EVOPLAY – இலங்கையின் புத்தம் புது டிஜிட்டல் விளம்பரத் தளம் வெளியீடு

இலங்கையின் முன்னணி பொழுதுபோக்கு வர்த்தக நாமமான EVOKE INTERNATIONAL LIMITED, இலங்கையின் கையடக்கத் தொலைபேசி சேவைகள் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறைகளுக்கு, மாறுபட்டதும் நவீனத்துமானதுமான தொழில்நுட்பங்களை தொடர்ந்தும் வழங்கி வருகிறது. அந்த வகையில் EVOKE நிறுவனத்தினால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, இணைய வழி மற்றும் செயலி வழியிலான முதன்மைத் தயாரிப்பான EVOPLAY, இலங்கைத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், உரையாடல் நிகழ்ச்சிகள், வீடியோ இசைகள், விளையாட்டு சார்ந்த விடயங்கள், நகைச்சுவை, பொப் கலாசாரம், ஆவணப்படங்கள், ஜோதிடம் போன்றவை உள்ளிட்ட ஏனைய உள்ளடக்கங்களை பார்வையிடவும், அதனை அனுபவிக்கவுமாக வடிவமைக்கப்பட்ட தேவையின் அடிப்படையிலான செயலியாகும். இந்த அனைத்து உள்ளடக்கப் பிரிவுகளும் எந்நேரத்திலும், உலகில் எங்கிருந்தும், சந்தா கட்டணமின்றி முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றன.

2008ஆம் ஆண்டு நிறுவப்பட்ட EVOKE INTERNATIONAL LIMITED நிறுவனம், இலங்கையிலுள்ள திரைப்படங்கள், இசை வீடியோக்கள் மற்றும் ஏனைய உள்ளடக்கங்களுக்கான முன்னணி ஒருங்கிணைப்பாளரும் தளத்திற்கான வழங்குநராகவும் செயற்படுகின்றது. அத்துடன் இலங்கையின் YOUTUBE சனல்களில் முதலிடத்திலும் உள்ளது. திஸ்ஸ நாகொடவிதான, சுனில் ரி, உதயகாந்த வர்ணசூரிய போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளின் மிகவும் பிரபலமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களுக்கான கையடக்கத் தொலைபேசி விநியோக உரிமையையும், 1950 களில் இருந்து இன்று வரையான உள்ளடக்கங்களையும் அது கொண்டுள்ளது.

கிளசிக்கல் உள்ளடக்கங்கள் முதல் சமீபத்திய உள்ளடக்கங்கள் வரையிலான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களின் உள்ளடக்கங்களை அது வழங்குகிறது. ANDROID, IOS, WEB ஊடாக கிடைக்கும் வகையிலான சுமார் 10,000 இற்கும் அதிக மணித்தியால உள்ளடக்கங்களுடன், பல்வேறு வகை இரசனைகளுடனான உள்ளடக்கங்களை EVOPLAY கொண்டுள்ளது. இவற்றை EVOPLAY.LK இணையதளத்திற்குச் சென்று அல்லது செயலியைப் பதிவிறக்குவதன் மூலம் அணுகலாம். EVOPLAY ஆனது, செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் 2021 இல் APPSTORE மற்றும் PLAY STORE இல், பொழுதுபோக்கிற்கான பிரிவில், மக்கள் மத்தியிலான பிரபலத்தின் அடிப்படையிலான பட்டியலில் 2ஆவது இடத்தில் (#2 TRENDING) வகைப்படுத்தப்பட்ட செயலி எனும் இடத்தை அடைந்துள்ளதன் மூலம், அது ஒரு பாரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

EVOPLAY ஆனது, இலங்கையில் முதன்முறையாக, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் போன்ற உள்ளூர் உயர் ரக உள்ளடக்கங்களின் உரிமையாளர்களுக்கு அவர்களது தயாரிப்பு தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள உள்நாட்டு பார்வையாளர்களை கவரும் வகையிலான இலக்கை அடைய அது உதவுகின்றது. இது விளம்பரம் தொடர்பில் நுகர்வோருக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குகின்றது. EVOKE INTERNATIONAL இன் உத்தியானது, இலங்கை நேயர்களை கவர்வதற்கான ஒரு விளம்பர தளத்தை உருவாக்கி, பாரிய அளவில் சந்தைப்படுத்துபவர்களுக்கு அதில் வாய்ப்பை ஏற்படுத்துவதாகும்.

EVOKE INTERNATIONAL LIMITED இனது பிரதான நோக்கம், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு பெறுமதிசேர் சேவைகளை (VAS) வழங்குவதாகும். கையடக்கத்தொலைபேசி மற்றும் இணைய வழியிலான செயலிகள், WAP தயாரிப்புகள், IVR மற்றும் குரல் சேவைகள், SMSC, உள்ளடக்கத் தொகுப்பு, உள்ளடக்கத் தயாரிப்பு மற்றும் டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட பல்வேறு விதமான புத்தாக்கம் கொண்ட, தரவு சார்ந்த மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகளை அது வழங்குகிறது. இலங்கையில் இதே துறையில் உள்ள போட்டியாளர்கள் மத்தியில் EVOKE உயர்ந்த இடத்தில் உள்ளது. அத்துடன், உள்ளடக்கங்களை சொந்தமாக வைத்திருக்கும் ஒரே நிறுவனமாக EVOKE திகழ்வதுடன், வணிக நிறுவனங்கள் மற்றும் பயனர்களுக்கு அதன் சொந்த தளங்கள் மூலம் குறித்த உள்ளடக்கங்களை வழங்கியும் வருகிறது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *