50,000 பயணிகளுடன் புதிய உயரங்களை எட்டும் FitsAir

இலங்கையின் முதலாவது தனியாருக்குச் சொந்தமான சர்வதேச விமான சேவையான FitsAir, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது செயற்பாடுகளை ஆரம்பித்ததிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் அவ்விமான நிலையத்தை நோக்கியும் 50,000 இற்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை வழங்கியதன் மூலம் ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த சாதனையானது விமானத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக மூன்று இடங்களுக்கு மாத்திரமே FitsAir சேவைகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அனைவருக்கும் கட்டுப்படியான விலையில் மற்றும் வசதியான விமானப் பயண தெரிவுகளை வழங்கும் நோக்கத்துடன் FitsAir தனது சர்வதேச பயண சேவைகளை 2022 ஒக்டோபர் மாதம் ஆரம்பித்தது. அப்போதிருந்து, அதன் சேவைகளுக்கான தேவையை கணிசமான அதிகரிப்பை இவ்விமான நிறுவனம் முகம் கொடுத்து வருகின்றது. குறிப்பாக அதன் கட்டுப்படியான விலை மற்றும் வசதியின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது எனலாம்.

Fits Aviation (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் அம்மார் காசிம் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “ஒப்பற்ற வாடிக்கையாளர் சேவை அனுபவத்தை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்பதுடன், எமது பயணிகளிடமிருந்து பல்வேறு சாதகமான விமர்சனங்களைப் பெற்றதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த மைல்கல்லானது, எமது பயணிகளுக்கு பாதுகாப்பான, சௌகரியமான மற்றும் வசதியான விமானப் பயணத்தை வழங்குவதில் எமது குழுவினர் கொண்டுள்ள கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்” என்றார்.

அம்மார் மேலும் கருத்து வெளியிடுகையில், “எம்முடன் இணைந்து பறப்பதற்காக எம்மை தெரிவு செய்தமைக்கும் தங்களது பயணத் தேவைகளுக்காக எம்மில் வைத்த நம்பிக்கைக்கும் நாம் எமது மனமார்ந்த நன்றியை எமது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். 50,000 பயணிகளுக்கு சேவை வழங்கியமை தொடர்பில் நாம் பெருமை கொள்கிறோம் என்பதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை தொடர்ந்தும் வழங்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.” என்றார்.

இந்த குறிப்பிடும்படியான சாதனையைக் கொண்டாடும் வகையில், FitsAir தனது 50,000 ஆவது பயணிக்கு ஒரு இலவச விமான பயணச்சீட்டை வழங்கியது.

நடைமுறை ரீதியான பயண அனுபவத்தை வழங்குவதில் விமான நிறுவனம் கொண்டுள்ள கவனத்துடனும், போட்டித் தன்மை கொண்ட விலையுடனும், இப்பிராந்தியத்தில் உள்ள ஒரு முன்னணி குறைந்த-கட்டண சேவை வழங்குனராக FitsAir சேவை தன்னை நிலைநிறுத்துகிறது. இதன் மூலம் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் விமானப் பயணத்தை அணுக வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இவ்விமான சேவையின் வெற்றியானது, சிறந்து விளங்குவதற்கான தனது அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும் என்பதுடன், அது எதிர்காலத்தில் வளர்ச்சியுடனும் வெற்றியுடனும் தொடர்ச்சியாக பயணிக்க எதிர்பார்க்கிறது.

விமானபயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய அல்லது மேலதிக தகவலுக்கு, வாடிக்கையாளர்கள் FitsAir இணையதளத்தை www.fitsair.com அணுகலாம். (+94) 117 940 940 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது WhatsApp (+94) 777 811 118 இலக்கம் ஊடாக, வாடிக்கையாளர் சேவை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *