4 சக்கர (4WD) உழவு இயந்திர சந்தையில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தும் Hayleys Agriculture

தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக உழவு இயந்திர விற்பனையில் Hayleys Agriculture நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இது நம்பகமான மற்றும் உயர்தர விவசாய இயந்திரங்களைத் தேடும் விவசாயிகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் அதன் நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது. ஒரு விருப்பமான தெரிவு எனும் அதன் நிலையை உறுதிப்படுத்தியவாறு, 4 சக்கர (4WD) உழவு இயந்திர விற்பனையில் 2023 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தனது சந்தை ஆதிக்கத்தைத் Hayleys Agriculture தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான உழவு இயந்திர விற்பனையுடனும், இச்சந்தையில் 44% எனும் உயர்ந்த விற்பனைப் பங்குடனும் அது இத்தொழில்துறையில் முன்னணி வகிக்கின்றது.

அந்த வகையில், நான்கு சக்கர செலுத்துகை (4WD) உழவு இயந்திரப் பிரிவிலும் நிறுவனத்தின் வெற்றி விரிவடைகின்றது. அதற்கமைய, பிரபல வர்த்தகநாமங்களான Kubota மற்றும் E-Kubota ஆகியவற்றின் விற்பனையானது, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் குறிப்பிடத்தக்க வகையிலான 69% எனும் விற்பனையை நிறுவனம் இத்தொழில்துறையில் கைப்பற்றியுள்ளது.

உழவு இயந்திரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களின் நம்பகமான விநியோகஸ்தர் எனும் வகையில் Hayleys Agriculture ஆனது, விவசாயிகளின் அசைக்க முடியாத விருப்பமான தெரிவு என்பதை இந்த சிறந்த புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஜப்பானின் Kubota Corporation உடனான பெறுமதிமிக்க கூட்டாண்மை மற்றும் விற்பனைக்குப் பின்னரான நம்பகமான சேவைகள் ஆகியவற்றின் ஆதரவுடன் உயர்தர தயாரிப்புகளை வழங்குவது தொடர்பான நிறுவனத்தின் நற்பெயரானது, அவர்களது நிலையை வலுப்படுத்தியுள்ளது. அது மாத்திரமன்றி, நிலைபேறான விவசாய நடைமுறைகளுக்கான அவர்களது அர்ப்பணிப்பு, விவசாயிகளிடையே அவர்களின் ஈர்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Kubota Corporation உடனான நிறுவனத்தின் ஒத்துழைப்பின் மூலம், விவசாயிகளுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உயர் வகை இயந்திரங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை Hayleys Agriculture ஏற்படுத்துகிறது. இது உள்ளூர் விவசாயிகளுக்கு உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனை மேம்படுத்துவதற்கும் நாட்டில் சாதகமான பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது.

சந்தையில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் எனும் வகையில், தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம் இலங்கை விவசாயத் துறையை நவீனமயமாக்குவதில் Hayleys Agriculture Holdings Limited அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், உள்ளூர் விவசாயத் துறையில் உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனை மேம்படுத்துவதே நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. வலுவான சந்தை இருப்பு மற்றும் விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கான அர்ப்பணிப்புடன், இலங்கையின் விவசாயத் துறையை வளமான மற்றும் நிலைபேறான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதில் Hayleys Agriculture முக்கிய பங்கு வகிக்கிறது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *