44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய V21 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் VIVO: தற்போது முன்பதிவு செய்துகொள்ள முடியும்

vivo தனது புதிய V21 5G ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோருக்கு நவநாகரிகமான, உயர் செயல்திறன் மற்றும் கெமராவை மையமாகக் கொண்ட சாதனங்களை போட்டி விலையில் வழங்குவதற்காக பரவலாக அறியப்படும் அதன் நீண்டகால V-series ஸ்மார்ட்போன் வரிசையின் மேலதிக வரவாக இது உள்ளது.

ஸ்டைலுடன் மேம்பட்ட தொழில்நுட்பமும் இணைந்து மொபைல்  அனுபவத்தை வழங்கும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய V21 ஸ்மார்ட்போனானது 5G தொழில்நுட்பத்துடன் கூடிய, ஒரு தனித்துவமான Optical Image Stabilization (OIS) முன் கெமராவினை கொண்டுள்ளது.

இது தொடர்பில் vivo Sri Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி, கெவின் ஜியாங் கருத்து தெரிவிக்கையில், “இந்த அறிமுகத்தின் மூலம் vivo V21இன் முன்னணி OIS ஆதரவு மூலம் எதிர்கால ஸ்மார்ட்போன் முன் கெமராக்களுக்கான புதிய நியமத்தை ஆரம்பித்து வைப்பது தொடர்பில் புரட்சிகரமான மாற்றத்தை குறிக்கின்றது. முதற்தர நேர்த்தியான வடிவமைப்பு, புதுமையான அம்சங்கள், வலுவான செயல்திறன் மற்றும் மேம்பட்ட 5G தொழில்நுட்பத்துடன், இந்த ஸ்மார்ட்போனானது அற்புதமான பாவனையாளர் அனுபவத்தை வழங்குகிறது. இலங்கை 5G சந்தையை நோக்கி வேகமாக மாற்றமடைந்து வருகின்றது. மேலும் vivo அதே வழியில் வாடிக்கையாளர்களுக்கு 5G மொபைல் போன்களை சிறந்த இரவு நேரத்துக்கான கெமரா அம்சங்களுடன் வழங்குவதற்காக செயல்படுகிறது,” என்றார்.

V21 5G இன் முன் கெமராவில் 44MP OIS Night Selfie System பொருத்தப்பட்டுள்ளது. இதில் 44MP OIS Super Night Selfie,  Selfie Spotlight, AI Night Algorithm உடன் கூடிய AI Night Portrait போன்ற புதுமையான அம்சங்கள் உள்ளடங்குவதுடன், இவை பாவனையாளர்களுக்கு தனித்துவமான இரவு செல்பி அனுபவத்தை வழங்குகின்றன. Optical Image Stabilization (OIS) அம்சம் அதிக ஒளி வெளிப்பாட்டை செயல்படுத்த கெமராவை உறுதிப்படுத்துவதுடன், சிறந்த இரவு நேர காட்சியை வழங்குகிறது. Electronic Image Stabilization (EIS) உடன் இணைந்து, கெமரா அதி-நிலையான காட்சிகளை வழங்குகிறது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தெளிவான செல்பிகள் மற்றும் உயர்தர வீடியோக்களைப் படமெடுக்க மென்பொருள்-வன்பொருள் இடையிலான சிறந்த பிணைப்பை உருவாக்குகிறது.

இதன் 44MP OIS Super Night selfie அம்சம் இரவு காட்சிகளில் வெளிப்பாடு நேரத்தை குறிப்பிடத்தக்களவு நீட்டிக்கிறது. இதனால் ஒளியை உள்வாங்கும் அளவை அதிகரிப்பதுடன், இரைச்சலைக் குறைக்கிறது. மேலும், இரவு நேர செல்பிகளை தெளிவாகவும் பிரகாசமாகவும் ஆக்குகிறது. மேலும், AI Night Portrait ஒரு சக்திவாய்ந்த AI வழிமுறையைப் பயன்படுத்துகிறது. இது AI  பிரகாசமூட்டல் மற்றும் AI இரைச்சல் குறைப்பு மூலம் மிகவும் இருண்ட சூழல்களில் விவரங்களை புத்திசாலித்தனமாக சரிசெய்கிறது. மேலும் முகங்கள் மீது கவனம் செலுத்துவதுடன் தெளிவையும் அளிக்கிறது. V21 5G முன் கெமராவில் உள்ள செல்பி Selfie Spotlight அம்சம் முன் பேனலின் கீழ் அமைந்துள்ள இரண்டு OLED spotlightsகளைப் பயன்படுத்துகிறது. துள்ளியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பிடிக்க இவற்றை இயக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் Eye Autofocus, Dual View Video, Double Exposure, Child Face Beauty, Personal Facial அம்சம் மற்றும் பல அம்சங்களையும் வழங்குகிறது.

பின்புற 64MP OIS Night கெமரா, OIS Super Night Mode, OIS Ultra-Stable Video போன்ற அம்சங்களுடன் ஒரு சிறந்த இரவு நேர புகைப்பட அனுபவத்தை வழங்குகிறது. மேலும் wide-angle புகைப்படமெடுப்பு மற்றும் macro புகைப்படமெடுப்பு போன்ற சிக்கலான காட்சிகளை தடையின்றி கையாள பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

V21 5G dual-mode 5G உடன் வருகிறது, இது SA மற்றும் NSA இரண்டையும் ஆதரிக்கிறது. இது சீரான, வினைத்திறனான மற்றும் சக்திவாய்ந்த இணைப்பு அனுபவத்தை வழங்க vivoவிற்கு சொந்தமான 5G antenna தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது. இதன் 8GB RAM + 128GB ROM கொண்ட MTK800U processor குறைந்த சக்தி நுகர்வுக்கு உதவுவதுடன், அதிக ஸ்திரத்தன்மை மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனை வழங்குகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறம் 90Hz High Refresh Rate உடன் E3 AMOLED திரையை வழங்குகிறது. இது ஏற்றளவு திரை பிரகாசம், வண்ண மாறுபாடு, வண்ண தெளிவு, blue light eye protection ஆகியவற்றை செயல்படுத்துகிறது. இதன் 33W FlashCharge பாவனையாளர்கள் எந்த நேரத்திலும் ஸ்மார்ட்போனை மின்னேற்றம் செய்ய உதவுகின்றது.

வாடிக்கையாளர்கள்  V21 இனை ஜூன் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து BuyAbans, Dialog, Daraz ஒன்லைன் தளங்கள் மற்றும் முன்னணி விற்பனையகங்களில் முற்பதிவு செய்துகொள்ளலாம். 25 ஆம் திகதி முதல் Abans, Dialog, Singhagiri, Daraz மற்றும் நாடு முழுவதிலும் உள்ள vivoவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து V21 5G இனை கொள்வனவு செய்யலாம். மேலும், V21 5G மொடலினை கொள்வனவு செய்வோர் TWS EarBuds இனையும், 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 100 GB Any Time Data வினையும் Dialog இடமிருந்து இலவசமாக பெற்றுக்கொள்வார்கள். V21 5G இன் விலை ரூபா 99,990/-  ஆகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *