Huawei ICT போட்டி 2021-2022; உலகளாவிய இறுதிப் போட்டியில் 132 அணிகள் போட்டி

Huawei ICT போட்டி 2021–2022 இன் உலகளாவிய இறுதிப் போட்டிகள் இன்று சீனாவின் ஷென்சென் நகரில் உள்ள Huawei இன் பன்டியன் தளத்தில் (Bantian Base) ஆரம்பமானது. இந்த வருட போட்டி, “இணைப்பு · மகிமை · எதிர்காலம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அமைந்ததோடு, “I.C. எதிர்காலம்” எனும் கோசமானது, 85 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 2,000 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150,000 மாணவர்களை உள்ளடக்கியதாக இருந்தது. அந்தந்த நாடுகளில் மற்றும் பிராந்தியங்களில் போட்டிகளில் வெற்றி பெற்ற 43 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மொத்தம் 132 அணிகள் உலகளாவிய இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

மாணவர்கள் தங்ளுக்கு இடையே போட்டியிடவும் கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கும், அவர்களின் ICT அறிவு மற்றும் நடைமுறை ரீதியான திறன்களை மேம்படுத்துவதற்கும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தளங்களைப் பயன்படுத்தி அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் Huawei வருடாந்தம் ICT போட்டியை நடாத்தி வருகின்றது.

இந்த ஆண்டு Huawei ICT போட்டியின் ஆறாவது வருடாந்த நிகழ்வாகும். இப்போட்டிக்கு பயிற்சி, புத்தாக்கம், தொழில்துறை ஆகிய மூன்று வழித் தடங்கள் உள்ளன, பயிற்சிப் பிரிவு, வலையமைப்பு மற்றும் கிளவுட் என மேலும் இரண்டு துணைத் தடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தடத்தில் மாணவர்களின் ICT அறிவு, அவர்கள் கொண்டுள்ள திறன்கள், குழு ரீதியான பணி ஆகிய அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஒப்பீட்டளவில் புத்தாக்க பாதையானது, AI, IoT, big data, cloud, mobile internet போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, குறிப்பிடத்தக்க சமூக மற்றும் வணிக ரீதியான மதிப்புடனான, மாணவர்கள் உருவாக்கிய தீர்வுகளை கொண்டதாகும். இறுதியாக, இவ்வருடம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்துறை தடம் அமைகின்றது. இது, நிஜ வாழ்க்கையிலான தொழில்துறை சவால்களைத் தீர்க்க மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் ICT மற்றும் தொழில்துறை அறிவைப் பயன்படுத்தி புத்தாக்கமான தீர்வுகள் மூலம் வணிக ரீதியான மதிப்பை வழங்கவும் ஸ்மார்ட் பாதையில் எதிர்நோக்கும் சூழ்நிலைகள் தொடர்பில் கவனம் செலுத்துகிறது. தற்போது நிலவும் கொவிட் தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு உலகளாவிய இறுதிப் போட்டிகள் ஒன்லைனில் இடம்பெறுகிறது. பயிற்சி வழித்தட இறுதிப் போட்டியானது 8 மணி நேர ஆய்வக பரீட்சைகளைக் கொண்டுள்ளதுடன், புத்தாக்கம் மற்றும் தொழில்துறை தடங்களின் இறுதிப் போட்டிகள், பங்கேற்பாளர்களின் குழுக்களின் தீர்வுகள் தொடர்பான காட்சிவிளக்கங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து நடுவர்களிடமிருந்தான கேள்வி பதில்களைக் கொண்டிருக்கும். இதேவேளை இம்முறை, இளம் பெண் தலைவர்களால் வெளிப்படுத்தப்படும் சிறந்த திறமைகளை கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, பெண்கள் தொழில்நுட்ப விருதுகளின் இவ்வருடம் அறிமுகமாகும் புதிய தொடருக்காக பங்கேற்பாளர்கள் முதன்முறை போட்டியிடவுள்ளார்கள்.

புத்தாக்கப் போட்டி மற்றும் உலகளாவிய இறுதிப் போட்டியின் நிறைவு விழா ஆகியன நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளன. இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்வில், Huawei யின் புதிய திறமையாளர்களை வளர்ப்பது தொடர்பான தீர்வான Huawei அகடமி திறமையாளர் பயிற்சித் தளம் (Huawei Academy Talent Training Platform) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா ஆகியன ஜூன் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி பற்றிய மேலதிக தகவல்களுக்கு: https://e.huawei.com/topic/huawei-ict-competition2021-2022-global/en/index.html

–End–

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *