தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய Dell Concept Store இனை கொழும்பில் திறக்கும் Electrodeals

செய்திச்சுருக்கம்

  • தென்கிழக்குஆசியாவின்மிகப்பெரிய Dell Concept Store அங்குரார்ப்பணம்
  • பரந்தஅளவிலான Dell PC க்கள், மடிகணனிகள்மற்றும்கணனிப்பாகங்களைகொண்டமைந்தது
  • கேமிங்ஆர்வலர்களுக்கானபிரத்தியேககேமிங்பகுதி

முழுவிபரம்

இலங்கையின் முன்னணி சில்லறை தீர்வுகள் வழங்குநர்களில் ஒருவரான Electrodeals பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய Dell Concept Store இனை இலங்கையில் திறந்து வைத்துள்ளது. Electrodeals நிறுவனம் Dell Technologies உடன் இணைந்து இந்த பிரத்தியேக Concept Store இனை அறிமுகம் செய்துள்ளது. இது கணனிகள், மடிகணனிகள் முதல் கணனிப் பாகங்கள் வரை பரந்த அளவிலான Dell நுகர்வோர் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.

ஒரு தனித்துவமான ஷொப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையிலான புதிய Dell Concept Store ஆனது, 1,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஸ்டோரின் கவர்ச்சிகரமான வடிவமைப்பு காரணமாக, வாடிக்கையாளர்கள் மாபெரும் பொருட்களின் பட்டியலை சுதந்திரமாகவும் எளிதாகவும் பார்வையிடவும், அவற்றின் விலைகளை ஒப்பிடவும், கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றை பரீட்சித்து பார்க்கவும் முடிகின்றது. இதில் தனியான கேமிங் பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கேமிங் ஆர்வலர்கள் Dell இன் கேமிங் தொடர்பான வெளியீடுகளை ஆராய்ந்து, அவற்றின் செயற்பாடுகளை அனுபவித்து கொள்வனவு செய்ய முடியும். இதற்காக Electrodeals நிபுணர்கள் குழுவானது வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவும், அவர்களுக்கு எந்தெந்த தயாரிப்புகள் பொருத்தமாக இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள உதவுவதோடு, அதற்கான ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.

(இடமிருந்து) பஹ்மி இஸ்மாயில், Dell Concept Store, முகாமைத்துவ பணிப்பாளர், கிரிஷான் பெனாண்டோ,  – இலங்கை மற்றும் மாலைதீவுக்கான Dell Technologies Country Manager, ஜகத் பெரேரா, சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி, செயற்பாட்டு பணிப்பாளர்

புதிய Dell Concept Store தொடர்பில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான Dell Technologies, Country Manager கிரிஷான் பெனாண்டோ  கருத்து வெளியிடுகையில், “எமது அனைத்து Dell தயாரிப்புகளினதும் அனுபவத்தைப் பெறுவதற்கான ஒரே இடமாக Electrodeals அமைகின்றது. எல்லோரும் அணுகக்கூடிய வகையில், கொழும்பின் மையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இப்புதிய Concept Store இலிருந்து, இப்போது எமது நுகர்வோர் அற்புதமான சலுகைகளைப் பெறலாம். Dell சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றது. அந்த இலக்கை அடைய Concept Store எமக்கு உதவுமென நாம் நம்புகிறோம். எமது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்குவதற்காக இப்பயணத்தில் எம்முடன் இணைந்துள்ள Electrodeals இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.


கொழும்பில் புதிதாக திறக்கப்பட்ட Dell Concept Store

Dell Technologies, இலங்கை மற்றும் மாலைதீவு விநியோகத் தலைவர், ஆபித் அஸ்லம் கருத்து தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதற்காக இந்த தலைசிறந்த படைப்பை இலங்கையில் ஆரம்பிப்பதில் நாம் பெருமைப்படுகிறோம். இந்த Concept Store வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தி, Dell தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, எமது வாடிக்கையாளர்கள் அவர்களது தொழில்நுட்பத் தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய உதவும்.” என்றார்.

Concept Store இனது தொடக்க விழாவில் உரையாற்றிய Dell Concept Store இன் நிர்வாக பணிப்பாளர் பஹ்மி இஸ்மாயில், “Dell தயாரிப்புகளுக்கான இந்த பிரத்தியேக Concept Store இனை Dell உடன் இணைந்து ஆரம்பிப்பதில் இரு நிறுவனங்களும் பெருமையடைவதோடு, இது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முயற்சி வெற்றிபெற Dell குழுவினர் அளித்த அனைத்து ஆதரவிற்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். சிறந்த வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் விற்பனைக்குப் பிந்திய சேவைகளை வழங்குவதன் மூலம் அனைத்து நிலைகளிலும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். நன்கு பயிற்சி பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த எமது விற்பனைக் குழு மற்றும் தொழில்முறை ரீதியாக சான்றளிக்கப்பட்ட சேவை வழங்கும் ஊழியர்கள் ஆகியோர் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்குவார்கள்.


Dell Concept Store இன் பிரத்தியேக கேமிங் பிரிவு

Dell Concept Store, 20 கார்கள் வரை தரித்து நிற்கக் கூடிய தரிப்பிட வசதியுடன், வசதியாக அடையக் கூடிய வகையில் 288, காலி வீதி, கொழும்பு 04 எனும் முகவரியில் அமைந்ள்ளது. வாடிக்கையாளர்கள் Dell Concept Store மற்றும் www.dellshop.lk ஆகிய இலத்திரனியல் வர்த்தக தளங்களின் மூலம் தங்களுக்கு அவசியமான பொருட்களை ஆராய்வதுடன், கொள்வனவும் செய்யலாம்.

Electrodeals PVT Ltd பற்றி

Electrodeals ஒரு புகழ் பெற்ற சில்லறை வர்த்தக மற்றும் ஷொப்பிங் தளமாகும். இது உலகின் முன்னணி தொழில்நுட்ப தயாரிப்புகளை இலங்கைக்கு கொண்டு வருகிறது. புதுமையான இலத்திரனியல் தளங்கள் மற்றும் 24/7 வாடிக்கையாளர் சேவையுடன் இலங்கையர்களின் ஷொப்பிங் அனுபவத்தையும் அது எளிதாக்குகிறது.

# # #

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *