தேசிய விற்பனைத் துறையில் உயர் செயல்திறன் கொண்ட நபர்களுக்கு அவர்களின் முயற்சிகள் மற்றும் சாதனைகளுக்காக தேசிய மட்ட அங்கீகாரத்தை வழங்கி வெகுமதி அளிக்கிறது.

2022 இல் யூனிலீவர் வெற்றியாளர்களின் பட்டியலில், மிக உயர்ந்த மற்றும் சிறந்த செயல்திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டவர்களில், FMCG நுகர்வோர் பிரிவில் TSL ஹோல்டிங்ஸ் கணக்கு முகாமையாளர் ஹசித்திகா ஹேரத் , Territory Manager தங்க விருதை வென்றார்; Pureit – கணக்கு முகாமையாளர் தரிந்து அகஸ்தி கொக்குஹென்னதி, நீடித்த நுகர்வோர் பொருட்கள் பிரிவில் Territory Manager தங்க விருதை வென்றார்; Omni Lead நவீன வர்த்தக முகாமையாளர் லசான் கருணாரத்ன Modern Trade பிரிவில், Territory Manager தங்க விருதைப் பெற்றார்; வாடிக்கையாளர் அபிவிருத்தி நிர்வாக உதவி முகாமையாளர் குஷினி ஜயசூரிய – Other Sales Support Staff (உதவி முகாமையாளர்) பிரிவில் வெள்ளி விருதைப் பெற்றார்; வாடிக்கையாளர் மேம்பாட்டு பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்படுத்தும் முகாமையாளர் சரித் ஹபுதந்திரிகே – Other Sales Support Staff (முகாமையாளர்) பிரிவில் வெண்கல விருதை பெற்றுக் கொண்டார்; நவீன வர்த்தகம் தொடர்பான கணக்கு முகாமையாளர் ஓஷத வித்யானந்த – நவீன வர்த்தக பிரிவில் Territory Manager வெண்கல விருதை வென்றார்.

யூனிலீவர் ஸ்ரீலங்காவின் வாடிக்கையாளர் அபிவிருத்திப் பணிப்பாளர் பாத்திய தயாரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “சவாலான சந்தை நிலைமைகள் நிலவிய வேளையில் விற்பனையை முன்னெடுத்துச் சென்றமை மற்றும் யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தை உயர் நிலையில் நிலைநிறுத்துவதற்காக செயற்பட்ட ஹசித்திகா, தரிந்து, லசான், குஷினி, சரித், ஓஷத ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வமே, இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க விற்பனை விருது நிகழ்வில் குறிப்பிடும்படியான சாதனையை அடைய எமக்கு உதவியுள்ளது. எமது விற்பனைப் பணியாளர்களின் முயற்சிகளை அங்கீகரிக்க ஒரு தளத்தை வழங்கியமைக்காக SLIM நிறுவனத்திற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது எமது ஊழியர்ள் அவர்களது வாழ்க்கையில் வளரவும் முன்னேறிச் செல்லவும் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது.” என்றார்.

இவ்விருதுகளுக்காக தெரிவான அனைவரும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழுவால் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, அவர்கள் விற்பனைப் படிநிலையில் வளர்வதற்காகவும் முன்னேறுவதற்காகவும் அவர்கள் கொண்டுள்ள திறன், அவர்களது தற்போதைய வேலைப் பாத்திரங்களில் அவர்களின் செயல்திறன் மற்றும் பங்களிப்பு, வழங்கப்பட்ட விற்பனை இலக்குகளை மேற்கொள்ளும்போது மூலோபாயங்களை சேர்க்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு  அளவுகோல்களின் அடிப்படையில் அவர்கள் இங்கு மதிப்பீடு செய்யப்படுகிறார்கள்.

~ (Ends) ~

Photo Caption:

Image 1 – SLIM தேசிய விற்பனை விருதுகள் 2022 இல் விருது பெற்ற Uniliver Sri Lanka ஊழியர்கள் (இடமிருந்து – வலமாக): Pureit – கணக்கு முகாமையாளர் தரிந்து அகஸ்தி கொக்குஹென்னதி; வாடிக்கையாளர் மேம்பாட்டு பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்படுத்தும் முகாமையாளர் சரித் ஹபுதந்திரிகே; Omni Lead நவீன வர்த்தக முகாமையாளர் லசான் கருணாரத்ன; நவீன வர்த்தகம் தொடர்பான கணக்கு முகாமையாளர் ஓஷத வித்யானந்த; TSL ஹோல்டிங்ஸ் கணக்கு முகாமையாளர் ஹசித்திகா ஹேரத்; வாடிக்கையாளர் அபிவிருத்தி நிர்வாக உதவி முகாமையாளர் குஷினி ஜயசூரிய

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *