2024 வருடாந்த கூட்டாளர் மாநாட்டில் Ezviz உடன் தொடர்ச்சியான கூட்டாண்மையைக் கொண்டாடும் IT Gallery

IT Gallery நிறுவனத்தினால் 2018 இல் ஆரம்பிக்கப்பட்ட அதன் வருடாந்த கூட்டாளர் மாநாடானது, அதன் நாட்காட்டியில் முக்கிய நிகழ்வாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது தொழில்துறையில் தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் திருமதி Rita Liu மற்றும் பிராந்திய சந்தைப்படுத்தல் முகாமையாளர் திருமதி Li Xin ஆகியோர் இந்த வருட நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் 2024 பதிப்பானது, ஸ்மார்ட் இல்ல பாதுகாப்பு (smart home security) தொடர்பான வர்த்தகநாமமான Ezviz உடனான IT Gallery நிறுவனத்தின் தொடர்ச்சியான கூட்டுறவை மேலும் வலியுறுத்துகிறது. அதன் தற்போதைய முன்னணி விநியோகஸ்தரான IT Gallery நிறுவனம், முதன்முதலில் Ezviz வர்த்தக நாமத்தை 6 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது. இலங்கையில் உள்ள குடும்பங்களுக்கு WiFi கெமராக்கள் முதல் ஸ்மார்ட் நுழைவு சாதனங்கள் வரை புத்தாக்கமான பாதுகாப்புத் தீர்வுகளை வழங்குவது தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டின் ஒரு அங்கமாக இது அமைகின்றது.

2023 ஆம் ஆண்டு முதல் தங்களது சொந்த வணிகத்தையும் Ezviz வணிகத்தையும் முன்னெடுத்துச் சென்ற IT Gallery நிறுவனத்தின், முதல் மூன்று இடங்களில் உள்ள கூட்டாளர்களை கௌரவிப்பதே இந்த நிகழ்வின் முதன்மையான நோக்கமாகும். இந்த நிகழ்வானது, வலுப்படுத்தப்பட்ட மற்றும் மேலும் அதிக இணைப்பைக் கொண்ட வலையமைப்பை உறுதி செய்யும் வகையில், தங்களது கூட்டாளர்களிடையே ஆழமான ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான வழியை ஏற்படுத்துகின்றது. நிறுவனத்தின் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், உள்ளூர் சந்தையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கும், இவ்வருட நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து 350 பங்காளர்கள் கலந்துகொண்டனர்.

ஆறு வருடங்களாக இலங்கைக்கான பிரதான விநியோகஸ்தர் எனும் பெருமை கொண்ட IT Gallery நிறுவனமானது, நாடு முழுவதும் Ezviz வர்த்தக நாமத்தை ஊக்குவிப்பதற்கும் அதன் பெயரை நிலைநிறுத்துவதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளது. இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து, புத்தாக்கமான ஸ்மார்ட் இல்ல பாதுகாப்புத் தீர்வுகள் மூலம், குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு அவசியமான சிறந்த பாதுகாப்பை பெறுவதை உறுதி செய்கின்றன. இந்நிகழ்வில் பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்ட கௌரவத்தின் மூலம், சந்தையில் Ezviz இன் நிலைப்பாட்டை மேம்படுத்துவதில் IT Gallery கூட்டாளர்களுடன் கொண்டுள்ள கூட்டுறவுக்கு ஒரு சான்றாக இது அமைந்தது.

EZVIZ நிறுவன தெற்காசியா விற்பனைப் பணிப்பாளர் Aaron Lee இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கைச் சந்தையில் புத்தாக்கமான பாதுகாப்புத் தீர்வுகளைக் வழங்குவதற்காக IT Gallery உடன் நாம் கொண்டுள்ள ஒத்துழைப்பானது முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த வளர்ச்சியையும் புத்தாக்கப் பயணத்தையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

IT Gallery Computers Private Limited நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டிலந்த பெரேரா இது பற்றி தெரிவிக்கையில், “எமது பங்காளிகளின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பது மிகவும் முக்கியமானதாகும். Ezviz வர்த்தகநாமத்தை இலங்கையில் ஒரு முன்னணி வர்த்தக நாமமாக நிலைநிறுத்துவதில் அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் ஒன்றாக இணைந்து செயற்பட்டு, புத்தாக்கம் மற்றும் விசேடத்துவத்தின் எல்லைகளை நோக்கி தொடர்ந்தும் பயணிப்போம்.” என்றார்.

IT Gallery Partner Summit 2024 நிகழ்வானது, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்துகிறது. இலங்கையில் Ezviz வர்த்தக நாமத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான எதிர்கால சாத்தியங்கள் தொடர்பில் நிறுவனம் உற்சாகத்துடன் எதிர்பார்த்து நிற்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *